அமிர்தம் சூர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தம் சூர்யா
பிறப்புதிசம்பர் 16, 1966 (1966-12-16) (அகவை 57)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிஎழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், பேச்சாளர் ,இதழ் தலைமை துணையாசிரியர்
பெற்றோர்நடராஜன் (தந்தை), சரோஜா(தாய்)
வாழ்க்கைத்
துணை
லதா

அமிர்தம் சூர்யா (Amirtham Surya) தமிழின் நவீன இலக்கிய வெளியில் நவீன கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக, விமர்சகராகத் தொடர்ந்து 25 வருடங்களாய் இயங்கி வருபவர். கடந்த 14 ஆண்டுகளாக கல்கி வார இதழில் தலைமை துணையாசிரியராக பணியாற்றினார் இயற்பெயர் இரா.ந.கதிரவன். கதிரவன் என்ற பெயரில் இருக்கும் ன்– விகுதி பிடிக்காததால் சூர்யா என மாற்றிக்கொண்டார். நூறாண்டு வாழ்ந்த தன் பாட்டி அமிர்தம்மாள் பெயரில் உள்ள அமிர்தம் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியதால் அதை இணைத்துக்கொண்டு அமிர்தம் சூர்யாவாக நற்பெயரை மாற்றிக் கொண்டார். இவர் அமிர்தம் என்ற சிற்றிதழை 1985 களில் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்தினார்.

குடும்பம்[தொகு]

காஞ்சிபுரம் வேராக இருந்தாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 16-12-1966 ல் பிறந்தவரான அமிர்தம் சூர்யாவின் மனைவி பெயர் லதா. இவருக்கு எல். கே. காவ்ய ப்ரிய தர்ஸன், எல். கே. ஆகாஷ் அக்னி மித்ரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

வெளிவந்துள்ள படைப்புகள்[தொகு]

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  • உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை (2000) முன்னுரை-எழுத்தாளர்.ஜெயமோகன்.
  • பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு (2006) முன்னுரை- ஓவியர் சந்ரு.
  • வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்(2012).
  • ஓவிய ப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - காதலிய கவிதைகள் நூல் ( கவிஞர் மனுஷ்ய புத்திரன் முன்னுரையுடன்)---2016

கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]

  • முக்கோணத்தின் நாலாவது பக்கம்(2001) [1]
  • சாகரம்(பெண் சித்தர்கள் தொகுப்பு நூல்) 2022

கதைத் தொகுப்புகள்[தொகு]

  • கடவுளை கண்டுபிடிப்பவன் (2009)(14 சிறுகதைகளின் தொகுப்பு).

நாவல் படைப்பு[தொகு]

பல்லி என்னும் இவருடைய நாவலானது யாவரும் பதிப்பகத்தின் நாவல் போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறது. இந்நாவல் பின் நவீனத்துவ நாவல் வகையைச் சார்ந்தது. சமூகத்தில் நிகழும் சாதி உக்கிரத்தினை வெளிப்படுத்தும் விதத்தை படைப்பின் வாயிலாய் பதிவு செய்து இருக்கிறது.

பத்திரிக்கை பங்களிப்புகள்[தொகு]

  • சித்தர்கள் மீதான நம்பிக்கையும் அதன் மீதான தேடலும்கொண்டவர். தீபம் (ஆன்மிக இதழ்) இதழில் சித்தர்களின் ஜீவ சமாதிகளைத் தேடி ஒரு பயணமாக ”ஆசிபெறலாம் வாங்க” என்ற தலைப்பில் 16 வாரம் தொடர் எழுதியவர்.
  • கல்கி வார இதழில் ”தவணைமுறை தற்கொலை” என்ற தலைப்பில் குடியிலிருந்து மீளும் வழிமுறை சொல்லும் 16 வாரம் தொடர் எழுதியவர்.


