இடியப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
String Hoppers
Cooked idiyappams on a plate
வகைbreakfast
தொடங்கிய இடம்இந்தியா
முக்கிய சேர்பொருட்கள்rice flour
இதே போன்ற உணவுகள்Putu mayam

இடியப்பம் அல்லது இடியாப்பம் (ஓலிப்பு) என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுத்தலாம். இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் இடியப்ப உரல் ஆகும்.[1][2][3]

சம்பல், சொதி[தொகு]

இடியாப்பம் பிழிதல்

இலங்கை உணவு முறையில் இடியப்பம் சம்பல் என்னும் தேங்காயினால் செய்யப்பட்ட உணவுடனும் சொதி எனப்படும் நீர்ம உணவுடனும் சேர்த்து உண்ணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. K. T. Achaya (November 2003). The Story of Our Food. Universities Press. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7371-293-X. https://books.google.com/books?id=bk9RHRCqZOkC&pg=PA80. 
  2. "Lokopakara" Agri-History Bulletin No. 6 - (Trans) Ayangarya, Y. L. Nene, Nalini Sadhale, Valmiki Sreenivasa (Trans), 2004
  3. "Idiyappam". Marias Menu. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Idiyappam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடியப்பம்&oldid=3776902" இலிருந்து மீள்விக்கப்பட்டது