ஆக்சசோலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
5-(4H)- ஆக்சசோலோன் மாற்றியத்தின் வேதிக் கட்டமைப்பு

ஆக்சசோலோன் (Oxazolone) என்பது C3H3NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு வேதிவினைக் குழுவாகவும் செயல்படுகிறது. ஆக்சசோல் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட சேர்மமாகக் கருதப்படும் இதற்கு ஆண்ட்சுசெ-விட்மேன் பெயரிடும் வழிமுறையில் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சசோலோன் சேர்மத்திற்கு மொத்தமாக ஐந்து அமைப்பு மாற்றியங்கள் உள்ளன, அவற்றில் மூன்று மாற்றியங்கள் கார்பனைல் குழுவின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டும் இரண்டு மாற்றியங்கள் இரட்டைப் பிணைப்பு C=X (X= N அல்லது C): பிணைக்கப்பட்டுள்ள இடத்தை அடிப்படையாகக் கொண்டும் அமைகின்றன.

  • 2-(3H)-ஆக்சசோலோன்
  • 2-(5H)-ஆக்சசோலோன்
  • 4-(5H)-ஆக்சசோலோன்
  • 5-(2H)-ஆக்சசோலோன்
  • 5-(4H)-ஆக்சசோலோன்

பெனொசோன், தோசாலினோன், சைக்ளாசொடோன், ரெக்ளாசெபாமெட் போன்ற மருந்துகளில் 4-ஆக்சசோலோனின் நோக்குரு இடம்பெற்றுள்ளது.

5-ஆக்சசோலோன்கள் பதிலீடு செய்யப்பட்ட சேர்மங்களை என்-அசைல் α-அமினோ அமிலங்களின் வளையமாகும் வினையின் விளைபொருட்கள் எனவும், அவற்றை லாக்டோன்களாக மாற்ருகின்றன என்றும் சிலசமயங்களில் அசுலாக்டோன்கள் எனவும் கருதப்படுகின்றன [1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "azlactones". Compendium of Chemical Terminology Internet edition.
  2. K. Mukerjee, Arya (1987). "Azlactones: Retrospect and Prospect". HETEROCYCLES 26 (4): 1077. doi:10.3987/R-1987-04-1077. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சசோலோன்&oldid=2583151" இலிருந்து மீள்விக்கப்பட்டது