  • விளிம்பு நிலை மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்து பயிற்சி அளித்து சிறுவர்களுக்களுக்கான இலக்கியத்தை சிறுவர்களையே எழுத வைத்தும் புத்தகமாக அச்சிட்டு வெளிவர உதவியுள்ளார்.
  • மானுடம் என்ற அறக்கட்டளையின் ஒரு அறங்காவலராய் [2] இருந்து ஏழை பிள்ளைகளுக்கு (பத்தாம் வகுப்பு வரை) இரவு பாடசாலை நடத்தி வந்திருக்கிறார்.
  • சிறுவர்களுக்கு சிறுவர்களால் நடத்தும் ஒரு சிற்றிதழுக்கு ஆலோசகராய் இருந்து சிறுவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்

இலக்கியப் பணி[தொகு]

தமிழகம் முழுதும் கல்லூரிகளுக்கு சென்று தமிழ் வளர்ச்சி மற்றும் இலக்கிய மன்றச் சொற்பொழிவு[3], இலக்கிய நூல் விமர்சன[4] உரையாற்றி மாணவர்களிடையே பரவலாக அறியப்பட்டவராக இருந்திருக்கிறார்.

  1. இவர் தன்னுடைய கருமாண்டி ஜங்ஷன் (Karumaandi Junction)என்னும் யூடியூப் வலைதளம் மூலம் தமிழ் இலக்கியச் சேவையை தொடர்ந்து ஆற்றி வருகிறார்.எழுத்தாளர்களையும்,கவிஞர்களையும் உற்சாகப்படுத்தி தமிழ் மொழியில் பல புதிய படைப்பாளர்களையும்,படைப்புகளும் வெளிவர உறுதுணையாக உள்ளவராக இருக்கிறார்.

[https://youtube.com/@karumaandijunction8868?si=kuSjLdh5IGpVKLW9 2- இராம .செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை மூலம் அதன் நிறுவனர் எழுத்தாளர் தேவா சுப்பையா உடன் இணைந்து அந்த அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருடம் தோறும் சிறுகதை போட்டியை நடத்தி வருபவர் ஆவார். அந்த அறக்கட்டளை 60,000 பரிசுடன் ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்தி வருகிறது. தேர்வான கதைகளை சுவடு பதிப்பகம் மூலம் நூலாக கொண்டுவந்து புதிய சிறுகதையாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் .[1] 3.இலக்கியப்பணி- தமிழகம் முழுதும் கல்லூரிகளுக்கு சென்று இலக்கிய மன்றங்களில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றி மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை தூண்டி தமிழ் பணி ஆற்றி வருகிறார். மேலும் தமிழகம் முழுதும் பயணம் செய்து நூல் வெளியீடு மற்றும் விமர்சன கூட்டங்களில் உரை ஆற்றி வருபவராக உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் தமது இணைய தளத்தில் இதை பதிவு செய்து பாராட்டி இருக்கிறார் .கபிலனின் ஸ்ருதி டிவி சேனலில் அமிர்தம் சூர்யாவின் இலக்கிய உரைகள் சுமார் 30க்கும் மேற்பட்டவை வெளிவந்துள்ளது

இதுவரை இவர் பெற்றுள்ள விருதுகள்[தொகு]

  1. திருப்பூர் தமிழ் சங்க விருது.
  2. தினகரன் பரிசு
  3. ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது-
  4. எழுச்சி அறக்கட்டளை விருது(சிறந்த நாடக ப்ரதிக்காக)-
  5. சி.கனகசபாபதி விருது-
  6. பூவரசி விருது 2015-இல் அளிக்கப்பட்டுள்ளது
  7. அன்னம் விருது 2015- இல் அளிக்கப்பட்டுள்ளது..
  8. செளமா மதிப்புறு விருது 2020- இல் அளிக்கப்பட்டுள்ளது
  9. சி.எல்.ஆர் விருது 2021-இல் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "'கடவுளைக் கண்டுபிடிப்பவன்' - அமிர்தம் சூர்யா". Archived from the original on 2010-11-10. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
  2. "பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு! - அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு லதா ராமகிருஷ்ணன் திண்ணை இதழ்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
  3. இலக்கிய சொற்பொழிவு
  4. இலக்கிய நூல் விமர்சனம்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தம்_சூர்யா&oldid=3912095" இலிருந்து மீள்விக்கப்பட்டது