ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா
இயக்கம்பெய்டன் ரீட்
தயாரிப்புகேவின் பிகே
கதைஜெஃப் லவ்னஸ்
இசைகிறிஸ்டோப் பெக்
நடிப்பு
ஒளிப்பதிவுபில் போப்
படத்தொகுப்புஆடம் கெர்ஸ்டெல்
லாரா ஜென்னிங்ஸ்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 6, 2023 (2023-02-06)(ரீஜென்சி வில்லேஜ் தியேட்டர்)
பெப்ரவரி 17, 2023 (ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்
மொத்த வருவாய்$476.1 மில்லியன்

ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா (ஆங்கில மொழி: Ant-Man and the Wasp: Quantumaniar) என்பது 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரங்களான ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் மற்றும் ஹோப் வான் டெய்ன் / வாஸ்ப் ஆகியவற்றை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2015 ஆம் ஆண்டு வெளியான ஆன்ட்-மேன் மற்றும் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பத்தொன்றாவது திரைப்படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை பெய்டன் ரீட் என்பவர் இயக்க,[1][2][3] ஜெஃப் லவ்னஸ் என்பவர் கதை எழுதியுள்ளார்.[4] கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் பால் ருத்,[5][6] இவாஞ்சலீன் லில்லி,[7] மைக்கேல் பெனா, மிச்செல் பைபர்,[8][9] மைக்கேல் டக்ளஸ்,[10] கேத்ரின் நியூட்டன்[11] மற்றும் ஜொனாதன் மேஜர்ஸ்[12] ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஆன்ட்-மேன் திரைப்படத்தின் மூன்றாவது படத்திட்டங்கள் நவம்பர் 2019 இல் உறுதி செய்யப்பட்டன, இப்படத்தில் பெய்டன் ரீட் மற்றும் பால் ருத் ஆகியோர் மீண்டும் பணிபுரிகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று நோயின் போது ஏப்ரல் 2020 க்குள் ஜெஃப் லவ்னஸ் பணியமர்த்தப்பட்டார். அதை தொடர்ந்து இப்படத்தின் தலைப்பு மற்றும் புதிய நடிகர்கள் பற்றிய அறிவுப்பு டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பட பிடிப்பு பிப்ரவரி 2021 இல் துருக்கியில் நடைபெற்றது,[13] அதே நேரத்தில் கூடுதல் படப்பிடிப்பு சான் பிரான்சிஸ்கோவில் ஜூன் நடுப்பகுதியில் நடந்தது, ஜூலை மாத இறுதியில் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பைன்வுட் படப்பிடிப்பு வளாகத்தில் முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது.

ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா என்ற படம் பிப்ரவரி 6, 2023 அன்று வெஸ்ட்வுட், லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தில் முதல் படமாக பிப்ரவரி 17 அன்று அமெரிக்காவில் வெளியாகி, உலகளவில் $476.1 மில்லியன் வசூலித்த போதிலும், இது வசூல் ரீதியாக ஏமாற்றத்தை அளித்தது மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kroll, Justin (November 1, 2019). "'Ant-Man 3' Moving Forward With Director Peyton Reed". Variety. Archived from the original on November 1, 2019. பார்க்கப்பட்ட நாள் November 2, 2019.
  2. Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 1, 2019. பார்க்கப்பட்ட நாள் November 1, 2019.
  3. Davis, Brandon (July 3, 2018). "'Ant-Man and the Wasp' Director Teases 'Ant-Man 3' Plans". ComicBook.com. Archived from the original on July 3, 2018. பார்க்கப்பட்ட நாள் November 2, 2019.
  4. Couch, Aaron (July 2, 2018). "'Ant-Man and the Wasp' Director on Wooing Michelle Pfeiffer and His Marvel Future". The Hollywood Reporter. Archived from the original on July 4, 2018. பார்க்கப்பட்ட நாள் November 1, 2019.
  5. Fullerton, Huw (October 13, 2019). "Paul Rudd says there have been "conversations" about Ant-Man's return: "There are some things we do know"". Radio Times. Archived from the original on October 13, 2019. பார்க்கப்பட்ட நாள் November 2, 2019.
  6. Itzkoff, Dave (October 8, 2019). "Paul Rudd, the One-Man Double Act". The New York Times. Archived from the original on October 8, 2019. பார்க்கப்பட்ட நாள் November 1, 2019.
  7. Greene, Jamie (February 7, 2019). "Why Evangeline Lilly Loved 'The Hobbit' and Wanted to Be in 'Star Wars'". Syfy Wire. Archived from the original on June 16, 2019. பார்க்கப்பட்ட நாள் November 2, 2019.
  8. Marnell, Blair (December 8, 2020). "Michelle Pfeiffer Says She's Back For Ant-Man 3 In Spring 2021". Superhero Hype. Archived from the original on December 8, 2020. பார்க்கப்பட்ட நாள் December 8, 2020.
  9. Dumaraog, Ana (October 3, 2019). "Michelle Pfeiffer Wants To Make 'Ant-Man 3'". Screen Rant. Archived from the original on October 4, 2019. பார்க்கப்பட்ட நாள் November 2, 2019.
  10. Drysdale, Jennifer (February 7, 2019). "Michael Douglas Says 'There's Been Talk' About 'Ant-Man 3'". Entertainment Tonight Online. Archived from the original on February 8, 2019. பார்க்கப்பட்ட நாள் November 1, 2019.
  11. Gemmill, Allie (December 10, 2020). "'Ant-Man 3' Title and Kathryn Newton Casting for MCU Threequel Revealed". Collider. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
  12. Kroll, Justin (September 14, 2020). "Jonathan Majors Joins Marvel Cinematic Universe, Lands Major Role In Next 'Ant-Man' Movie". Deadline Hollywood. Archived from the original on September 14, 2020. பார்க்கப்பட்ட நாள் September 14, 2020.
  13. Ahmet, Yildirim (February 5, 2021). "Ant-Man Türkiye'de çekiliyor!". Teknolojioku.com. Archived from the original on February 5, 2021. பார்க்கப்பட்ட நாள் February 5, 2021.

வெளி இணைப்புகள்[தொகு]