அகதா கிறிஸ்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாம் அகதா கிறிஸ்டி
DBE
பிறப்புஅகதா மேரி க்ளாரிசா மில்லர்
(1890-09-15)15 செப்டம்பர் 1890
டோர்க்கா, டேவொன், இங்கிலாந்து
இறப்பு12 சனவரி 1976(1976-01-12) (அகவை 85)
வேலிங்க்ஃபோர்டு, ஆக்ஸ்ஃபோர்டுசைர், இங்கிலாந்து
புனைபெயர்மேரி வெஸ்ட்மாகொட்
தொழில்புதினம், சிறுகலை எழுத்தாளர், நாடகாசிரியர், கவிஞர்
தேசியம்British
வகைகுற்றப்புனைவு, திகில் புனைவு, துப்பறிவுப் புனைவு, காதல் புனைவு
இலக்கிய இயக்கம்துப்பறிவுப்புனைவின் பொற்காலம்
துணைவர்ஆர்க்கிபால்ட் கிறிஸ்டி(1914–1928)
மேக்ஸ் மல்லோவன் (1930–1976; இறப்பு)
பிள்ளைகள்ரோசலின்ட் ஹிக்ஸ்(1919–2004)
இணையதளம்
http://www.agathachristie.com

அகதா கிறிஸ்டி (Agatha Christie, செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றியவராகக் கருதப்படுகிறார்.

இவரது மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap ) 1952 நவம்பர் 25 இல் முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டுச் சாதனை படைத்துள்ளது.

ஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை.

12 சனவரி 1976இல் தனது 85ஆம் வயதில் வயது மூப்பின் காரணமாக தனது வீட்டில் இறந்தார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகதா_கிறிஸ்டி&oldid=3621631" இலிருந்து மீள்விக்கப்பட்டது