விக்கிப்பீடியா:பெயர்வெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:NS இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அடிப்படை பெயர்வெளிகள் பேச்சு பெயர்வெளிகள்
0 (முதன்மை/கட்டுரை) பேச்சு 1
2 பயனர் பயனர் பேச்சு 3
4 விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு 5
6 படிமம் படிமப் பேச்சு 7
8 மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு 9
10 வார்ப்புரு வார்ப்புரு பேச்சு 11
12 உதவி உதவி பேச்சு 13
14 பகுப்பு பகுப்பு பேச்சு 15
100 வலைவாசல் வலைவாசல் பேச்சு 101
118 வரைவு வரைவு பேச்சு 119
710 TimedText TimedText talk 711
828 Module Module talk 829
பயன்படுத்தப்படாத பெயர்வெளிகள்
108 [[Wikipedia:Books|]] 109
446 [[Wikipedia:Course pages|]] 447
2300 [[Wikipedia:Gadget|]] 2301
2302 [[Wikipedia:Gadget|]] 2303
-1 சிறப்பு
-2 ஊடகம்
குறுக்கு வழி:
WP:NS

விக்கிபீடியா பெயர்வெளி என்பது மீடியாவிக்கி மென்பொருளால், முக்காற்புள்ளி இணைந்திருக்கும் முன்னொட்டுவுடன் துவங்கும் குறிப்பிட்ட பக்கங்களையோ அல்லது முதன்மை பெயர்வெளி என்றால் இவ்வொட்டு இல்லாமலும், அடையாளம் காணக்கூடிய விக்கிபக்கங்கள் ஆகும். காட்டாக பயனர் பெயர்வெளியில் அனைத்து பக்கங்களும் "பயனர்:"என்று துவங்கும். கலைக்களஞ்சிய பக்கங்கள் முதன்மை பெயர்வெளியில் இருப்பதால் எந்தவொரு முன்னொட்டும் தேவையில்லை. தெளிவிற்காக கூறுவதென்றால் முன்னொட்டு இல்லாது துவங்கப்படும் பக்கங்கள் கலைக்களஞ்சியப் பக்கங்களாகக் கொள்ளப்படும்.

விக்கிபீடியாவில் தற்போது 20 பெயர்வெளிகள் உள்ளன:ஒன்பது அடிப்படை பெயர்வெளிகள்,ஒவ்வொன்றிற்கும் அதற்கான பேச்சு பெயர்வெளி;மற்றும் இரு மெய்நிகர் பெயர்வெளிகள். இவற்றை வலது பக்க பெட்டியில் காணலாம்.

குறிப்பு: "விக்கிபீடியா:"அல்லது "விக்கிபீடியா பேச்சு:" என்பதற்கு "WP:" அல்லது "WT:" என்ற குறுக்கங்களையும் தேடலிலும் இணைப்புகளிலும் பயன்படுத்தலாம்.

அடிப்படை பெயர்வெளிகள்[தொகு]

விக்கிபீடியாவின் ஒன்பது அடிப்படை பெயர்வெளிகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டினை கீழே காணலாம்.

