உமரு யராதுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமரு யராதுவா
Umaru Yar'Adua
நைஜீரியாவின் அரசுத்தலைவர்
பதவியில்
29 மே 2007 – 5 மே 2010
Vice Presidentகுட்லக் ஜொனத்தன்
முன்னையவர்ஒலுசேகுன் ஒபசானியோ
பின்னவர்குட்லக் ஜொனத்தன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-08-16)16 ஆகத்து 1951
கட்சினா, நைஜீரியா
இறப்பு5 மே 2010(2010-05-05) (அகவை 58)
தேசியம்நைஜீரியர்
அரசியல் கட்சிமக்களின் மக்களாட்சிக் கட்சி(1998–இன்று)
துணைவர்(s)துரை யராதுவா (1975-2010)
ஹாவுவா உமர் ரடா (1992-1997)
முன்னாள் கல்லூரிபெரெவா கல்லூரி
அகமாது பெல்லோ பல்கலைக்கழகம்

உமரு முசா யராதுவா (Umaru Musa Yar'Adua, 16 ஆகஸ்ட் 1951 – 5 மே 2010),[1][2][3] நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவராக 2007 முதல் 2010 வரை இருந்தவர். இவர் 1999 முதல் 2007 வரை கட்சினா மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் 2007 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, 2007 மே 29 அன்று அரசுத்தலைவரானார். இவர் ஆளும் “மக்களின் மக்களாட்சிக் கட்சியின்” உறுப்பினர் ஆவார்.

அரசுத்தலைவர் யராதுவா சுகவீனம் காரணமாக 2009 நவம்பர் 23 இல் நாட்டி விட்டு வெளியேறி சவுதி அரேபியாவில் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்றார். அன்றில் இருந்து அவர் பொதுவாழ்வில் தோன்றவில்லை. அத்துடன் அவரது வெளியேற்றம் அரசுத்தலைவர் பதவிக்குப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது[4]. 2010 பெப்ரவரி 9 இல் யராதுவா திரும்பி வரும் வரையில், உதவி சனாதிபதி குட்லக் ஜொனத்தன் பதில் அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்[5].

2010 பெப்ரவரி 24 இல் யராதுவா நாடு திரும்பினார். ஆனாலும் அவரது உடல்நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை[6]. 2010 மே 5 இல் யராதுவா இரவு 09:00 மணிக்கு இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. Adetayo, Olalekan; Ebhuomhan, Sebastine (15 August 2008). "Confusion reigns over Yar’Adua’s birthday". The Punch (Lagos) (Punch Nigeria Limited) இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081021144844/http://www.punchontheweb.com/Article-print2.aspx?theartic=Art20080715335140. பார்த்த நாள்: 17 July 2008. 
  2. Ayorinde, Steve (16 July 2008). "The goof about the President's birthday". The Punch (Lagos) (Punch Nigeria Ltd.). http://www.punchng.com/Article-print2.aspx?theartic=Art20080717191290. பார்த்த நாள்: 17 July 2008. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://news.smh.com.au/breaking-news-world/nigerias-president-yaradua-dead-official-20100506-ub9g.html
  4. McConnell, Tristan (7 January 2010), "Prove you are alive: clamour for missing Nigerian leader to show his face", The Times.
  5. "Nigeria's VP takes over from ailing president". Agence France-Presse. February 9, 2010 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 13, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100213084338/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5i8DQENtzQXmEbHeJQbS9ZAlpVg1g. 
  6. "Where is Yar'Adua? Nigerians ask". Radio France Internationale. 25 February 2010. http://www.english.rfi.fr/africa/20100225-where-yaradua-nigerians-ask. 
  7. "Nigerian President Yar'Adua dies, reports say". BBC News Online. 5 May 2010. http://news.bbc.co.uk/2/hi/8663824.stm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமரு_யராதுவா&oldid=3235398" இலிருந்து மீள்விக்கப்பட்டது