இங்கிலாந்தின் இரண்டாம் மேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் மேரி
Mary II
சர் காட்ஃபிரி நெல்லர் 1690 இல் வரைந்தது
இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து அரசி
ஆட்சிக்காலம்1689[a] – 28 டிசம்பர் 1694
பிரித்தானியா11 ஏப்ரல் 1689
முன்னையவர்இரண்டாம் யேம்சு
பின்னையவர்மூன்றாம் வில்லியம்
இணை-ஆட்சியாளர்மூன்றாம் வில்லியம்
பிறப்பு30 ஏப்ரல் 1662
(புதிய நாட்காட்டி: 10 மே 1662)
சென் யேம்சு அரண்மனை, இலண்டன்
இறப்பு28 டிசம்பர் 1694 (அகவை 32)
(புதிய நாட்காட்டி: 7 சனவரி 1695)
கென்சிங்டன் அரண்மனை, இலண்டன்
புதைத்த இடம்5 மார்ச் 1695
கணவர்இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (தி. 4 நவம்பர் 1677)
மரபுஇசுடுவர்ட் மாளிகை
தந்தைஇங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு
தாய்ஆன் ஹைடு
மதம்ஆங்கிலிக்கம்
கையொப்பம்இரண்டாம் மேரி Mary II's signature

இரண்டாம் மேரி (Mary II, 30 ஏப்ரல் 1662 – 28 டிசம்பர் 1694) என்பவர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் அரசியாக அவரது கணவர் மூன்றாம் வில்லியத்துடன் இணைந்து 1689 முதல் அவரது இறப்பு வரை ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சி வரலாற்றாளர்களால் வில்லியமும் மேரியும் இணைந்த ஆட்சி என வர்ணிக்கப்படுகிறது. வில்லியமும் மேரியும் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். மாண்புமிகு புரட்சியின் பின்னர் வில்லியம் அரசராகவும், மேரி அரசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் மூலம் மேரி ஆங்கிலேய உரிமைகளின் சட்டவரைவை ஏற்றுக் கொண்டு, தனது உரோமன்-கத்தோலிக்கத் தந்தை இரண்டாம் யேம்சின் உரிமையையும் விட்டுக் கொடுத்தார். 1694 இல் மேரி இறந்ததை அடுத்து வில்லியம் 1702 இல் இறக்கும் வரை தனித்து ஆட்சி செய்தார். வில்லியத்துக்குப் பின்னர் மேரியின் சகோதரி ஆன் முடி சூடினார்.

வில்லியம் இங்கிலாந்தில் இருந்த போது, மேரி தனது பெருமாலான அதிகாரங்களை தனது கணவருக்கு அளித்து விட்டார். ஆனாலும், வில்லியம் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேரி தனித்தே செயல்பட்டார். இதன் மூலம் அவர் ஒரு சக்தி வாய்ந்த, உறுதியான, திறமையான ஆட்சியாளராக தன்னை நிரூபித்துக் கொண்டார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மேரி இலண்டனில் சென் யேம்சு அரண்மனையில் 1662 ஏப்ரல் 30 இல் யோர்க் இளவரசருக்கும் (பின்னாளில் இரண்டாம் யேம்சு மன்னருக்கும்), அவரது முதல் மனைவி ஆன் ஹைடுக்கும் மூத்தவராகப் பிறந்தார். மேரியின் மாமா இரண்டாம் சார்லசு மன்னர், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து என்ற மூன்று இராச்சியங்களையும் ஆண்டவர். மேரி ஆங்கிலிக்க வழிபாட்டு முறையைப் பின்பற்றியவர். இவரது மூதாதை ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் நினைவாக மேரி எனப் பெயரிடப்பட்டார்.[1] மேரியின் தாயாருக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர் எனினும், மேரி, மற்றும் அவரது இளைய சகோதரி ஆன் ஆகியோரைத் தவிர்த்து ஏனையோர் சிறு வயதிலேயே இறந்து போயினர். தந்தை இரண்டாம் சார்லசுவிற்கு சட்டபூர்வமாக பிள்ளைகள் இல்லாததால், தந்தைக்குப் பின்னர் மேரியே அடுத்த வாரிசாக இருந்தார்.[2]

