அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச் (Alla Genrikhovna Masevich) (அக்தோபர் 9, 1918 — மே 6, 2008) ஒரு சோவியத் உருசிய வானியலாளர் ஆவார். இவர் மாஸ்கோ அரசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1952 இல் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் மன்ற உதவித் தலைவராக இருந்தார். இவர் விக்தர் அம்பர்த்சுமியானுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். இவர் 1972 இல் மாஸ்கோ புயலக்கை, புவிப்பரப்பியல் நிறுவனத்தில் புவியளக்கையியல் பேராசிரியராக விளங்கினார்.[1]

இவர் முதல் உருசியச் செயற்கைக்கோள்களை (1956-57) வானில் நோக்கும் குழுக்களை உருவாக்கினார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

தகவல் வாயில்கள்[தொகு]