இராஜ் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தப்பால ராஜகோபால் "ராஜ்" ரெட்டி (Dabbala Rajagopal "Raj" Reddy ) (பிறப்பு 13 ஜூன் 1937) இவர் ஒரு இந்திய-அமெரிக்க கணினி விஞ்ஞானி மற்றும் தூரிங்கு விருதை வென்றவர் ஆவார். செயற்கை நுண்ணறிவின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டான்போர்ட் மற்றும் கார்னகி மெல்லன் பல்கலைக் கழகத்தின் பீடத்தில் பணியாற்றியுள்ளார்.[1] கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவன இயக்குநராக இருந்தார். குறைந்த வருமானம், திறமையான, கிராமப்புற இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தியாவில் ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க உதவுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். ஐதராபாத்தின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றியதற்காக 1994 ஆம் ஆண்டில் கணினி அறிவியலில் மிக உயர்ந்த விருதான ஏசிஎம் தூரிங்கு விருதைப் பெற்ற ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் இவராவார்.

இராஜ் ரெட்டி

வாழ்க்கை[தொகு]

இராஜ் ரெட்டி பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகணத்தில் சித்தூர் மாவட்டம் காட்டூரில் பிறந்தார். இவரது தந்தை சீனிவாசுலு ரெட்டி ஒரு விவசாயி, இவரது தாயார் பிட்சம்மா ஒரு இல்லத்தரசியாவார். இவர் தனது குடும்பத்தில் கல்லூரியில் சேர்ந்த முதல் உறுப்பினராக இருந்தார். கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் (இப்போது அண்ணா பல்கலைக்கழகம், சென்னை), 1958 இல் இணைந்தார்.[3] 1960 இல், ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பட்டம் பெற்றார். இவர் பி.எச்.டியும் முடித்தார். 1966 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார்.[4]

தொழில்[தொகு]

ரெட்டி கணினி அறிவியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராகவும், கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியில் மொசா பிண்ட் நாசர் தலைவராகவும் உள்ளார். 1960 முதல், ஆஸ்திரேலியாவில் ஐ.பி.எம் நிறுவனத்திலும் பணியாற்றினார். இவர் 1966 முதல் 1969 வரை இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் உதவி பேராசிரியராக இருந்தார்.[5] இவர் 1969 இல் கணினி அறிவியலின் இணை பேராசிரியராக கார்னிகி மெல்லன் பலகலைக் கழத்தின் பீடத்தில் சேர்ந்தார். இவர் 1973 இல் முழு பேராசிரியராகவும், 1984 இல் பல்கலைக்கழக பேராசிரியராகவும் ஆனார்.[6]

1979 [7] முதல் 1991 வரை ரோபோடிக்ஸ் தொழில் நிறுவனம் [8][9] மற்றும் 1991 முதல் 1999 வரை கணினி அறிவியல் பள்ளியின் தலைவர் ஆவார். ஐதராபாத் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆளும் குழுவின் தலைவராக உள்ளார் .[10]

ரெட்டி 1999 முதல் 2001 வரை குடியரசுத்தலைவரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக இருந்தார்[11][12] இவர் செயற்கை நுண்ணறிவுக்கான அமெரிக்க சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். 1987 முதல் 1989 வரை அதன் தலைவராக இருந்தார். இஸ்ரேலில் அமைதிக்கான பெரெஸ் மையத்தின் சர்வதேச ஆளுநர் குழுவில் பணியாற்றினார். அவர் அவசரநிலை மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்[13] மற்றும் சுகாதார மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் [14] ஆகியவற்றின் ஆளும் குழுக்களின் உறுப்பினராக பணியாற்றினார். இது இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கு செலவு குறைந்த சுகாதார பாதுகாப்பு வழங்க தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட தீர்வுகளைப் பயன்படுத்துகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "CMU's Raj Reddy fills lives with big questions". Pittsburgh Post-Gazette. 15 June 1998. http://www.post-gazette.com/businessnews/19980615braj1.asp. பார்த்த நாள்: 2 August 2011. 
  2. Vidya Raja (31 July 2018). "India's Oldest Engineering College Turns 225: 6 Alumni Who Have Made Guindy Proud!". The Better India.
  3. "CMU-Software Engineering-Faculty-Raj Reddy". Carnegie Mellon. Archived from the original on 13 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 18 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Krause, Alex. "Raj Reddy". The Robotics Institute Carnegie Mellon University (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-28.
  5. "Stanford Faculty List". Stanford. Archived from the original on 2021-01-30. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  6. "CS50: FIFTY YEARS OF COMPUTER SCIENCE". Carnegie Mellon. Archived from the original on 15 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2 August 2011.
  7. "Robotics Institute Founders". Carnegie Mellon University Article Dec. 2004, Vol. 1, No. 4. Archived from the original on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
  8. "History of the Robotics Institute". Robotics Institute, Carnegie Mellon. Archived from the original on 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 2 August 2011.
  9. "Raj Reddy". rr.cs.cmu.edu. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
  10. "Governing Council of International Institute of Information Technology". IIIT. பார்க்கப்பட்ட நாள் 2 August 2011.
  11. "Draft Minutes of PITAC". Networking and Information Technology Research and Development (NITRD). Archived from the original on 5 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 September 2011.
  12. "Former PITAC Members (1997–2001)". Networking and Information Technology Research and Development (NITRD). Archived from the original on 21 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Emergency Management and Research Institute - GVK EMRI". www.emri.in.
  14. http://www.hmri.in/gov-brd.aspx பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்_ரெட்டி&oldid=3927802" இலிருந்து மீள்விக்கப்பட்டது