  • முதன்மை பெயர்வெளி (முன்னொட்டு ஏதுமில்லை): உள்ளடக்கம் - அனைத்து கலைக்களஞ்சிய பக்கங்கள்,பட்டியல்கள், தெளிவாக்கல் பக்கங்கள்DIS மற்றும் கலைக்களஞ்சிய மீள்வழிப்படுத்தல் பக்கங்கள்redirects.
  • திட்டம் பெயர்வெளி அல்லது விக்கிபீடியா பெயர்வெளி (முன்னொட்டு விக்கிபீடியா:): உள்ளடக்கம் - விக்கிபீடியா திட்டம் பற்றிய பல பக்கங்கள்: தகவல்,கொள்கை,கட்டுரைகள்,செயல்பாடுகள்,உரையாடல்கள் முதலியன. முன்னொட்டு WP: எனவும் குறிக்கலாம் (பார்க்க கீழே மறுபெயர்கள் ), இங்கு பக்கங்களை எளிதாக அணுக பல சிறு மீள்வழிப்படுத்தல் பக்கங்கள் உள்ளன - காட்டாக, விக்கிபீடியா:விக்கிபீடியா ஒரு அகரமுதலி அல்ல வை இவ்வாறு குறிப்பிடலாம் WP:விக்கிபீடியா ஒரு அகரமுதலி அல்ல அல்லது மீள்வழிப்படுத்தல் பக்கம் விக்கிபீடியா:WINAD ஏற்படுத்தியிருந்தால் WP:WINAD.
  • வலைவாசல் பெயர்வெளி (முன்னொட்டுவலைவாசல்:): வருனர்கள் பயன் கருதி அவர்கள் எளிதாக குறிப்பிட்ட துறை சார்ந்த பக்கங்களை அடைந்திடவும் அவர்களிடமிருந்து அத்துறை சாரந்த கட்டுரைகளை வரவேற்று இணைப்புகளும் கொண்டிருக்கும். பார்க்க, காட்டாக, வலைவாசல்:தமிழ்க்கணிமை.
  • பயனர் பெயர்வெளி (முன்னொட்டு பயனர்:): இவை பயனர் பக்கங்களையும் அவர்கள் தங்கள் தனி பயனிற்கு ஏற்படுத்திக்கொள்ளும் பக்கங்களையும் கொண்டிருக்கும்.
  • படிமம் பெயர்வெளி அல்லது கோப்பு பெயர்வெளி (முன்னொட்டுபடிமம்:): இவை படிமம் மற்றும் ஒலி கோப்புகளுக்கான விரிவுரைகளையும் அந்த கோப்புகளுக்கான இணைப்பையும் கொண்டிருக்கும். பார்க்க சிறப்பு:Filelist. படிம மற்றும் ஒலி கோப்புகளுக்கு மூன்று விதமான இணைப்புகள் கொடுக்கலாம்:
    [[படிமம்:Foobar.jpg]] பக்கத்தில் படிமத்தை நேரடியாக இணைக்கும் (ஒலிக்கோப்புகளுக்கு அல்ல)
    [[:படிமம்:Foobar.jpg]] (முக்காற்புள்ளி முன்னொட்டினை கவனிக்க) படிம விரிவுரை பக்கத்திற்கு உரைஇணைப்பு கொடுக்கும்.
    [[ஊடகம்:Foobar.jpg]] உரை இணைப்பை நேரடியாக படிமம் அல்லது ஒலிக்கோப்பினுக்கு கொடுக்கும்.
முன்னொட்டு கோப்பு: என்பதை படிமம்: மாற்றாக பாவிக்கலாம் (பார்க்க கீழே மறுபெயர்கள் ).
  • மீடியாவிக்கி பெயர்வெளி (முன்னொட்டு மீடியாவிக்கி:): இவை இடைமுகப்பு உரைகள், இணைப்புகள் மற்றும் செய்திகள் அடங்கிய தானியங்கியாக உருவாக்கப்பட்ட பக்கங்கள் கொண்டுள்ளன. இப்பக்கங்கள் நிரந்தரமாக பாதுகாக்கப்பட்டவை. இத்தகைய செய்திகளின் பட்டியலைக் காண சிறப்பு:AllMessages.
  • வார்ப்புரு பெயர்வெளி (முன்னொட்டு வார்ப்புரு:): இவை வார்ப்புரு பக்கங்களை கொண்டுள்ளன - மற்ற பக்கங்களில் சீரான உள்ளடக்கத்தையோ தகவற்சட்டங்களையோ பல பக்கங்களிலோ அல்லது ஒரு பக்கத்தில் ஒட்டியோ உள்ளிட பயனாகின்றன.
  • பகுப்பு பெயர்வெளி (முன்னொட்டு பகுப்பு :): இவை ஓர் பகுப்பில் உள்ள பக்கங்களையும் துணை பகுப்புகளையும் பட்டியலிடும் பகுப்பு பக்கங்களை கொண்டுள்ளன. இப்பக்கங்களில் அப்பகுப்பினை ஒட்டிய கூடுதல் தகவல்களையும் இடலாம்.
  • உதவி பெயர்வெளி (முன்னொட்டுஉதவி:): இவை விக்கிபீடியா மற்றும் அதன் மென்பொருளை பாவிக்க, கலைக்களஞ்சிய பயனர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் உதவிடும் பக்கங்களை கொண்டுள்ளன.

பேச்சு பெயர்வெளி[தொகு]

மேலே கண்ட ஒவ்வொரு பெயர்வெளியும் (மெய்நிகர் பெயர்வெளிகள் தவிர்த்து) அவற்றிற்கான பேச்சு பேச்சு பெயர்வெளி கொண்டுள்ளன. பேச்சு பெயர்வெளிகள் பேச்சு: முன்னொட்டினை வழமையான முன்னொட்டின் முன் கொண்டுள்ளன. காட்டாக முதன்மை பக்கங்களின் பேச்சுப்பக்கங்கள் பேச்சு:என்ற முன்னொட்டினைக் கொண்டிருக்க, பயனர் பெயர்வெளியில் உள்ள பேச்சு பக்கம் பயனர் பேச்சு:என வழங்கப்படும். இப்பக்கங்களில் அவற்றின் தொடர்புடைய பக்கங்களில் வேண்டும் மாற்றங்களை விவாதிப்பதாக இருக்கும். பயனர் பேச்சு பக்கங்கள் குறிப்பிட்ட பயனருக்கான செய்திகளை பரிமாறிக்கொள்ள பயனாகின்றன. இந்த பயனர் பேச்சு பெயர்வெளிக்குள்ள ஓர் சிறப்பு எப்போதெல்லாம் இப்பக்கம் தொகுக்கப்படுகிறதோ அப்போது பயனர் உள்பதிகை செய்திருந்தால், அவர்கள் தங்கள் பேச்சுப்பக்கத்தை பார்வையிடும்வரை அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு பக்கத்தின் மேல்பகுதியிலும் "உங்களுக்கு புதிய செய்தி உள்ளது" என ஓர் தகவல்பெட்டி அறிவிக்கும். (தானியங்கியான சிறு தொகுப்புகள் இந்த அறிக்கையை தற்போது வெளிப்படுத்துவதில்லை.)

எவ்வாறு விக்கிபீடியா: வை WP: எனக் குறிப்பிடுகிறோமோ அவ்வாறே விக்கிபீடியா பேச்சு: WT: எனப்படுகிறது. (பார்க்க கீழே மறுபெயர்கள்). காட்டாக, விக்கிப்பீடியா பேச்சு:மேற்கோள் சுட்டுதல் என்பது [[WT:மேற்கோள் சுட்டுதல்]] மூலமும் அடையலாம்.

மெய்நிகர் பெயர்வெளிகள்[தொகு]

மறுபெயர்கள்[தொகு]

விக்கிகளுக்கிடை இணைப்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]