உள்ளடக்கத்துக்குச் செல்

XXX (2002 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
XXX
பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்ரோப் கோஹன்
தயாரிப்புநீல் எச். மோரிட்ஸ்
கதைரிச் வில்க்ஸ்
இசைராண்டி எடில்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுடீன் செம்லர்
படத்தொகுப்பு
கலையகம்கொலம்பியா பிக்சர்ஸ்
ரெவெல்யேசன் ஸ்டுடியோஸ்[1]
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுஆகத்து 9, 2002 (2002-08-09)
ஓட்டம்124 நிமிடங்கள்[2]
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$88.3 மில்லியன்[3]
மொத்த வருவாய்$277.4மில்லியன்[4]

XXX (டிரிபிள் எக்ஸ் என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது 2002-ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அதிரடித் திரைப்படமாகும். நீல் எச். மோரிட்ஸ் தயாரிப்பில், ரிச் வில்க்ஸ் எழுத்தில் வெளியான இப்படத்தை ரோப் கோஹன் என்பவர் இயக்கியிருந்தார். டிரிபிள் எக்ஸ் திரைப்படத் தொடரின் முதல் பாகத்தில், வின் டீசல் சான்டர் கேஜ் என்ற பாத்திரமாக நடித்திருந்தார். பரபரப்பான தீவிர விளையாட்டு ஆர்வலராகவும், சண்டையிடுபவராகவும், தடகள வீரராக மாறிய உளவாளியாக அவர் தோன்றினார். மத்திய ஐரோப்பாவில் உருசிய பயங்கரவாதிகளின் குழுவிற்குள் ஊடுருவ ஒரு ஆபத்தான பணிக்காக கேஜ் அனுப்பப்படுகிறார். இப்படத்தில் ஆசியா அர்ஜென்டோ, மார்டன் சோகாஸ் மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். கோஹன், மோரிட்ஸ் மற்றும் டீசல் ஆகியோர் இதற்கு முன்பு தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ் (2001) படத்தில் முறையே இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களாக பணியாற்றியுள்ளனர். இந்த படம் சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் நிறுவனத்தால் ஆகஸ்ட் 9,2002 அன்று வெளியிடப்பட்டு உலகளவில் $1 மில்லியனை வசூலித்தது. அதைத் தொடர்ந்து இரண்டு xXx: ஸ்டேட் ஆஃப் தி யூனியன் (2005), xXx: ரிட்டர்ன் ஆஃப் ஸாண்டர் கேஜ் (2017) என தொடர்ச்சிகள், வெளியாகின.[5]

தயாரிப்பு

[தொகு]

2001ஆம் ஆண்டு ஜூலை மாதம், இப்படத்தில் நடிப்பதற்காக வின் டீசலுக்கு சுமார் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், ஜூலை 26, 2002 அன்று படம் வெளியாகும் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டது.[6] டீசல் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, எரிக் பானா சாண்டர் கேஜ் என்ற முக்கிய கதாபாத்திரத்தை நிராகரித்ததாக நம்பப்படுகிறது.[7] 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திரைக்கதை எழுதப்படுவதற்கு முன்பே, சோனி நிறுவனம் ஹாலிவுட்டில் இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் ஒரு பெரிய விளம்பரப் பலகையை நிறுவியது.[8]

படப்பிடிப்பு மூன்று இடங்களில் நடைபெற்றது. படத்தின் பெரும்பகுதி செக் குடியரசின் பிராகாவில் படமாக்கப்பட்டுள்ளது.[9] கலிபோர்னியாவின் ஆபர்ன் நகரில் உள்ள ஆபர்ன் மாநில பொழுதுபோக்கு பகுதியில் அமைந்துள்ள பாரஸ்ட்ஹில் பாலத்தில், கார்கள் தாவும் காட்சி படமாக்கப்பட்டது..[10] இறுதிக்காட்சிகள் போரா போரா, தாகித்தி மற்றும் தெற்கு மேற்கு வர்ஜீனியாவின் பிற பகுதிகளில் படமாக்கப்பட்டன.

இந்தத் திரைப்படத்திற்காகப் பல செக் நாட்டு சுகோய் இரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்களின் கடைசி நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகு. செக் விமானப்படை 2002-ல் சுகோய் விமானங்களைச் சேவையிலிருந்து நீக்கியது.

வரவேற்பு

[தொகு]

இத்திரைப்படம் 3,374 திரையரங்குகளில் திரையிடப்பட்டு முதல் வார இறுதியில் $44,506,103 வசூலித்தது.[11] இது மொத்தமாக 142 மில்லியன் டாலர்களையும், சர்வதேச அளவில் மேலும் 135 மில்லியன் டாலர்களையும் வசூலித்து, உலகளவில் மொத்தமாக 277.4 மில்லியன் டாலர்களையும் வசூலித்தது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "XXX (2002)". AFI Catalog of Feature Films. Retrieved 2019-07-21.
  2. "XXX (12A) (CUT)". British Board of Film Classification. 2002-09-24. Archived from the original on March 7, 2014. Retrieved 2012-10-19.
  3. Lang, Brent (September 1, 2011). "'Inside the Revolution Library: Where Joe Roth Went Wrong". TheWrap.com. Retrieved June 28, 2017.
  4. 1 2 "XXX (2002)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved August 6, 2011.
  5. "'Furious' Vin Diesel Will Star in Revolution Studios' Spy Thriller 'XXX'". hive4media.com. July 31, 2001. Archived from the original on August 9, 2001. Retrieved September 21, 2019 via The Hollywood Reporter.
  6. "'Furious' Vin Diesel Will Star in Revolution Studios' Spy Thriller 'XXX'". hive4media.com. July 31, 2001. Archived from the original on August 9, 2001. Retrieved September 21, 2019 via The Hollywood Reporter.
  7. "The incredible rise of Mr Bana". The Age. October 15, 2002. Retrieved May 18, 2022.
  8. "Extreme Weekend for XXXسکس (2002)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved May 23, 2012.
  9. Koehler, Robert (5 August 2002). "XXX". Variety. highlighted by lenser Dean Semler and designer Gavin Bocquet turning Prague into one of pic's major attractions.
  10. PHILIP SLEDGE APR. 19. 2020 (19 April 2020). "xXx: 10 Behind The Scenes Facts About The Vin Diesel Movie". CINEMABLEND.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  11. Gray, Brandon (August 12, 2002). "Extreme Weekend for 'XXX'". Box Office Mojo. Archived from the original on May 15, 2023. Retrieved May 15, 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=XXX_(2002_திரைப்படம்)&oldid=4547752" இலிருந்து மீள்விக்கப்பட்டது