ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்கர் பிஸ்டோரியஸ்
டேகு, தென்கொரியாவில் 2011 தட கள விளையாட்டு உலகப்போட்டிகளில் பிஸ்டோரியஸ்
தனித் தகவல்கள்
விளிப்பெயர்(கள்)"பிளேடு ரனர்" (Blade Runner)
பிறந்த நாள்22 நவம்பர் 1986 (1986-11-22) (அகவை 37)
பிறந்த இடம்ஜொஹானஸ்பேர்க், டிரான்ஸ்வால் மாகாணம், தென்னாப்பிரிக்கா
உயரம்1.84 m (6 அடி 12 அங்), கட்டுறுப்புநம் உடன்[1]
எடை80.6 kg (178 lb) (2007)[2]
இணையதளம்www.oscarpistorius.com
விளையாட்டு
நாடுதென்னாப்பிரிக்கா
விளையாட்டுஓட்டல்
நிகழ்வு(கள்)குறுவிரையோட்டம் (100, 200, 400 மீ)

ஆஸ்கர் லெனர்ட் கார்ல் பிஸ்டோரியஸ் (Oscar Leonard Carl Pistorius, பி. நவம்பர் 22, 1986) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர். இவரது இயற்பெயர் ஆஸ்கர் லியோனார்டு கார்ல் பிஸ்டோரியஸ் என்பதாகும். இவருக்கு முட்டிக்கு கீழே கால்கள் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசையும் பெற்றுள்ளார். 2012 கோடைகால ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைகள்[தொகு]

2004 தொடங்கி, 2008 வரையிலும் நடைபெற்ற போட்டிகளில் குறைந்த நேரத்தில் ஓடி தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். இதில் நூறு மீட்டர், இருநூறு மீட்டர், நானூறு மீட்டர், தொடர் ஓட்டப் போட்டிகளும் அடங்கும். இவரது சாதனைகளைப் பாராட்டி தென்னாப்பிரிக்காவின் அதிபர் உயரிய விருதை வழங்கி பெருமைப்படுத்தினார். 2008 இல் டைம்ஸ் இதழ் வெளியிட்ட சிறந்த நூறு நபர்களில் இவருடைய பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கு[தொகு]

பிப்ரவரி 14, 2013 அன்று, பிரிட்டோரியாவில் பிஸ்டோரியஸ் வீட்டில் அவரது காதலி ரீவா ஸ்டீன்காம்ப் கொலை செய்யப்பட்டார். அடுத்த நாள் பிரிட்டோரியா காவல்துறை பிஸ்டோரியசை கைது செய்து அவர் மீது கொலை குற்றச்சாட்டியது. மார்ச் 3, 2014 அன்று, பிரிட்டோரியா உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. நவம்பர் 2021 இல், தென்னாப்பிரிக்க சிறை அதிகாரிகள் ஆஸ்கார் பிஸ்டோரியஸின் பரோலை பரிசீலிப்பதற்கான முதல் நடைமுறை நடவடிக்கைகளைத் தொடங்கினர், அவர் தனது காதலியைக் கொன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

சான்றுகள்[தொகு]

  1. John Leicester (5 செப்தெம்பர் 2012), "Column: History-maker Pistorius a hypocrite, too?", The Huffington Post, archived from the original on 7 March 2014
  2. Josh McHugh (March 2007), "Blade Runner", Wired, vol. 15, no. 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்கர்_பிஸ்டோரியஸ்&oldid=3799944" இலிருந்து மீள்விக்கப்பட்டது