இங்வர் காம்பரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்வர் காம்பரத்

இங்வர் காம்பரத் ( Feodor Ingvar Kamprad 30 மார்ச்சு 1926–27 சனவரி 2018) என்பவர் சுவீடிய தொழில் அதிபர் ஆவார். ஐக்கியா என்ற பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் 1976 முதல் 2014 வரை சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்தார்.[1][2]

இளமைக் காலம்[தொகு]

தெற்கு சுவீடனி;ல் சுமலந்தியா என்ற பகுதியில் சுவீடிய தாய்க்கும் செருமனி தந்தைக்கும் இங்வர் காம்பரத் பிறந்தார். இவருடைய பாட்டி குடும்பத் தொழிலை இவருக்குக் கற்றுக் கொடுத்தார். வணிகத்திலும் தொழிலிலும் ஏற்படும் இன்னல்களையும் இடர்பாடுகளையும் எடுத்துக் காட்டி வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார். இவர் பள்ளிப் படிப்பைத் தொடராமல் வணிகத்தில் ஆர்வம் கொண்டார்.

மேற்கோள்[தொகு]

  1. "Ingvar Kamprad i stor sorg". Aftonbladet.
  2. "Ikea founder mourns death of his wife". The Local. December 13, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்வர்_காம்பரத்&oldid=2717448" இலிருந்து மீள்விக்கப்பட்டது