2019 இந்தியப் பொதுத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியப் பொதுத் தேர்தல், 2019 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியப் பொதுத் தேர்தல், 2019

← 2014 11 ஏப்ரல் – 19 மே 2019 2024 →

மக்களவையின் 545 தொகுதிகளில் 543
272 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
Opinion polls
பதிவு செய்தோர்911,950,734
வாக்களித்தோர்67.40% 0.96pp
  First party Second party
 
தலைவர் நரேந்திர மோதி ராகுல் காந்தி
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தேசகூ ஐமுகூ
தலைவரான
ஆண்டு
13 செப்டம்பர் 2013 11 திசம்பர் 2017
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
வாரணாசி அமெதி (தோல்வி)
வயநாடு
முந்தைய
தேர்தல்
282, 31.34% (பாஜக)
336, 38.5% (தேசகூ)
44, 19.52% (காங்)
60, 23% (ஐமுகூ)
வென்ற
தொகுதிகள்
303 (பாஜக்)
352 (தேசகூ)
52 (காங்)
91 (ஐமுகூ)
மாற்றம் 21 (பாஜக)
16 (தேசகூ)
8 (காங்)
31 (ஐமுகூ)
விழுக்காடு 37.43% (பாஜக)
45% (தேசகூ)
19.51% (காங்)
26% (ஐமுகூ)
மாற்றம் 6.09% (பாஜக)
6.5% (தேசகூ)
0.01% (காங்)
3% (ஐமுகூ)

கட்சிகள் வாரியாகத் தேர்தல் முடிவுகள்

முந்தைய பிரதமர்

நரேந்திர மோதி
பா.ஜ.க

பிரதமராகத் தெரிவு

நரேந்திர மோதி
பா.ஜ.க

2019 இந்தியப் பொதுத் தேர்தல் (2019 Indian general election) பதினேழாவது மக்களவைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 2019 ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடத்தப்பட்டது. மே 23 இல் வாக்குகள் எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[1][2][3][4] ஏறத்தாழ 900 மில்லியன் இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இத்தேர்தலில் 67% இற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இத்தேர்தலிலேயே இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமானோர் வாக்களித்தனர்.[5] அத்துடன் மிக அதிகமான பெண்கள் இத்தேர்தலிலேயே வாக்களித்திருந்தனர்.[6][குறிப்பு 1]

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் முடிவுகளின் படி, மொத்தமாக தேர்தல்கள் நடந்த 542 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது.[8] பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[9] அதேவேளையில், இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) 52 இடங்களையும், காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 87 இடங்களைக் கைப்பற்றியது. ஏனைய கட்சிகள் 103 இடங்களைக் கைப்பற்றின. மக்களவையில் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இருப்பதற்கு ஒரு கட்சி குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும், அல்லது நடப்பு நாடாளுமன்றத்தில் குறைந்தது 55 இடங்களைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இரண்டாவது அதிகப்படியான இடங்களை (52) கைப்பற்றிய இந்திய தேசிய காங்கிரசு கட்சி இரண்டாவது தடவையாக அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி என்ற நிலையைப் பெறத் தவறியது. இதனால், இந்தியாவில் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி இம்முறையும் இடம்பெறமாட்டாது.[10][11][12]

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களும் இப்பொதுத் தேர்தல்களுடன் இணைந்து நடத்தப்பட்டன.[13][14]

தேர்தல் முறைமை[தொகு]

543 மக்களவை உறுப்பினர்கள் ஒரு-உறுப்பினர் கொண்ட தனித் தனித் தொகுதிகளில் இருந்து அதிகப்படியான வாக்குகளைப் பெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆங்கிலோ இந்திய சமூகத்தில் இருந்து தகுந்தளவு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என இந்தியக் குடியரசுத் தலைவர் கருதும் பொருட்டு, அவர் மேலதிகமாக இரண்டு உறுப்பினர்களை அச்சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுத்து நியமிக்கலாம்.[15] 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கும் தகுதி பெறுவர். வாக்களிக்கத் தகுதியானவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.[16]

இந்திய அரசியலமைப்பின் படி, மக்களவைக்கான தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் முன்கூட்டியே கலைக்கும் போது நடைபெறுகின்றன.[17] 2019 மார்ச் 10 இல் பதினேழாவது மக்களவைக்கான தேர்தல்கள் பற்றிய அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் 2019 மார்ச் 10 இல் அறிவித்தது. அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தைக் கோட்பாடு விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன.[18]

தேர்தல் அட்டவணை[தொகு]

Election Dates of Indian General Election, 2019
தேர்தல் அட்டவணை

2019 மார்ச் 10 ஆம் நாள் 7-கட்டத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.[19] வாக்குகள் 2019 மே 23 இல் எண்ணப்பட்டன. பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஏழு கட்டங்களிலும் தேர்தல்கள் நடைபெற்றன. சம்மு காசுமீர் மாநிலத்தின் அனந்த்நாக் தொகுதியில் தேர்தல் வன்முறைகள் காரணமாக மூன்று கட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.[20]

கட்டம் தேதி மக்களவை தொகுதிகள் தொகுதிகள் எண்ணிக்கை மாநிலங்கள்\ஒன்றியப் பகுதிகள்
1 11 ஏப்பிரல் 91 20 ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சம்மு & காசுமீர், சட்டிசுகர், மகாராட்டிரம், மிசோரம், மணிப்பூர், மேகாலையா, நாகாலாந்து, ஒடியா, சிக்கிம், தெலுங்கானா, திரிப்புரா, உத்திரப் பிரதேசம், உத்திராகண்டம், மேற்கு வங்காளம், அந்தமான் & நிக்கோபர் தீவுகள், இலட்சத்தீவு
2 18 ஏப்பிரல் 97 13 அசாம், பீகார், சம்மு & காசுமீர், சட்டிசுகர், மகாராட்டிரம், கருநாடகா, மணிப்பூர், ஒடியா, தமிழ் நாடு, திரிப்புரா, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், புதுச்சேரி
3 23 ஏப்பிரல் 116 1/3 14 அசாம், பீகார், சம்மு & காசுமீர், சட்டிசுகர், குசராத், கோவா, சம்மு & காசுமீர், கருநாடகா, கேரளா, மகாராட்டிரம், ஒடியா, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தாத்ரா நகர் , டாமன் டயு
4 29 ஏப்பிரல் 71 1/3 9 பீகார், சம்மு & காசுமீர், சார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஒடியா, இராச்சசுத்தான், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம்
5 6 மே 50 1/3 7 பீகார், சம்மு & காசுமீர், சார்கண்ட், மத்தியப் பிரதேசம், இராச்சசுத்தான், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம்
6 12 மே 59 7 பீகார், அரியானா, சார்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி
7 19 மே 59 8 பீகார், இமாச்சலப் பிரதேசம், சார்கண்ட், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், சட்டிசுகர், உத்திரப் பிரதேசம்
கட்டம்-வாரியாக ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல் தொகுதிகள்
மாநிலம்/ஒன்றியம் மொத்தத்

