அக்காதியம்
அக்காதிய மொழி | |
---|---|
ஆப்பெழுத்து | |
அக்காதிய மொழிக் கல்வெட்டு | |
நாடு(கள்) | அக்காடியப் பேரரசு |
பிராந்தியம் | மெசொப்பொத்தேமியா |
ஊழி | கிமு 2500 முதல் கிபி 1000 வரை |
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்
| |
ஆப்பெழுத்து | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | அக்காடியப் பேரரசு |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | akk |
ISO 639-3 | akk |
மொழிக் குறிப்பு | akka1240[1] |
அக்காதியம் ஒரு செமித்திய மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு செமிடிக் மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும்.[2] சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, அது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும். இம்மொழி கிமு 2500 முதல் கிமு 1000 முடிய பேசப்பட்டது.
வகைகள்
[தொகு]அக்காது மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.
- பழைய அக்காத்திய மொழி கிமு 2500 – 1950
- பழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530
- மத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000
- புதிய-பாபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600
- பிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100
-
செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்
-
தெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்
குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Akkadian". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Akkadian language