அலுமினியம் சல்பசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலுமினியம் சல்பசிட்டேட்டு (Aluminium sulfacetate) என்பது Al2SO4(CH3CO2)4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும் [1][2].

பயன்கள்[தொகு]

இது அலுமினியம் சல்பேட்டு மற்றும் அலுமினியம் அசிட்டேட்டு ஆகிய இரண்டு சேர்மங்களின் இரட்டை உப்பு ஆகும். நிறம் ஊன்றியாக . நெய்யப்பட்ட துணிகளின் மீது சாயத்தை ஊன்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது [3]. குறிப்பாக இரும்பு, அலுமினியம் போன்ற பல்லிணைதிற உலோக அயனிகளை இது கொண்டுள்ளது [4]. கார அலுமினியம் ஈரசிட்டேட்டு அல்லது அலுமினியம் சல்பசிட்டேட்டு, ஆகியவற்றின் கலவை பருத்தி, செல்லுலோசு இழை மற்றும் பட்டு ஆகியவற்ரின் மீது பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் மூவசிட்டேட்டு அலிசாரின் சாயங்களுடன் சேர்க்கப்பட்டு நிற்ம் ஊன்றும் முகவராகப் பயன்படுகிறது [1] தார் மணம் கொண்ட நீர்மங்களான தூய்மையற்ற சல்பசிட்டேட்டு சேர்மத்தை தடைசெய்து தூய்மையான சல்பசிட்டேட்டு சேர்மத்தை தயாரிக்க வேண்டும் என 1989 ஆம் ஆண்டில் கான்சுவிண்ட்டு பரிந்துரைத்தார்[5]. எம்பைரியூமா என்ற வேதியியல் மற்றும் மருத்துவச் சொல் வழக்கற்றுப் போனது. இச்சொல்லின் பொருள் தாவர மற்றும் விலங்குகளை எரிக்கும்போது உண்டாகும் மணம் மற்றும் சுவையுடன் தொடர்புடைய தார்மணம் என்பதைக் குறிக்கிறது[6]. இந்நிறமூன்றியைத் தயாரிக்கும் போதும் பைரோலிக்னியசு அமிலம் எனப்படும் மர அமிலத்தைப் பயன்படுத்துவதால் இத்தகைய மணம் தோன்றுகிறது[5].

தயாரிப்பு[தொகு]

அலுமினியம் சல்பேட்டையும் ஈய(II) அசிட்டேட்டையும் சேர்த்து வினைபுரியச் செய்து அலுமினியம் சல்பசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் இப்பகுதிப்பொருள்களின் அளவு உருவாகும் கலவையின் பகுதிப்பொருள்களை கட்டுப்படுத்துகிறது[1]. இப்பகுதிப் பொருட்களின் விகிதவியல் விகிதம் 3:1 என்ற அளவைத் தாண்டும் போது வினை செயல்முறையானது ஒட்டுமொத்தமாக அலுமினியம் மூவசிட்டேட்டு உருவாக்கத்தை நோக்கி நகர்கிறது. ஈய அசிட்டேட்டின் அளவு குறையும்போது அலுமினியம் மூவசிட்டேட்டும் அலுமினியம் சல்பசிட்டேட்டும் கலவையாக உருவாகின்றன. அலுமினியம் சல்பசிட்டேட்டின் அளவு அதிகரித்து வினைப்பொருளின் மோல் விகிதம் 2:1 என்ற அளவை நோக்கி நகர்கிறது. நிறம் ஊன்றும் செயலுக்குத் தேவையான பல்வேறு வகை கலவைகளைத் தயாரிக்க இப்பண்பு பெரிதும் உதவுகிறது:[1]

Al
2
(SO
4
)
3
  +   3 Pb(CH
3
CO
2
)
2
  →   2 Al(CH
3
CO
2
)
3
  +   3 PbSO
4
.