தொகுதிகள்

தேர்தல் தேதிகளும் தொகுதிகளின் எண்ணிக்கையும்
கட்டம் 1 கட்டம் 2 கட்டம் 3 கட்டம் 4 கட்டம் 5 கட்டம் 6 கட்டம் 7
11 ஏப்ரல் 18 ஏப்ரல் 23 ஏப்ரல் 29 ஏப்ரல் 6 ஏப்ரல் 12 ஏப்ரல் 19 ஏப்ரல்
ஆந்திரப் பிரதேசம் 25 25
அருணாசலப் பிரதேசம் 2 2
அசாம் 14 5 5 4
பீகார் 40 4 5 5 5 5 8 8
சத்தீசுகர் 11 1 3 7
கோவா (மாநிலம்) 2 2
குசராத்து 26 26
அரியானா 10 10
இமாச்சலப் பிரதேசம் 4 4
சம்மு காசுமீர் 6 2 2 13[n 1] 13[n 1] 113[n 1]
சார்க்கண்ட் 14 3 4 4 3
கருநாடகம் 28 14 14
கேரளம் 20 20
மத்தியப் பிரதேசம் 29 6 7 8 8
மகாராட்டிரம் 48 7 10 14 17
மணிப்பூர் 2 1 1
மேகாலயா 2 2
மிசோரம் 1 1
நாகாலாந்து 1 1
ஒடிசா 21 4 5 6 6
பஞ்சாப் பகுதி 13 13
ராஜஸ்தான் 25 13 12
சிக்கிம் 1 1
தமிழ்நாடு 39 38[n 2]
தெலங்காணா 17 17
திரிபுரா 2 1 1
உத்தரப் பிரதேசம் 80 8 8 10 13 14 14 13
உத்தராகண்டம் 5 5
மேற்கு வங்காளம் 42 2 3 5 8 7 8 9
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 1
சண்டிகர் 1 1
தாத்ரா, நகர் அவேலி 1 1
தமன் தியூ 1 1
தில்லி 7 7
இலட்சத்தீவு 1 1
புதுச்சேரி 1 1
தொகுதிகள் 543 91 95 11613 7113 5013 59 59
கட்ட முடிவில் மொத்தத் தொகுதிகள் 91 186 30213 37323 424 483 542[n 2]
கட்ட முடிவில் முடிவான சதவீதம் 17% 34% 56% 69% 78% 89% 100%
  1. 1.0 1.1 1.2 அனந்தநாக் தொகுதியில் மூன்று நாட்களாகத் தேர்தல்கள் நடைபெற்றன.
  2. 2.0 2.1 வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை (கீழே பார்க்க).

மறு வாக்குப்பதிவு[தொகு]

  • வேலூர், தமிழ்நாடு: வேலூரில் 11 கோடி (US$1.4 மில்லியன்) பணம் திமுக தலைவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்குக் கையூட்டுத் தருவதற்காக இவை வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.[21] திரட்டப்பட்ட ஆதாரங்களின் படி, இந்தியத் தேர்தல் ஆணையம் ஏப்ரல் 18 தேர்தலை வேலூர் தொகுதியில் இடைநிறுத்தியது. திமுக தலைவர்கள் இக்குற்றச்சாட்டை மறுத்து, இதனை ஓர் அரசியல் சதி எனக் குற்றஞ்சாட்டியது.[22]
  • கிழக்கு திருபுரா, திரிபுரா: சட்டம் ஒழுங்கு சர்ச்சை காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தேர்தல் தொகுதியில் தேர்தலை ஏப்ரல் 18 இலிருந்து ஏப்ரல் 23 இற்குத் தள்ளிப் போட்டது.[23]

அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும்[தொகு]

இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள்

50 இற்கும் மேற்பட்ட கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட்டன. இவைகளில் பெரும்பாலானவை பிராந்தியக் கட்சிகளாகும். போட்டியிட்ட முக்கிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) ஆகியவையாகும். 1984 முதல் 2009 வரை எந்தக் கட்சியும் மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. இதனால் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது இந்தியாவில் வழமையானது. 2019 தேர்தலில், நான்கு தேர்தலுக்கு-முந்தைய முக்கிய கூட்டணிகள் அமைக்கப்பட்டன. இவை பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜகூ), காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மகாகத்பந்தன் என அழைக்கப்படும் பெரும் கூட்டணி, இடது முன்னணி ஆகியனவாகும். 2019 தேர்தலில் முதல் தடவையாக காங்கிரசு (421) கட்சியைவிட பாஜக (437) அதிக தொகுதிகளில் போட்டியிட்டது.[24][25]

காங்கிரசு கட்சி பாஜக உடன் நேரடியாக மோதக்கூடிய மாநிலங்களில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டது. அவை: இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டம், ராஜஸ்தான், குசராத்து, மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் ஆகியவையாகும். சம்மு காசுமீர், பீகார், தமிழ்நாடு, மகாராட்டிரம், கருநாடகம், சார்க்கண்ட், கேரளம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசு மாநிலக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தில்லி, பஞ்சாப், அரியானா, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியவில்லை.[26]

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குமாரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 76 தொகுதிகளுக்கு போட்டுயிட மகாகத்பந்தன் என்ற கூட்டணியை 2019 சனவரியில் அறிவித்தார்கள். அமேதி, ராய் பரேலி ஆகிய தொகுதிகளை காங்கிரசுக்கும், மேலும் இரண்டு தொகுதிகளை வேறு கட்சிகளுக்கும் போட்டியிடாமல் விட்டுக் கொடுத்தார்கள். இக்கூட்டணியில் காங்கிரசு இடம்பெறவில்லை.[27]

தேசியக் கூட்டணிகள்[தொகு]

