ஆமிஷ் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமிஷ் மக்களின் பாரம்பரியக் குதிரை வண்டிப் பயணம்

ஆமிஷ் மக்கள் (Amish) தீவிரமான கிறித்துவத்தைப் பின்பற்றும் மக்கள் ஆவர். இவர்கள் அமெரிக்காவின் பென்ஸில்வேனியா, ஒஹையோ மற்றும் இண்டியானா ஆகிய மூன்று மாகாணங்களில் அதிக அளவு வாழ்கின்றனர். மிகவும் எளிமையான வாழ்க்கையை இவர்கள் கடைபிடிக்கின்றனர். இவர்களின் முதன்மையான கொள்கையானது விவிலியத்தில் குறிப்பிப்பட்டிருப்பதை அவ்வாறே பின்பற்றுவது, அதில் கூறப்படாத எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதுமாகும் இதனால் விவிலியத்தில் கூறப்படாத புதுமைகளான அறிவியல் வளர்ச்சியின் விளைவுகளான மின்சாரப் பொருட்கள், பெட்ரோல் வாகனங்கள் போன்ற நவீன அறிவியல் உபகரணங்கள் எதையும் இவர்கள் உபயோகப்படுத்துவதில்லை. சமையலுக்கு விறகுகளையும், பயணத்திற்கு குதிரை வண்டிகளையும் பயன்படுத்துகின்றனர் இரவில் வெளிச்சத்திற்கு எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் இவர்கள் பிற சமூக மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வாழ்கின்றனர்.

வரலாறு[தொகு]

கி.பி.1690ளில் ஐரோப்பாவின் ஸ்விட்ஸர்லாந்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினர் சக கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவ மதத்தை சரியாகப் பின்பற்றவில்லை என்று தனியாக பிரிந்து சென்றனர்.[1] ஜேகோப் அம்மான் என்பவர் தலைமையில் இப்படி உருவான இந்த கிறிஸ்துவப் பிரிவானது பிற்காலத்தில் ஆமிஷ் என்ற பெயரை பெற்றது. [2] இம்மக்கள் 18 ஆம் நூற்றாண்டில் போர், பஞ்சம், வேலை தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் குடியேறி அங்கேயே வாழத் தொடங்கினர். இவர்கள் பேசும் மொழியானது பென்சில்வேனியா டச்சுமொழி அல்லது பென்சில்வேனியா ஜெர்மன் மொழி என அழைக்கப்படுகிறது. இச்சமூகம் அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இவர்கள் மத்தியில் குழந்தை இறப்பு விகிதம் கூடுதலாக உள்ளது, என்றாலும் விவிலியத்தில் பல்கிப் பெருகுங்கள் என்று கூறியபடி ஒவ்வொரு பெண்ணும் 6- 7 பிள்ளைகள் என மிகுதியான குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். எனவே இவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. 1920 இல் 5000 ஆக இருந்த இந்த மக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 2016 ஆம் ஆண்டில் 308030 ஆக உயர்ந்துள்ளது.[3] பொதுவாக இவர்களின் பிள்ளைகளை இவர்களே நடத்தும் பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை படிக்கின்றனர் இதுவரையே படிப்பு போதும் என கருதும் இவர்கள் 16 வயதில் வேளாண்மை, குதிரை வளர்த்தல், தச்சுத் தொழில், இரும்புப்பட்டறை போன்ற தொழில் கல்வியைக் கற்கின்றனர். சமூகக்கட்டுப்பாட்டை மீறுபவர்கள் சமூகத்தை விட்டு விலக்கப்படுவதுடன், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றனர், இச்சமூக மனிதர் சமூகத்தைவிட்டு வெளியில் சென்று வாழ்வது கடினம் என்பதால் சமூக்க் கட்டுப்பாட்டை பெரும்பாலம் மீறாமல் வாழ்கின்றனர். இச்மூகத்தில் கட்டுப்பாடு காரணமாக அகமண முறையே நிலவுகிறது. இவர்களின் அமைதியான வாழ்வைக்கண்டு அதுபோல வாழ எண்ணி இந்த சமயப் பிரிவுக்கு மாறிய பிறய மக்ளும் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை முறையை காண வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பாரம்பரிய முறையில் உணவு விடுதியையும் இம்மக்கள் நடத்தி வருகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kraybill 2001, ப. 7–8.
  2. Kraybill 2001, ப. 8.
  3. இராமியா (பெப்ரவரி 2017). "ஆமிஷ் சமூகம்". சிந்தனையாளன்: 47-48. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமிஷ்_மக்கள்&oldid=3725968" இலிருந்து மீள்விக்கப்பட்டது