அசிட்டேட்டு அயனிகளை இடப்பெயர்ச்சி செய்து ஐதராக்சைடு அயனிகளை இடம்பெறச் செய்து Al2SO4(CH3CO2)4 - n(OH)n, என்ற கார அலுமினியம் சல்பசிட்டேட்டையும் தயாரிக்க முடியும். (n = 0) எனில் அலுமினியம் சல்பசிட்டேட்டும் (n = 4) எனில் அலுமினியம் சல்பேட்டு மற்றும் அலுமினியம் ஐதராக்சைடுகளின் இரட்டை உப்பும் (Al2SO4(OH)4) இறுதியாக விளைகின்றன. அலுமினியம் சல்பேட்டின் நீரேற்றுகள் மற்றும் ஈய அசிட்டேட்டுகளிலிருந்தும் அலுமினியம் சல்பசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது:[2]

Al
2
(SO
4
)
3
•18H
2
O
  +   2 Pb(CH
3
CO
2
)
2
•3H
2
O
  →   Al
2
SO
4
(CH
3
CO
2
)
4
  +   2 PbSO
4
  +   24 H
2
O

n = 1 மற்றும் n = 2 ஆக உள்ள நிகழ்வுகளில் உரிய வினைப்பொருளுடன் சோடியம் பைகார்பனேட்டை உபயோகித்து கார அலுமினியம் சல்பசிட்டேட்டுகள் உருவாக்கப்படுகின்றன:[2].

2 Al
2
(SO
4
)
3
•18H
2
O
  +   3 Pb(CH
3
CO
2
)
2
•3H
2
O
  +   2 NaHCO
3
  →   Al
2
SO
4
(CH
3
CO
2
)
3
OH
  +   3 PbSO
4
  +   Na
2
SO
4
  +   2 CO
2
  +   45 H
2
O
Al
2
(SO
4
)
3
•18H
2
O
  +   Pb(CH
3
CO
2
)
2
•3H
2
O
  +   2 NaHCO
3
  →   Al
2
SO
4
(CH
3
CO
2
)
2
(OH)
2
  +   PbSO
4
  +   Na
2
SO
4
  +   2 CO
2
  +   21 H
2
O

n = 3 ஆக உள்ள நிகழ்வுகளில் ஈய அசிட்டேட்டுக்குப் பதிலாக சோடியம் பைகார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலத்தைப் பயன்படுத்தி கார அலுமினியம் சல்பசிட்டேட்டே தயாரிக்கப்படுகிறது [2]

Al
2
(SO
4
)
3
•18H
2
O
  +   CH
3
COOH
  +   4 NaHCO
3
  →   Al
2
SO
4
(CH
3
CO
2
)(OH)
3
  +   2 Na
2
SO
4
  +   CO
2
  +   19 H
2
O
.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 von Georgievics, Georg (2013). The Chemical Technology of Textile Fibres – Their Origin, Structure, Preparation, Washing, Bleaching, Dyeing, Printing and Dressing. Read Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781447486121. https://books.google.com.au/books?id=GL98CgAAQBAJ&pg=PT118&dq=aluminium+acetate+mordant&hl=en&sa=X&ved=0ahUKEwjv3IbHzb3QAhVFNY8KHYOKAu0Q6AEIJTAA. 
  2. 2.0 2.1 2.2 2.3 Hummel, J. J.; Knecht, Edmund (2013) (in German). Die Färberei und Bleicherei der Gespinnstfasern. Springer-Verlag. பக். 116-118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783642912061. https://books.google.com.au/books?id=epufBgAAQBAJ&pg=PA117&dq=%22aluminium+sulfacetate%22&hl=en&sa=X&ved=0ahUKEwil-7C2pL7QAhXHQo8KHeE2APkQ6AEIHDAA. 
  3. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம் (1993). "Mordant". Compendium of Chemical Terminology Internet edition.
  4. Llewellyn, Bryan D. (May 2005). "Stain Theory – How mordants work" இம் மூலத்தில் இருந்து 14 August 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070814015208/http://stainsfile.info/StainsFile/theory/mordant.htm. 
  5. 5.0 5.1 Ganswindt, Albert (1889) (in German). Handbuch der Färberei und der damit verwandten vorbereitenden und vollendenden Gewerbe. பக். 270. http://www.deutschestextarchiv.de/book/view/ganswindt_faerberei_1889?p=296. 
  6. "Definition of empyreuma". Collins Dictionary. 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2016.