2019 தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள்/கூட்டணிகள்
கட்சி மாநிலம்/ஒன்றியம் தொகுதிகள் கூட்டணி
போட்டியிட்டவை வெற்றி
பாரதிய ஜனதா கட்சி ஆந்திரப் பிரதேசம் 25 437 0 தேசிய ஜனநாயகக் கூட்டணி
அருணாசலப் பிரதேசம் 2 2
அசாம் 10 9
பீகார் 17 17
சத்தீசுகர் 11 9
கோவா (மாநிலம்) 2 1
குசராத்து 26 26
அரியானா 10 10
இமாச்சலப் பிரதேசம் 4 4
சம்மு காசுமீர்[28] 6 3
சார்க்கண்ட் 13 11
கருநாடகம் 27 25
கேரளம் 15 0
மத்தியப் பிரதேசம் 29 28
மகாராட்டிரம் 25 23
மணிப்பூர் 2 1
மேகாலயா 2 0
மிசோரம்[29] 1 0
ஒடிசா 21 8
பஞ்சாப் பகுதி 3 2
ராஜஸ்தான் 24 24
சிக்கிம் 1 0
தமிழ்நாடு 5 0
தெலங்காணா 17 4
திரிபுரா 2 2
உத்தரப் பிரதேசம் 78 62
உத்தராகண்டம் 5 5
மேற்கு வங்காளம் 42 18
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 0
சண்டிகர் 1 1
தாத்ரா மற்றும் நகர் அவேலி 1 0
தமனும் தியூவும் 1 1
தில்லி 7 7
இலட்சத்தீவுகள் 1 0
சிவ சேனா[30] மகாராட்டிரம் 23 18
அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்[31] தமிழ்நாடு 20 1
ஐக்கிய ஜனதா தளம்[32] பீகார் 17 16
அகாலி தளம்[33] பஞ்சாப் பகுதி 10 2
பாட்டாளி மக்கள் கட்சி[31] தமிழ்நாடு 7 0
லோக் ஜனசக்தி கட்சி[32] பீகார் 6 6
பாரத தர்ம ஜன சேனா கேரளம் 4 0
தேசிய முற்போக்கு திராவிட கழகம்[34] தமிழ்நாடு 4 0
அசாம் கண பரிசத் அசாம் 3 0
அப்னா தளம் (சோனேலால்) உத்தரப் பிரதேசம் 2 2
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம்[35] சார்க்கண்ட் 1 1
புதிய தமிழகம் கட்சி[36] தமிழ்நாடு 1 0
தமிழ் மாநில காங்கிரசு தமிழ்நாடு 1 0
புதிய நீதிக் கட்சி[37] தமிழ்நாடு 1 0
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்[38] புதுச்சேரி 1 0
போடோலாந்து மக்கள் முன்னணி[39] அசாம் 1 0
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி நாகாலாந்து 1 1
கேரள காங்கிரசு (தாமசு)[40] கேரளம் 1 0
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி ராஜஸ்தான் 1 1
சுமலதா (சுயேச்சை
மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவில்)
கருநாடகம் 1 1
இந்திய தேசிய காங்கிரசு ஆந்திரப் பிரதேசம் 25 421 0 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ)'
அருணாசலப் பிரதேசம் 2 0
அசாம் 14 3
பீகார் 9 1
சத்தீசுகர் 11 2
கோவா (மாநிலம்) 2 1
குசராத்து 26 0
அரியானா 10 0
இமாச்சலப் பிரதேசம் 4 0
சம்மு காசுமீர் 5 0
சார்க்கண்ட் 7 1
கருநாடகம் 21 1
கேரளம் 16 15
மத்தியப் பிரதேசம் 29 1
மகாராட்டிரம்[41] 24 1
மணிப்பூர் 2 0
மேகாலயா 2 1
நாகாலாந்து 1 0
ஒடிசா 18 1
பஞ்சாப் பகுதி 13 8
ராஜஸ்தான் 25 0
சிக்கிம் 1 0
தமிழ்நாடு 9 8
தெலங்காணா 17 3
திரிபுரா 2 0
உத்தரப் பிரதேசம்[42] 67 1
உத்தராகண்டம் 5 0
மேற்கு வங்காளம் 40 2
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 1
சண்டிகர் 1 0
தாத்ரா மற்றும் நகர் அவேலி 1 0
தமனும் தியூவும் 1 0
தில்லி 7 0
இலட்சத்தீவுகள் 1 0
புதுச்சேரி 1 1
திராவிட முன்னேற்றக் கழகம்[43] தமிழ்நாடு 23 23
தேசியவாத காங்கிரசு கட்சி[41] மகாராட்டிரம் 20 4
இராச்டிரிய ஜனதா தளம் பீகார் 19 20 0
சார்க்கண்ட் 1 0
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)[44] கருநாடகம் 7 1
ராசுத்திரிய லோக் சம்தா கட்சி பீகார் 5 0
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா[45] சார்க்கண்ட் 4 5 1
ஒடிசா 1 0
ஜான் அதிகார் கட்சி[42] உத்தரப் பிரதேசம் 3 0
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[43][46] ஒடிசா 1 3 0
தமிழ்நாடு 2 2
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[43] ஒடிசா 1 3 0
தமிழ்நாடு 2 2
இந்துசுத்தானி அவாம் மோர்ச்சா பீகார் 3 0
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்[43] கேரளம் 2 3 2
தமிழ்நாடு 1 1
விக்காசீல் இன்சான் கட்சி பீகார் 3 0
சார்க்கண்டு விகாசு மோர்சா[45] சார்க்கண்ட் 2 0
சுவாபிமானி பாக்சா[41] மகாராட்டிரம் 2 0
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி[43] தமிழ்நாடு 2 1
பகுஜன் விகாசு அகாதி[41] மகாராட்டிரம் 1 0
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மா-லெ) விடுதலை பீகார் 1 0
இந்திய ஜனநாயகக் கட்சி[43] தமிழ்நாடு 1 0
கேரள காங்கிரசு (எம்) கேரளம் 1 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி[43] தமிழ்நாடு 1 0
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்[43] தமிழ்நாடு 1 0
புரட்சிகர சோஷலிசக் கட்சி[47] கேரளம் 1 1
யுவ சுவாபிமான் கட்சி[41] மகாராட்டிரம் 1 0
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
(சிறீநகர் தொகுதியில் காங்கிரசு ஆதவில்)
சம்மு காசுமீர் 1 1
லால்ங்கிங்லோவா உமார் (சுயேச்சை
(மிசோரமில் காங்கிரசு ஆதரவில்)
மிசோரம் 1 0
சுரேந்திர குமார் குப்தா (சுயேச்சை
(பிலிபித் தொகுதியில் காங்கிரசு ஆதரவில்)
உத்தரப் பிரதேசம் 1 0
பகுஜன் சமாஜ் கட்சி[48] ஆந்திரப் பிரதேசம் 3 291 0 மகாகத்பந்தன்

(பெருங் கூட்டணி)