திருமணத்திற்கு ஓராண்டுக்கு முன்னர் மேரி

மேரியின் தந்தை ரோமன் கத்தோலிக்கராக 1668 இலும், தாய் எட்டாண்டுகள் பின்னரும் ரோமன் கத்தோலிக்கராக மதம் மாறினர். ஆனாலும் மேரியும், ஆனும் ஆங்கிலிக்கர்களாகவே தொடர்ந்தும் இருந்தனர்.[3] இவர்கள் இருவரும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து ரிச்மண்ட் அரண்மனையில் வளர்ந்து வந்தனர்.[4] 1671 இல் தாயார் இறக்கவே, தந்தை 1673 இல் மேரி என்னும் கத்தோலிக்கரைத் திருமணம் புரிந்தார். இவர் மேரியை விட 4 வயதே மூத்தவர்.[5]

15-வது அகவையில், மேரியை ஒல்லாந்தைச் சேர்ந்த வில்லியமுக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கப்பட்டது. வில்லியம் இரண்டாம் சார்லசு மன்னரின் சகோதரி மேரியின் மகன் ஆவார். இவர் புரட்டஸ்தாந்து மதத்தவர்.[6] ஆரம்பத்தில், இரண்டாம் சார்லசு, இடச்சு ஆட்சியாளருடன் சம்பந்தம் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் மேரியை பிரெஞ்சு இளவரசர் லூயிக்குக் கொடுக்க விரும்பியிருந்தார். லூயி கத்தோலிக்கராக இருந்ததால் அவர் பிரான்சுடன் இணைப்பை ஏற்படுத்த விரும்பியிருந்தார். ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அழுத்தத்தினால் வில்லியமை ஏற்றுக் கொண்டார்.[7] தந்தை யேம்சு வில்லியமை மணக்க மேரியிடம் கூறிய போது, "அவள் அன்று முழுவதும், அடுத்த நாளும் கண்ணீர் சிந்தியபடி இருந்தாள்" என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[8]

திருமணம்[தொகு]

Portrait by Peter Lely, 1677

வில்லியமும் மேரியும் 1677 நவம்பர் 4 இல் திருமனம் புரிந்து கொண்டனர்.[9] திருமணத்தின் இருவரும் டென் ஹாக் சென்றனர்.[10] மேரி பல முறை கருத்தரித்தும் ஒவ்வொரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டது.[11] பிள்ளைகள் இல்லாதது மேரி வாழ்வில் பெரும் சோகத்தைத் தந்தது.[12]

மன்னர் இரண்டாம் சார்ல்சு 1685 பெப்ரவரியில் வாரிசு எவரும் இல்லாமல் இறந்தார். இதனை அடுத்து யோர்க் இளவரசரும் மேரியின் தந்தையுமான இரண்டாம் யேம்சு மன்னரானார்.[13]

மாண்புமிகு புரட்சி[தொகு]

மேரி, 1685

இங்கிலாந்தின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரட்டஸ்தாந்து மததைச் சேர்ந்தவர்கள். மன்னர் யேம்சு கத்தோலிக்கர். புரட்டஸ்தாந்து அரசியல்வாதிகள் மேரியின் கணவர் வில்லியமுடன் தொடர்பில் இருந்தனர்.[14] மன்னர் யேம்சு கத்தோலிக்கர்களுக்கும் அதிருப்திவாதிகளுக்கும் மதச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஆங்கில்க்க மதத்தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் அரசியல்வாதிகளிடையே யேம்சுக்கு எதிரான கருத்து வலுப்பட்டது.[15] யேம்சின் மனைவி மேரிக்கு (மொதீனா) 1688 சூனில் மகன் யேம்சு பிரான்சிசு எட்வர்ட்) பிறந்ததை அடுத்து இச்சர்ச்சை மேலும் வலுவடைந்தது.

யேம்சை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மேரியின் கணவன் வில்லியமை நாடு திரும்புமாறு இரகசியமாக நெதர்லாந்துக்கு செய்தி அனுப்பப்பட்டது.[16] மேரியின் சம்மதத்துடன் வில்லியம் இடச்சுப் படைகளுடன் 1688 நவம்பர் 5 இல் இங்கிலாந்து வந்தார்.[17] ஆங்கிலேய இராணுவமும் கடற்படையும் வில்லியமுக்கு சார்பாக சண்டையிட்டன.[18] தோல்வியடைந்த யேம்சை நாட்டை விட்டு வெளியேற வில்லியம் அனுமதித்தார். 1688 டிசம்பர் 23 இல் 11 இல் யேம்சு பிரான்சு வந்ஹு சேர்ந்தார். இறக்கும் வரை பிரான்சிலேயே தங்கியிருந்தார்.[19]

