ஈரோடு தமிழன்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோடு தமிழன்பன்
பிறப்பு(1933-09-28)28 செப்டம்பர் 1933
சென்னிமலை, ஈரோடு, தமிழ்நாடு இந்தியா
பெற்றோர்செ.இரா.நடராசன்
வள்ளியம்மாள்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது (2004)

ஈரோடு தமிழன்பன் (Erode Tamilanban) ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.[1][2] தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும்,[3] தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் [4] பணியாற்றி உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் வாழ்ந்த செ.இரா.நடராசன்- வள்ளியம்மாள் இணையரின் மகனாக 1933 செப்டம்பர் 28 அன்று பிறந்தார்.[5] இவரது இயற்பெயர் ந.செகதீசன்.

விருதுகள்[தொகு]

வணக்கம் வள்ளுவ என்னும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதை 2004 ஆம் ஆண்டில் பெற்றார்.[6]

  • தமிழக அரசின் கலைமாமணி விருது

வெளியாகியுள்ள நூல்கள்[தொகு]

வெளியான ஆண்டு நூலின் பெயர் வகை பதிப்பகம் குறிப்புகள்
தமிழன்பன் கவிதைகள் கவிதை மரபுக்கவிதைத்தொகுதி
நெஞ்சின் நிழல் புதினம்
1970 சிலிர்ப்புகள் கவிதை பாரி நிலையம் மரபுக்கவிதைத்தொகுதி
தீவுகள் கரையேறுகின்றன கவிதை பூம்புகார் பதிப்பகம்
தோணிகள் வருகின்றன கவிதை
1982 அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் கவிதை பூம்புகார் பதிப்பகம்
காலத்திற்கு ஒரு நாள் முந்தி கவிதை பூம்புகார் பதிப்பகம்
1985 Tamil thahu கவிதை பூம்புகார் பதிப்பகம்
ஊமை வெயில் கவிதை பூம்புகார் பதிப்பகம்
குடை ராட்டினம் பாடல் குழந்தைப்பாடல்கள்
சூரியப் பிறைகள் கவிதை ஹைக்கூ கவிதைகள்
1990 என்னைக்கவர்ந்த பெருமானார் (ஸல்) சொற்பொழிவு இசுலாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை 22.10.89ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் அமைப்பின் வேலூர் கிளையில் ஆற்றிய மிலாடிநபி உரை
1990 கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் கவிதை நர்மதா பதிப்பகம்
1995 என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி கவிதை பாப்லோ பாரதி பதிப்பகம்
1998 நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் கவிதை பூம்புகார் பதிப்பகம்
1999 அணைக்கவா என்ற அமெரிக்கா கவிதை பூம்புகார் பதிப்பகம்
1999 உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்.... வால்ட் விட்மன் கவிதை பாப்லோ பாரதி பதிப்பகம்
2000 பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் கட்டுரைகள் விழிகள் பதிப்பகம்
2000 வணக்கம் வள்ளுவ! கவிதை பூம்புகார் பதிப்பகம் சாகித்ய அகாதமி விருது
2001 கலையா! கைவினையா! கட்டுரைகள் மருதா பதிப்பகம்
2002 சென்னிமலைக் கிளிளோப்பாத்ராக்கள் கவிதை பாப்லோ பாரதி பதிப்பகம்
2002 வார்த்தைகள் கேட்ட வரம் கவிதை விழிகள் பதிப்பகம்
2002 மதிப்பீடுகள் திறனாய்வு மருதா
2003 இவர்களோடும் இவற்றோடும் கவிதை விழிகள் பதிப்பகம்
2004 கனாக்காணும் வினாக்கள் கவிதை விழிகள் பதிப்பகம்
2004 மின்னல் உறங்கும் போது கவிதை ஸ்ரீ துர்க்கா பதிப்பகம்
2005 கதவைத் தட்டிய பழைய காதலி கவிதை விழிகள் பதிப்பகம்
2005 விடியல் விழுதுகள் கவிதை பூம்புகார் பதிப்பகம்
2005 கவின் குறு நூறு கவிதை பாப்லோ பாரதி பதிப்பகம்
2007 பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா கட்டுரை பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம்
2008 இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் ரஹ்மத் அறக்கட்டளை
2008 ஓலைச்சுவடியும் குறுந்தகடும் கவிதை விடிவெள்ளி வெளியீடு
2008 சொல்ல வந்தது.... கவிதை முத்தமிழ்ப் பதிப்பகம்
2008 சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தூரங்கள் என்பன... தமிழன்பன் சிறப்புப் பேட்டி" (in Tamil). Oneindia. 2006 இம் மூலத்தில் இருந்து 24 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724024037/http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/tamilanban.html. பார்த்த நாள்: 27 July 2010. 
  2. Tamil Sahitya Akademi Awards 1955–2007 சாகித்திய அகாதமி Official website.
  3. "Tamil Nadu Iyal Isai Nataka Mandram". தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் 27 July 2010.
  4. [1]
  5. குன்றாத செயலூக்கம். தி இந்து தமிழ் திசை. 2 சனவரி 2017. https://www.hindutamil.in/news/literature/203632-.html. 
  6. "TAMIL". Archived from the original on 2015-09-17. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_தமிழன்பன்&oldid=3747708" இலிருந்து மீள்விக்கப்பட்டது