பீகார் 40 0
சத்தீசுகர் 11 0
குசராத்து 26 0
அரியானா 8 0
சம்மு காசுமீர் 2 0
சார்க்கண்ட் 14 0
கருநாடகம் 28 0
மத்தியப் பிரதேசம் 26 0
மகாராட்டிரம் 44 0
ஒடிசா 14 0
பஞ்சாப் பகுதி 3 0
ராஜஸ்தான் 25 0
தெலங்காணா 5 0
உத்தரப் பிரதேசம் 38 10
உத்தராகண்டம் 4 0
சமாஜ்வாதி கட்சி[27] மத்தியப் பிரதேசம் 2 43 0
மகாராட்டிரம் 4 0
உத்தரப் பிரதேசம் 37 5
ராசுத்திரிய லோக் தள் உத்தரப் பிரதேசம் 3 0
கோந்துவானா கனதந்திரக் கட்சி[49] மத்தியப் பிரதேசம் 1 0
லோக்தந்திர சுரக்சா கட்சி[50] அரியானா 2 0
பஞ்சாபி எக்த கட்சி[51] பஞ்சாப் பகுதி 3 0
லோக் இன்சாப் கட்சி[51] பஞ்சாப் 3 0
பஞ்சாப் முன்னணி[51] பஞ்சாப் பகுதி 1 0
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[51] ஆந்திரப் பிரதேசம் 2 4 0
பஞ்சாப் பகுதி 2 0
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆந்திரப் பிரதேசம் 2 0
புரட்சிகர மார்க்சியக் கட்சி[51] பஞ்சாப் பகுதி 1 0
ஜன சேனா கட்சி[52] ஆந்திரப் பிரதேசம் 18 23 0
தெலங்காணா 5 0
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[53] அசாம் 2 65 0 இடது முன்னணி
பீகார் 1 0
அரியானா 1 0
இமாச்சலப் பிரதேசம் 1 0
சார்க்கண்ட் 1 0
கருநாடகம் 1 0
கேரளம் 16 1
இலட்சத்தீவுகள் 1 0
மத்தியப் பிரதேசம் 1 0
மகாராட்டிரம் 1 0
ஒடிசா 1 0
தெலங்காணா 2 0
திரிபுரா 2 0
உத்தராகண்டம் 1 0
மேற்கு வங்காளம் 33 0
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பீகார் 1 9 0
சார்க்கண்ட் 1 0
கேரளம் 4 0
மேற்கு வங்காளம் 3 0
புரட்சிகர சோஷலிசக் கட்சி மேற்கு வங்காளம் 3 0
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு ஆந்திரப் பிரதேசம் 1 5 0
அருணாசலப் பிரதேசம் 1 0
மேற்கு வங்காளம் 3 0
தெலுங்கு தேசம் கட்சி ஆந்திரப் பிரதேசம் 25 3 ஏனைய கட்சிகள்
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திரப் பிரதேசம் 25 22
பரிபா பகுஜன் மகாங்கம் மகாராட்டிரம் TBA
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் புதுச்சேரி 1 39 0
தமிழ்நாடு 38 0
மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி 1 38 0
தமிழ்நாடு 37 0
பிஜு ஜனதா தளம் ஒடிசா 21 12
தெலுங்கானா இராட்டிர சமிதி தெலங்காணா 16 9
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி தமிழ்நாடு 1 0
ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் மகாராட்டிரம் 1 2 1
தெலங்காணா 1 1
நாம் தமிழர் கட்சி புதுச்சேரி 1 39 0
தமிழ்நாடு 38 0
ஆம் ஆத்மி கட்சி[54] பீகார் 3 33 0
சண்டிகர் 1 0
தில்லி 7 0
கோவா (மாநிலம்) 2 0
அரியானா 3 0
பஞ்சாப் பகுதி 13 1
உத்தரப் பிரதேசம் 4 0
பிரகதிசீல் சமாஜ்வாதி கட்சி பீகார் 3 96 0
சத்தீசுகர் 1 0
தில்லி 2 0
அரியானா 1 0
சம்மு காசுமீர் 1 0
கருநாடகம் 2 0
மத்தியப் பிரதேசம் 2 0
ஒடிசா 2 0
தமிழ்நாடு 2 0
உத்தரப் பிரதேசம் 79 0
உத்தராகண்டம் 1 0
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி சம்மு காசுமீர் 4 0
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சம்மு காசுமீர் 4 3
தேசிய மக்கள் கட்சி அருணாசலப் பிரதேசம் TBA TBA
அசாம் 5 0
மணிப்பூர் 1 0
மேகாலயா 1 1
மிசோரம் 1 0
ஜனநாயக் ஜனதா கட்சி அரியானா 7 0
உத்தரகாண்ட கிரந்தி தள் உத்தராகண்டம் 4 0
கம்யூனிஸ்டுக் கட்சி (மா-லெ) விடுதலை ஆந்திரப் பிரதேசம் 2 9 0
பீகார் 4 0
சார்க்கண்ட் 2 0
உத்தராகண்டம் 1 0
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மா-லெ) செந்நட்சத்திரம் ஆந்திரப் பிரதேசம் 1 3 0
சத்தீசுகர் 1 0
சார்க்கண்ட் 1 0
இந்திய சோசலிச ஒன்றிய மையம் (கம்யூனிஸ்டு) பீகார் 2 5 0
சத்தீசுகர் 2 0
உத்தராகண்டம் 1 0
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அசாம் 8 72 0
பீகார் 2 0
சார்க்கண்ட் 3 0
ஒடிசா 10 0
தமிழ்நாடு 7 0
மேற்கு வங்காளம் 42 22
இந்திய காந்தியக் கட்சி பீகார் 2 66 0
சார்க்கண்ட் 3 0
ஒடிசா 10 0
தமிழ்நாடு 7 0
உத்தரப் பிரதேசம் 2 0
மேற்கு வங்காளம் 42 0
சுயேச்சை (அரசியல்) ஆந்திரப் பிரதேசம் TBA TBA None
அருணாசலப் பிரதேசம் TBA
அசாம் TBA
பீகார் TBA
சத்தீசுகர் TBA
கோவா (மாநிலம்) TBA
குசராத்து TBA
அரியானா TBA
இமாச்சலப் பிரதேசம் TBA
சம்மு காசுமீர் TBA
சார்க்கண்ட் TBA
கருநாடகம் TBA
கேரளம் TBA
மத்தியப் பிரதேசம் TBA
மகாராட்டிரம் TBA
மணிப்பூர் TBA
மேகாலயா TBA
மிசோரம் TBA
நாகாலாந்து TBA
ஒடிசா TBA
பஞ்சாப் TBA
ராஜஸ்தான் TBA
சிக்கிம் TBA
தமிழ்நாடு TBA
தெலங்காணா TBA
திரிபுரா TBA
உத்தரப் பிரதேசம் TBA
உத்தராகண்டம் TBA
மேற்கு வங்காளம் TBA
அந்தமான் நிக்கோபார் தீவுகள் TBA
சண்டிகர் TBA
தாத்ரா மற்றும் நகர் அவேலி TBA
தமனும் தியூவும் TBA
தில்லி TBA
இலட்சத்தீவுகள் TBA
புதுச்சேரி TBA

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2019[தொகு]

திமுக கூட்டணியில் காங்கிரசு (புதுச்சேரி உட்பட) 10 தொகுதிகளிலும், மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தலா இரண்டு தொகுதிகளிலும் மதிமுக, கொங்கு தேசிய முன்னேற்றக் கட்சி, இந்திய யூனியன் முசுலிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிட்டன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக திமுக மொத்தம் இருபது இடங்களில் போட்டியிட்டது.

அதிமுக கூட்டணியில் பாமக ஏழு தொகுதிகளிலும், பாஜக ஐந்து தொகுதிகளிலும் தேமுதிக நான்கு தொகுதிகளிலும் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாகா ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. புதுச்சேரியில் என். ஆர். காங்கிரசு போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக அதிமுக மொத்தம் இருபது இடங்களில் போட்டியிட்டது.

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டன.