1689 பெப்ரவரி 13 இல், நாடாளுமன்றம் யேம்சை பதவியில் இருந்து அகற்றியது.[20][21] யேம்சின் மகனுக்குப் பதிலாக, யேம்சின் மகள் மேரியையும் வில்லியமையும் இணைந்த அரசர்களாக அறிவித்தது.[20]

மறைவு[தொகு]

ஐந்து கினி நாணயத்தில் வில்லியமும் மேரியும், 1692

1694 இறுதியில், மேரி பெரியம்மை நோயினால் பீடிக்கப்பட்டார்.[22] மேரி 1694 டிசம்பர் 28 காலையில் கென்சிங்டன் அரண்மனையில் காலமானார்.[23] ஆட்சிப் பொறுப்பில் பெரிதும் மேரியையே தங்கியிருந்த வில்லியமுக்கு மேரியின் இறப்பு பேரிழப்பாக இருந்தது.[22] பிரித்தானியாவில் மேரிக்கு பெருந்தொகையானோர் அஞ்சலி செலுத்தினர்.[24] அவரது இறுதி நிகழ்வுகள் மார்ச் 5 இல் வெஸ்ட்மினிஸ்டர் மடத்தில் இடம்பெற்றது.[25]

குறிப்புகள்[தொகு]

  1. இரண்டாம் மேரி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் 1689 பெப்ரவரி 13 இலும், இசுக்கொட்டிய நாடாளுமன்றத்தால் 1689 ஏப்ரல் 11 இலும் அரசியாக அறிவிக்கப்பட்டார்.

உசாத்துணைகள்[தொகு]

  • Van der Kiste, John (2003) William and Mary. Stroud, Gloucestershire: Sutton Publishing. ISBN 0-7509-3048-9.
  • Waller, Maureen (2006). Sovereign Ladies: The Six Reigning Queens of England. London: John Murray. ISBN 978-0-7195-6628-8.

மேற்கோள்கள்[தொகு]

  1. Waller, p. 249
  2. Waller, p. 252
  3. Van der Kiste, p. 32
  4. Waller, p. 251
  5. Waller, p. 255
  6. Waller, p. 256
  7. John Pollock. The Policy of Charles II and James II. (1667–87.) இம் மூலத்தில் இருந்து 2013-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130613093303/http://www.uni-mannheim.de/mateo/camenaref/cmh/cmh509.html. பார்த்த நாள்: 2018-05-26. 
  8. Mary's chaplain, Dr Edward Lake, quoted in Waller, p. 257
  9. Van der Kiste, pp. 47–48; Waller, p. 258
  10. Van der Kiste, p. 52
  11. Van der Kiste, pp. 57, 58, 62
  12. Van der Kiste, p. 162; Waller, p. 262
  13. Van der Kiste, p. 76
  14. Van der Kiste, p. 86
  15. Van der Kiste, p. 91
  16. Van der Kiste, pp. 93–94
  17. Van der Kiste, pp. 100–102
  18. Van der Kiste, p. 104
  19. Van der Kiste, pp. 105–107
  20. 20.0 20.1 "King James' Parliament: The succession of William and Mary". The History and Proceedings of the House of Commons: volume 2. British History Online. 1742. பக். 255–77. http://www.british-history.ac.uk/commons-hist-proceedings/vol2/pp255-277. பார்த்த நாள்: 19 September 2006. 
  21. "William III and Mary II". The Royal Household. பார்க்கப்பட்ட நாள் 18 September 2006.
  22. 22.0 22.1 Van der Kiste, p. 177
  23. Van der Kiste, pp. 179–180
  24. Waller, p. 288
  25. Van der Kiste, p. 186; Waller, p. 289

வெளி இணைப்புகள்[தொகு]

மேரி II
இசுடுவர்ட் மாளிகை
பிறப்பு: 30 ஏப்ரல் 1662 இறப்பு: 28 டிசம்பர் 1694
அரச பட்டங்கள்
காலியாக உள்ளது
முன்னர் இப்பதவியினை வகித்தவர்
யேம்சு II
இங்கிலாந்து அரசி,
இசுக்கொட்லாந்து, அயர்லாந்து அரசி

1689–1694
with வில்லியம் III & II
பின்னர்
வில்லியம் III