இந்தியக் காட்டுப்பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய காட்டுப்பன்றி
சுசு சுகொரொபா கிரிசுடேட்டசு, பந்தவாகர்த் தேசிய பூங்கா, இந்தியா
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: ஆர்டியோடேக்டைலோ
குடும்பம்: சுயிடே
பேரினம்: சுசு
சிற்றினம்:
சு. சுகோரொபா
துணைச்சிற்றினம்:
சு. சு. கிரிசுடேட்டசு
முச்சொல் பெயரீடு
சுசு சுகொரொபா கிரிசுடேட்டசு
வாக்நெர், 1839
வேறு பெயர்கள்[1]

இந்தியக் காட்டுப்பன்றி (Indian boar)(சுசு சுகோரொபா கிரிசுடேட்டசு), அந்தமான் பன்றி என்றும் மவ்பின் பன்றி என அழைக்கப்படுவது[2] காடுகளில் காணப்படும் பன்றியின் கிளை இனமாகும். இவை இந்தியா, நேபாளம், மியான்மர், மேற்கு தாய்லாந்து மற்றும் இலங்கை பகுதிகளில் காணப்படுகிறது.

இந்தியப் பன்றி அதன் ஐரோப்பிய இனத்திலிருந்து தலையிலிருந்து கீழ் உடல் வரை அதன் பின்பகுதி வரை உள்ள பிடரி மயிர் பெரியது, கூர்மையானது. இறுக்கமான மண்டை ஓடு, அதன் சிறிய, கூர்மையான காதுகள் இலகுவான உடலமைப்பால் வேறுபடுகிறது.[3] இது ஐரோப்பிய வடிவத்தை விட உயரமானது; இதன் பின்புற முட்கள் மிகவும் வளர்ந்தவை.[2] வாலில் மயிர் குஞ்சமும், கன்னத்தில் முடியுடனும் காணப்படுகிறது.[4] முதிர்வடைந்த பன்றி 83.82 முதல் 91.44 cm (33.00 முதல் 36.00 அங்) தோள்பட்டை உயரமும் (வங்காளத்தில் ஒரு பன்றி 38 அங்குலங்களை எட்டியுள்ளது) மற்றும் உடல் நீளம் ஐந்து அடியுடன் எடையானது 90.72 முதல் 136.08 kg (200.0 முதல் 300.0 lb) வரை இருக்கும்.

இந்தியாவில் இந்த பன்றி மனிதர்களுடன் மேல் பேலியோலிதிக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டுள்ளது. இது பழமையான பீம்பேட்டகா பாறை வாழிடங்களில் உள்ள குகை ஓவியம் மூலம் தெரியவருகின்றது.[5] வேத புராணங்களில் சில சமயங்களில் காணப்படுகிறது. பிரம்மத்தில் உள்ள ஒரு கதையில், இந்திரன் அசுரர்களின் புதையலைத் திருடிய பன்றியைக் கொன்று, அதன் சடலத்தை விஷ்ணுவிடம் கொடுத்து, அதைத் தெய்வங்களுக்குப் பலியாகக் கொடுக்கிறான். சர்க சம்ஹிதா கதையின் மறுவடிவமைப்பில், பன்றி பிரஜாபதியின் வடிவமாக விவரிக்கப்படுகிறது. மேலும் பூமியை முதன்மை நீரிலிருந்து உயர்த்திய பெருமைக்குரியது. இராமாயணம் மற்றும் புராணங்களில், விஷ்ணுவின் அவதாரமான வராக அவதாரமாகச் சித்தரிக்கப்படுகிறது.[6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. grea
  2. 2.0 2.1 Lydekker, R. (1900), The great and small game of India, Burma, & Tibet, London : R. Ward, pp. 258-266
  3. Sterndale, R. A. (1884), Natural history of the Mammalia of India and Ceylon, Calcutta : Thacker, Spink, pp. 415-420
  4. Jerdon, T. C. (1874), The mammals of India; a natural history of all the animals known to inhabit continental India, London, J. Wheldon, pp. 241-244
  5. Mayer, John J., "Wild Pig Attacks on Humans" (2013). Wildlife Damage Management Conferences – Proceedings. Paper 151. http://digitalcommons.unl.edu/icwdm_wdmconfproc/151
  6. Macdonell, A. A. (1898), Vedic Mythology, Motilal Banarsidass Publ., p. 41

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_காட்டுப்பன்றி&oldid=3630459" இலிருந்து மீள்விக்கப்பட்டது