அமமுக கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

தமிழ்நாட்டில் கூட்டணிகள்[தொகு]

தேசிய ஜனநாயகக் கூட்டணி[தொகு]

கட்சிகள் போட்டியிடும் மாநிலங்கள்/ஒன்றியப் பகுதிகள் இடங்கள்
போட்டி வெற்றி
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு 20 1
பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு 7 0
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு 5 0
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தமிழ்நாடு 4 0
புதிய தமிழகம் தமிழ்நாடு 1 0
தமிழ் மாநில காங்கிரஸ் தமிழ்நாடு 1 0
புதிய நீதிக் கட்சி தமிழ்நாடு 1 0
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் புதுவை 1 0
தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 1

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி[தொகு]

கட்சிகள் போட்டியிடும் மாநிலங்கள்/ஒன்றியப் பகுதிகள் இடங்கள்
போட்டி வெற்றி
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு 20 19
இந்திய தேசியக் காங்கிரசு தமிழ்நாடு 9 10 8
புதுச்சேரி 1 1
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தமிழ்நாடு 2 2
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு 2 2
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு 2 2
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் தமிழ்நாடு 1 1
இந்திய ஜனநாயகக் கட்சி தமிழ்நாடு 1 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தமிழ்நாடு 1 1
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு 1 1
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 38

கேரளா[தொகு]

கேரளாவில் பாசக 12.93% வாக்குகளும் காங்கிரசு 37.27% வாக்குகளும் இந்திய பொதுவுடமை கட்சி 6.05% வாக்குகளும் மார்க்சிய பொதுவுடமை கட்சி 25.83% வாக்குகளும் இந்திய யூனியன் முசுலிம் லீக் 5.45% வாக்குகளும் பெற்றனர்.

காங்கிரசு 15 தொகுதிகளிலும், மார்க்சிய பொதுவுடமை கட்சி ஓர் தொகுதியிலும் இந்திய யூனியன் முசுலிம் லீக் இரு தொகுதிகளிலும் கேரளா காங்கிரசு (மணி) ஓர் தொகுதியிலும் புரட்சிகர சோசலிசுடு கட்சி ஓர் தொகுதியிலும் வென்றனர்.

திருவனந்தபுரத்தில் காங்கிரசின் சசி தரூர் வென்றார், பாசக இரண்டாவதாக வந்தது.

தெலுங்கானா[தொகு]

தெலுங்கானாவில் பாசக 19.45% வாக்குகளும் காங்கிரசு 29.48% வாக்குகளும் தெலுங்கானா ராசுட்டிரிய சமிதி 41.29% வாக்குகளும் மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (மஜ்லிஸ்) 2.78% வாக்குகளும் பெற்றனர்.

ஐதராபாத்தில் மஜ்லிஸ் கட்சி வென்றது. அடிலாபாத்திலும் கரீம்நகரிலும் நிசாமாபாத்திலும் செகந்திராபாத்திலும் பாசக வென்றது. நிசாபாத்தில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா தோற்றார். நல்கொண்டாவிலும் போங்கிரிலும் மல்கஜ்கிரியிலும் காங்கிரசு வென்றது. தெலுங்கானா இராட்டிர சமிதி ஒன்பது தொகுதிகளில் வென்றது.

ஆந்திர பிரதேசம்[தொகு]

ஆந்திர பிரதேசத்தில் பாசக 0.96% வாக்குகளும் காங்கிரசு 1.29% வாக்குகளும் தெலுங்கு தேசம் 39.59% வாக்குகளும் ஒய் எசு ஆர் காங்கிரசு 49.15% வாக்குகளும் பெற்றனர்.

தெலுங்கு தேசம் மூன்று தொகுதிகளிலும் ஒய் எசு ஆர் காங்கிரசு 22 தொகுதிகளிலும் வென்றனர்.

கருநாடகம்[தொகு]

காங்கிரசு பெங்களூர் புறநகரிலும் ஜனதாதளத்தின் பிராஜ்வால் ரேவண்ணா ஸாசனிலும் கட்சிசாரா சுமலதா ஆம்பரீசு மாண்டியாவிலும் வென்றனர். நிகில் குமாரசாமி மாண்டியாவில் சுமலதாவிடம் தோற்றார். நிகில் குமாரசாமி தேவகவுடாவின் பேரன் முதல்வர் குமாரசாமியின் மகன். பிராஜ்வால் ரேவண்ணாவும் தேவகவுடாவின் பேரன் (குமாரசாமியின் அண்ணன் மகன்).

மகாராட்டிரா[தொகு]

கட்சி வாக்கு விழுக்காடு
மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (மஜ்லிஸ் ) 0.72
தேசியவாத காங்கிரசு 15.52
காங்கிரசு 16.27
இந்திய பொதுவுடைமை 0.07
இந்திய பொதுவுடைமை (மார்க்சியம்) 0.2
பாசக 27.59
சிவசேனா 23.29

ஔரங்காபாத்தில் மஜ்லிஸ் கட்சி வென்றது, பாராமதியிலும் சாடராவிலும் சிரூரிலும் ராஜ்காட்டிலும் தேசியவாத காங்கிரசும் சந்திரபூரில் காங்கிரசும் வென்றன. பாசக 23 தொகுதிகளிலும் சிவசேனா 18 தொகுதிகளிலும் அமராவதி தொகுதியில் கட்சி சாரா வேட்பாளர் நவ்நித் இரவி ராணாவும் வென்றனர்.

ஒடிசா[தொகு]

மேற்கு வங்காளம்[தொகு]

உத்திரப் பிரதேசம்[தொகு]

மிர்சாபூரிலும் ரோபர்ட்ஸ்கஞ்சிலும் அப்னாதளம் வென்றது.

திரிபுரா[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் (%) வென்ற தொகுதிகள்
பாசக 49.03 2
காங்கிரசு 25.34 0
இந்திய பொதுவுடமை (மார்க்சியம்) 17.31 0
திரிபுரா பழங்குடி மக்கள் முன்னனி 4.16 0

பீகார்[தொகு]

கிசான்கன்ஞ் என்ற தொகுதியில் காங்கிரசு வென்றது.

சம்மு காசுமீர்[தொகு]

சம்மு, உதன்பூர், லடாக்கில் பாசகவும் சிறிநகர், பாராமுல்லா, அனந்நாக்கில் தேசியமாநாடும் வென்றன.

மணிப்பூர்[தொகு]

மேகாலயா[தொகு]

கோவா[தொகு]

அசாம்[தொகு]

கோக்ரச்கரில் கட்சி சாராதவரும் துப்ரியில் அனைந்திந்திய ஐக்கிய சனநாயக முன்னனி வென்றனர்.

