இசுரேலிய வான்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுரேலிய விமானப்படை
உருவாக்கம்1948
நாடுஇசுரேல்
வகைவிமானப்படை
அளவு800+ விமானங்கள்
பகுதிஇசுரேலிய பாதுகாப்புப் படைகள்
தளபதிகள்
கட்டளை அதிகாரிஅமிர் எஸ்கெல்
படைத்துறைச் சின்னங்கள்
விமானப்படைக் கொடி
சிறுவட்டுச் சின்னம்
Aircraft flown
தாக்குதல்எப்-15இ
சண்டைஎப்-15, எப்-16
சுற்றுக்காவல்ஐஏஐ, இயுரோகொப்டர்
பயிற்சிஜி-120, டி-6 டெக்சான் II, ஏ-4, பீச்கிராப்ட், பெல் 206
போக்குவரத்துபோயிங் 707–320, சி-130, சிஎச்-53, எஸ்-70

இசுரேலிய விமானப்படை (ஐஏஎப்; எபிரேயம்: {{{1}}}‎: זרוע האוויר והחלל, Zroa HaAvir VeHahalal, "வான் மற்றும் வான்வெளி படைக்கலம்", இது பொதுவாக חיל האוויר, Kheil HaAvir, "வான் படைகள்" எனப்படும்) என்பது இசுரேலிய அரசின் விமானப்படையும் இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் வான் படைக்கலமுமாகும். இது இசுரேல் சுதந்திரம் அறிவிப்புச் செய்ததும் குறுகிய காலத்தில் 28 மே 1948 அன்று உருவானது.

குறிக்கோள் வாக்குமூலம்[தொகு]

இசுரேலிய விமானப்படை பின்வருபவற்றை அதன் செயற்பாடாகக் கொள்கிறது:[1][2]

  1. இசுரவேலின் வான்பரப்பை இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை பகுதிகளையும் பாதுகாத்தல்
  2. இசுரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கை பகுதிகளில் வான் மேன்மையை அடைதல்
  3. தரை, கடல் சண்டை நடவடிக்கைகளில் பங்குபற்றல்
  4. எதிரியின் அழமான பகுதிகளில் இலக்குகளைத் தாக்குதல்
  5. இசுரேலின் சகல புலனாய்வு மதிப்பீடு மற்றும் பற்குபற்றலும் வான்வெளி புலனாய்வு ஒளிப்படங்களை உருவாக்குதல்
  6. படை, பொருட்கள், ஆயுதங்களை என்பவற்றை கொண்டு செல்லல்
  7. தேடுதல், மீட்டல் மற்றும் வான்வெளி நடவடிக்கை வெளியேற்றங்களை செயற்படுத்தல்
  8. சிறப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தல்
  9. இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் கட்டமைப்பினுள் வான் வல்லமையை அபிவிருத்தி செய்தல்

நிர்வாக அமைப்பு[தொகு]

  • விமான பணியாளர் பிரிவு தலைமை
  • நிலையான இறக்கை விமானக் குழு
  • உலங்கு வானூர்திப் பிரிவு
  • புலனாய்வுக் குழு
  • உபகரணங்கள் குழு
  • மனித ஆற்றலை குழு
  • தலைமை மருத்துவ அதிகாரி
  • அலகு கட்டுப்பாட்டுக் குழு
  • வான் சிறப்புப் படைகள் பிரிவு
  • சால்டாக் - விமான படை சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு
  • அலகு 669 - மருத்துவ பிரித்தெடுத்தல் பிரிவு
  • வான் பாதுகாப்பு கட்டளை
  • வட வான் பாதுகாப்புப் படையணி
  • மத்திய வான் பாதுகாப்புப் படையணி
  • தென் வான் பாதுகாப்புப் படையணி(வான் பாதுகாப்பு பாடசாலை உட்பட)

கட்டளைத் தளபதிகளின் பட்டியல்[தொகு]

  • யிஸ்ராயல் அமிர் (மே 1948 - ஜூலை 1948)
  • அக்ரோன் ரேமேஸ் (ஜூலை 1948 - டிசம்பர் 1950)
  • ஸ்ரோமோ ஷமிர் (டிசம்பர் 1950 - ஆகஸ்ட் 1951)
  • ஹைம் லஸ்கோவ் (ஆகஸ்ட் 1951 - மே 1953)
  • டான் டெல்கோவ்கி (மே 1953 - ஜூலை 1958)
  • எசெர் விஸ்மன் (ஜூலை 1958 - ஏப்ரல் 1966)
  • மோர்தேசாய் (ஏப்ரல் 1966 - மே 1973)
  • பின்யாமின் பெலெட் (மே 1973 - அக்டோபர் 1977)
  • டேவிட் ஐரி (அக்டோபர் 1977 - டிசம்பர் 1982)
  • அமோஸ் லபிடொட் (டிசம்பர் 1982 - செப்டம்பர் 1987)
  • அவிகு பென்-நன் (செப்டம்பர் 1987 - ஜனவரி 1992)
  • ஹேர்ல் பெடிங்கர் (ஜனவரி 1992 - ஜூலை 1996)
  • இடான் பென் எலியஹு (ஜூலை 1996 - ஏப்ரல் 2000)
  • டான் ஹல்ட்ஸ் (ஏப்ரல் 2000 - ஏப்ரல் 2004)
  • எல்யேசர் ஸ்கேடி (ஏப்ரல் 2004 - மே 2008)
  • இடோ நெகோஸ்தான் (மே 2008 - மே 2012)
  • அமிர் எஸ்செல் (மே 2012 -)

இலச்சினை[தொகு]

இசுரேலிய விமானப்படையின் இலச்சினை வெள்ளை வட்டத்தில் நீல தாவீதின் நட்சத்திரம் ஆகும். பொதுவாக இது ஆறு இடங்களில் வரையப்படும். ஒவ்வொரு சிறகிலும் மேல் மற்றும் கீழ்ப் பகுதி, மற்றும் விமான எரிபொருள் கொள்கலனின் பக்கம் ஆகியன அவ் ஆறு இடங்களாகும். படைப்பிரிவின் சின்னங்கள் பொதுவாக வால் துடுப்பின் மீது காணப்படும்.

குறிப்புக்கள்[தொகு]

  1. "About the IAF – Mission Statement". Israeli Air Force. Archived from the original on நவம்பர் 8, 2011. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2011.
  2. "IDF Units – Air Force". Israel Defense Forces. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2011.

துணைநூல்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Air force of Israel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரேலிய_வான்படை&oldid=3705264" இலிருந்து மீள்விக்கப்பட்டது