வாக்களிப்பு வீதம்[தொகு]

முதல் கட்ட வாக்களிப்பில், 91 மக்களவைத் தொகுதிகளுக்கு 142 மில்லியன் வாக்காளர்களில் 69.50 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.[55] 2014 தேர்தல்களில் இந்த வாக்களிப்பு வீதம் 68.77% ஆக இருந்தது.[55] இரண்டாம் கட்டத்தில், 95 மக்களவைத் தொகுதிகளுக்கு 156 மில்லியன் வாக்காளர்களில் 69.44% விழுக்காட்டினர் வாக்களித்தனர். 2014 இல் இது 69.62% ஆக இருந்தது.[55] மூன்றாம் கட்டத்தில், 116 மக்களவத் தொகுதிகளுக்கு 189 மில்லியன் வாக்காளர்களில்[55] 68.40 விழுக்காட்டினர் வாக்களித்தனர். 2014 இல் இது 67.15% ஆக இருந்தது.[55] நான்காம் கட்டத்தில், 72 தொகுதிகளுக்கு 128 மில்லியன் வாக்காளர்களில் 65.51 விழுக்காட்டினர் வாக்களித்தனர். 2014 இது 63.05% ஆக இருந்தது.[56] ஆறாம் கட்டத்தில், 101 மில்லியன் வாக்காளரில் 63.5 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.[57]

2019 தேர்தலில் இறுதி வாக்களிப்பு வீதம் 67.11 ஆகும். இது மக்களவைத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமானதாகும். 2014 இல் இது 65.95% ஆக இருந்தது.[58]

மாநிலம்/ஒன்றியம் மொத்தம் கட்டம் வாரியாக வாக்குப்பதிவு (சதவீதம்)[N 1]
கட்டம் 1[55]
11 ஏப்ரல்
கட்டம் 2[55]
18 ஏப்ரல்
கட்டம் 3[55]
23 ஏப்ரல்
கட்டம் 4[55]
29 ஏப்ரல்
கட்டம் 5[55]
6 மே
கட்டம் 6[59]
12 மே
கட்டம் 7[60]
19 மே
இடங்கள் %[56] இடங்கள் % இடங்கள் % இடங்கள் % இடங்கள் % இடங்கள் % இடங்கள் %[N 2] இடங்கள் %[N 2]
ஆந்திரப் பிரதேசம் 25 79.88 25 79.88  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
அருணாசலப் பிரதேசம் 2 77.38 2 77.38  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
அசாம் 14 81.52 5 78.27 5 81.20 4 85.11  –  –  –  –  –  –  –  –
பீகார் 40 TBA 4 53.44 5 62.92 5 61.20 5 59.18 5 57.08 8 59.29 8 53.36
சத்தீசுகர்] 11 71.48 1 66.04 3 74.95 7 70.73  –  –  –  –  –  –  –  –
கோவா 2 74.98  –  –  –  – 2 74.98  –  –  –  –  –  –  –  –
குசராத்து 26 64.11  –  –  –  – 26 64.11  –  –  –  –  –  –  –  –
அரியானா 10 68.34  –  –  –  –  –  –  –  –  –  – 10 68.34  –  –
இமாச்சலப் பிரதேசம் 4 TBA  –  –  –  –  –  –  –  –  –  –  –  – 4 70.40
சம்மு காசுமீர்[a] 6 TBA 2 57.38 2 45.67 13 13.68 13 10.32 113 19.92  –  –  –  –
சார்க்கண்ட் 14 TBA  –  –  –  –  –  – 3 64.97 4 65.99 4 64.5 3 71.16
கருநாடகம் 28 68.63  –  – 14 68.80 14 68.45  –  –  –  –  –  –  –  –
கேரளம் 20 77.67  –  –  –  – 20 77.67  –  –  –  –  –  –  –  –
மத்தியப் பிரதேசம் 29 71.10  –  –  –  –  –  – 6 74.88 7 69.14 8 65.24 8 75.65
மகாராட்டிரம் 48 60.79 7 63.04 10 62.86 14 62.36 17 57.33  –  –  –  –  –  –
மணிப்பூர் 2 82.75 1 84.21 1 81.16  –  –  –  –  –  –  –  –  –  –
மேகாலயா 2 71.32 2 71.32  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
மிசோரம் 1 63.06 1 63.06  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
நாகாலாந்து 1 83.09 1 83.09  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
ஒடிசா 21 73.06 4 73.82 5 72.56 6 71.62 6 74.38  –  –  –  –  –  –
பஞ்சாப் பகுதி 13 TBA  –  –  –  –  –  –  –  –  –  –  –  – 13 64.71
ராஜஸ்தான் 25 TBA  –  –  –  –  –  – 13 68.17 12 63.71  –  –  –  –
சிக்கிம் 1 78.81 1 78.81  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
தமிழ்நாடு[N 3] 38 72.01  –  – 38 72.01  –  –  –  –  –  –  –  –  –  –
தெலங்காணா 17 62.53 17 62.53  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
திரிபுரா 2 83.20 1 83.21  –  – 1 83.19  –  –  –  –  –  –  –  –
உத்தரப் பிரதேசம் 80 TBA 8 63.26 8 62.39 10 61.42 13 59.11 14 58.00 14 54.74 13 58.01
உத்தராகண்டம் 5 61.48 5 61.48  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
மேற்கு வங்காளம் 42 TBA 2 83.80 3 81.72 5 81.97 8 82.84 7 80.09 8 80.35 9 73.51
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 65.18 1 65.18  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
சண்டிகர் 1 TBA  –  –  –  –  –  –  –  –  –  –  –  – 1 63.57
தாத்ரா மற்றும் நகர் அவேலி 1 79.59  –  –  –  – 1 79.59  –  –  –  –  –  –  –  –
தமனும் தியூவும் 1 71.83  –  –  –  – 1 71.83  –  –  –  –  –  –  –  –
தில்லி 7 59.73  –  –  –  –  –  –  –  –  –  – 7 59.73  –  –
இலட்சத்தீவுகள் 1 84.96 1 84.96  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
புதுச்சேரி 1 81.21  –  – 1 81.21  –  –  –  –  –  –  –  –  –  –
மொத்தம் 542 67.11 91 69.50 95 69.44 11613 68.40 7113 65.50 5013 64.16 59 63.49[N 2] 59 63.98[N 2]
  1. / 2014 தேர்தல்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.
  2. 2.0 2.1 2.2 2.3 First estimate by the ECI. Final numbers to be announced later.
  3. தமிழ்நாட்டில் உள்ல 39 தொகுதிகளில், வேலூர் தொகுதியில் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்[தொகு]

தேர்தல் ஆணையத்தின் கட்டளைப்படி இந்திய மக்களவைத் தேர்தல் 2019 முடிந்த நாளான மே மாதம், 19-ஆம் நாள், மாலை 6.30க்கு பின் செய்தி ஊடகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின.

நிறுவனம் வெளியான நாள் வெற்றி கணிப்புகள்
இந்தியா டூடே[61] 19 மே 2019 பாஜக+352 (±13), காங்கிரஸ் + 93 (±15), மற்றவர்கள் 82 (±13)
சிஎன்என்-ஐபிஎன்[62] 19 மே 2019 பாஜக+ 336 , காங்கிரஸ்+ 82 , மற்றவர்கள் 124
டைம்ஸ் நவ்+விம்ஆர்[63] 19 மே 2019 பாஜக+ 306 (±3), காங்கிரஸ்+ 132 (±3), மற்றவர்கள் 104 (±3)
ஏபிப்பி நியுஸ்+நீல்சென்[61] 19 மே 2019 பாஜக+ 267, காங்கிரஸ்+ 127, மற்றவர்கள் 148
சிவோட்டர்[61] 19 மே 2019 பாஜக+ 287, காங்கிரஸ்+ 128, மற்றவர்கள் 127
சாணக்கியா[63] 19 மே 2019 பாஜக+ 350 (±14), காங்கிரஸ்+ 95 (±9), மற்றவர்கள் 97 (±11)
தேர்தல்களின் தேர்தல்[63] 19 மே 2019 பாஜக+ 317, காங்கிரஸ்+110, மற்றவர்கள் 115

தேர்தல் முடிவுகள்[தொகு]

2019 மே 23 இல் வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டன. இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளின் படி, கட்சி-வாரியாக 542 தொகுதி முடிவுகள் பின்வருமாறு:[64]

352 91 99
தேஜகூ ஐமுகூ ஏனையவை
முடிவுகள்
கூட்டணி கட்சி வாக்குகள் % மாற்றம் இடங்கள்
வெற்றி[64]
மாற்றம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி[65] பாரதிய ஜனதா கட்சி 303 352 21 16
சிவ சேனா 18
ஐக்கிய ஜனதா தளம் 16 14
லோக் ஜனசக்தி கட்சி 6
அப்னா தளம் (சோனேலால்) 2
அகாலி தளம் 2 2
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 36
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் 1 1
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 1 1
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி 1 1
தேசிய மக்கள் கட்சி 1
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி[65] இந்திய தேசிய காங்கிரசு 52 91 8 31
திராவிட முன்னேற்றக் கழகம் 23 23
தேசியவாத காங்கிரசு கட்சி[b] 5 1
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 3 1
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 3 3
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) 1 1
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 1
கேரள காங்கிரசு (மா) 1
புரட்சிகர சோசலிசக் கட்சி 1
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 1
சமசுட்டி முன்னணி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 22 99 14 47
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி 22 13
பிஜு ஜனதா தளம் 12 8
தெலுங்கானா இராட்டிர சமிதி 9 2
ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் 2 1
மகாகத்பந்தன் பகுஜன் சமாஜ் கட்சி 10 10
சமாஜ்வாதி கட்சி 5
இடது முன்னணி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 6
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2 1
கூட்டுச்சேராக் கட்சிகள் தெலுங்கு தேசம் கட்சி 3 13
ஆம் ஆத்மி கட்சி 1 3
அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னணி 1 2
மிசோ தேசிய முன்னணி 1 1
நாகாலாந்து மக்கள் முன்னணி 1
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 1 1
சுயேச்சை 4

2014 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோதி தலைமையிலான பாஜக 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக தனிப் பெரும் கட்சியாக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களைக் கைப்பற்றியது. இது ஆட்சியமைக்கத் தேவையான 272 ஐ விட 31 இடங்கள் அதிகமானதாகும். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியது.[66][67] இந்திய விடுதலைக்குப் பின்னர் ஒரே கட்சி மிகப் பெரும்பான்மையுடன் மக்களவைக்குத் தெரிவாகியது இது இரண்டாவது தடவையாகும்.[68] பாஜகவிற்கு மட்டும் 41% வாக்குகள் கிடைத்தன. இது 2014 தேர்தலை விட 10% அதிகமாகும்.[68]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. அருணாசலப் பிரதேசம், கேரளம், உத்தராகண்டம் உட்பட 9 மாநிலங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் வாக்களித்தனர்.[7]
  1. அனந்தநாக் தொகுதியில் மூன்று நாட்கள் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
  2. இலட்சத்தீவு தொகுதியில் கூட்டணி உடன்பாடில்லாமல் போட்டியிட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. "EC may announce Lok Sabha election schedule in March first week: Sources – Times of India". The Times of India.
  2. Staff, Scroll. "2019 General Elections: Voting to be held in 7 phases from April 11 to May 19, counting on May 23". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
  3. "Lok Sabha Election 2019 Dates Schedule LIVE, Assembly Elections Dates For Andhra Pradesh, Odisha, Sikkim, Arunachal Pradesh, 2019 Election Date Time for Polling, Counting and Results". timesnownews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
  4. "Lok Sabha elections will begin on April 11 and polling will be held over seven phases through May 19, followed by counting of votes on May 23. Lok Sabha Election 2019 : Key Dates, Live News Updates, Election Calendar". english.manoramaonline.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  5. At 67.1%, 2019 turnout's a record: Election Commission, The Times of India (20 May 2019)
  6. Polls Are Closed in India’s Election: What Happens Next?, The New York Times, Douglas Schorzman and Kai Schultz (19 May 2019)
  7. Women turn out in greater numbers than in previous elections, The Economic Times, Aanchal Bansal (20 May 2019)
  8. "India Election Results: Modi and the B.J.P. Make History". NYT. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  9. LS polls: NDA wins 352 seats, BJP crosses 300 mark, ANI (May 24 2019)
  10. GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019, The Election Commission of India (23 May 2019)
  11. "Election Results LIVE – Lok Sabha Election: PM Modi dedicates victory to nation, vows to take even rivals along". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  12. Hariharan, Revathi; Dey, Stela. "People Of India Have Decided, I Respect That: Rahul Gandhi Concedes Defeat In Amethi Against Smriti Irani: Live Updates". NDTV. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  13. "Assembly polls in 4 states with Lok Sabha elections but not in J&K- Malayala Manorama". english.manoramaonline.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
  14. "Lok Sabha elections 2019: Congress MP favours more seats for RJD in Bihar" (in en-US). 4 September 2018. https://www.indiatvnews.com/elections/lok-sabha-elections-2019-lok-sabha-elections-2019-congress-mp-favours-more-seats-for-rjd-in-bihar-461365. 
  15. Electoral system IPU
  16. Lok Sabha Election 2019 Phase 3 voting: How to vote without voter ID card, Business Today (April 23 2019)
  17. Singh, Vijaita (1 September 2018). "General election will be held in 2019 as per schedule, says Rajnath Singh" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/general-election-will-be-held-in-2019-as-per-schedule-says-rajnath-singh/article24844428.ece. 
  18. "Lok Sabha Elections dates announced: Polls to be held from April 11 in 7 phases, counting on May 23". The Economic Times. 11 March 2019. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/election-commission-live-updates-lok-sabha-elections-to-be-conducted-in-7-phases/articleshow/68343581.cms?from=mdr. 
  19. "Announcement of Schedule for General Elections to Lok Sabha and Legislative Assemblies in Andhra Pradesh, Arunachal Pradesh, Odisha & Sikkim, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 28 March 2019.
  20. Ahmad, Mudasir (11 March 2019). "Kashmir: Why Polls in Anantnag Lok Sabha Seat Will Be Held in Three Phases". The Wire. https://thewire.in/politics/kashmir-ls-elections-anantnag-three-phases. பார்த்த நாள்: 4 April 2019. 
  21. "Election cancelled in Vellore Lok Sabha seat after money seized from DMK leaders". The News Minute. 2019-04-16. பார்க்கப்பட்ட நாள் 2019-04-17.
  22. "Lok Sabha polls in Vellore cancelled due to use of money power". The Economic Times. 16 April 2019. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/tamil-nadu/lok-sabha-polls-in-vellore-cancelled-due-to-use-of-money-power/articleshow/68909824.cms. 
  23. "Polling in Tripura East deferred to April 23" (in en-IN). The Hindu. 2019-04-16. https://www.thehindu.com/elections/lok-sabha-2019/polling-in-tripura-east-deferred-to-april-23/article26858600.ece. 
  24. "A first: BJP to contest more seats than Congress – Times of India". The Times of India.
  25. "BJP Contests More Lok Sabha Seats Than Congress For The First Time". NDTV.com.
  26. Kumar Shakti Shekhar (2019). "General election 2019: Why Congress has no alliance partners in these states". Times of India. https://timesofindia.indiatimes.com/elections/news/indian-general-election-2019-why-congress-has-no-alliance-partners-in-these-states/articleshow/68738378.cms. பார்த்த நாள்: 16 April 2019. 
  27. 27.0 27.1 "SP, BSP announce tie-up for Lok Sabha polls, to contest 38 seats each in UP – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.
  28. "Upbeat BJP to contest from all six LS seats in J&K". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-03-18. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  29. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  30. "Lok Sabha polls: BJP to contest on 25 seats, Shiv Sena settles for 23 in Maharashtra". The Indian Express (in Indian English). 18 February 2019. பார்க்கப்பட்ட நாள் 18 February 2019.
  31. 31.0 31.1 "BJP, AIADMK, PMK join hands in தமிழ்நாடு". The Economic Times. 20 February 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-aiadmk-pmk-join-hands-in-tamil-nadu/articleshow/68072511.cms. 
  32. 32.0 32.1 Chaturvedi, Rakesh Mohan (24 December 2018). "BJP, JDU, LJP finalise 17:17:6 seat sharing formula for பீகார் Lok Sabha polls". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-jdu-ljp-finalise-17176-seat-sharing-formula-for-பீகார்-lok-sabha-polls/articleshow/67215178.cms. 
  33. "Akali Dal, BJP To Fight 2019 Polls From பஞ்சாப் Together, Says Amit Shah". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  34. "AIADMK – DMDK Alliance: அ.தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளில் களமிறங்கும் தே.மு.தி.க!". indianexpress.com. 10 March 2019.
  35. sheikh, sajid (9 March 2019). "झारखंड में भाजपा-आजसू में गठबंधन; अमित शाह और सुदेश महतो के बीच बैठक में बनी सहमति". Dainik Bhaskar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
  36. "AIADMK seals LS poll pact with Puthiya Tamilagam, to give one seat". thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
  37. "அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி.. ஒரு இடம்.. இரட்டை இலையில் போட்டி!". One India Tamil. 4 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  38. "AIADMK-AINRC sign pact, AINRC to contest from புதுச்சேரி in alliance with AIADMK – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  39. "Assam: Bodoland Peoples' Front to field Pramila Rani Brahma from Kokrajhar for lone BTC seat". TNT-The NorthEast Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-03-12. Archived from the original on 2019-06-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  40. "NDA fancies fielding PC Thomas in Kottayam LS seat, but...... – Manorama Online". Malayala Manorama. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
  41. 41.0 41.1 41.2 41.3 41.4 "Congress, Sharad Pawar's NCP Announce Seat-Sharing Pact In Maharashtra". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
  42. 42.0 42.1 "Seat Sharing agreements of Congress in உத்தரப் பிரதேசம்". The Economic Times. 17 March 2019 இம் மூலத்தில் இருந்து 31 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190331020146/https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/uttar-pradesh/congress-leaves-7-seats-for-sp-bsp-rld-in-up-forges-alliance-with-jap-mahan-dal/articleshow/68451234.cms. 
  43. 43.0 43.1 43.2 43.3 43.4 43.5 43.6 43.7 Rao, Manasa (2019-03-15). "DMK-led alliance announces seat sharing: DMK retains all seats". thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  44. "Congress, HD Devegowda's Party Agree On 20-8 Seat Deal In Karnataka". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  45. 45.0 45.1 "Jharkhand: Congress, JMM reach agreement for Lok Sabha, assembly polls – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 January 2019.
  46. "CPI picks nominee for Aska – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
  47. "N K Premachandran, MP, will be the Revolutionary Socialist Party (RSP) candidate from Kollam for the upcoming Lok Sabah elections – Malayala Manorama". Manorama Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.
  48. "SP, BSP announce tie-up for Lok Sabha polls, to contest 38 seats each in UP – Times of India ►". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.
  49. "BSP Announces 9 Candidates in மத்தியப் பிரதேசம் for Lok Sabha Polls". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  50. Dikshit, Sandeep (9 February 2019). "BSP calls off alliance with INLD, forges ties with Raj Kumar Saini's LSP". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  51. 51.0 51.1 51.2 51.3 51.4 "பஞ்சாப் Democratic Alliance announces 7 candidates for LS polls".
  52. "Election Tracker LIVE: BSP Ties Up With Jana Sena for Andhra Polls, Maya Says Want to See Pawan Kalyan as CM". News18. 2019-03-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  53. "CPI(M) declared 45 candidates list". 17 March 2019.
  54. "AAP Fields its First Transgender Candidate from Prayagraj in உத்தரப் பிரதேசம்". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
  55. 55.00 55.01 55.02 55.03 55.04 55.05 55.06 55.07 55.08 55.09 "Final Voter turnout of Phase 1 to Phase 5 of the Lok Sabha Elections 2019". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-05-20.
  56. 56.0 56.1 Final voter turnout of Phase 1 and Phase 2 of the Lok Sabha Elections 2019, The Election Commission of India (20 April 2019, updated 4 May 2019)
  57. Lok Sabha polls: 63.48% voting in sixth phase, The Times of India (12 May 2019)
  58. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  59. Sixth phase estimated turnout, The Election Commission of India (12 May 2019)
  60. Seventh phase estimated turnout, The Election Commission of India (19 May 2019)
  61. 61.0 61.1 61.2 [1] India Today
  62. [2] CNN-IBN
  63. 63.0 63.1 63.2 [3] TimesNow-VMR
  64. 64.0 64.1 "General Election 2019 – Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 2019-05-25. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
  65. 65.0 65.1 "LIVE Indian General Election Results - Map Wise, State Wise, Constituency Wise". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
  66. India’s Narendra Modi Wins Re-Election With Strong Mandate, The Wall Street Journal (May 23 2019)
  67. Election results 2019: Ab ki baar, phir Modi sarkar. BJP looks set to get 300 seats alone, The India Today (May 23 2019)
  68. 68.0 68.1 Narendra Modi 2.0 returns with biggest gain in vote share ever, India Today (May 23 2019)

வெளி இணைப்புகள்[தொகு]