பயனர்:NeechalBOT

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது Neechalkaran பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.

இது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு
நிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.

நான் கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் மொழியில் எழுதப்பட்ட ஒரு தானியங்கியாவேன். தானியங்கி அணுக்கம் உள்ள விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ், இந்தி, போஜ்புரி

செய்கின்ற பணிகள்[தொகு]

சுயதூண்டல்[தொகு]

  1. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பயனர் பங்களித்த கட்டுரை, படிமம், வார்ப்புரு, பகுப்பு ஆகிய புள்ளிவிவரங்களைத் திரட்டி, இங்கு இற்றை செய்தல்.
  2. 6 மணிநேரம் கடந்தும் தொகுக்கப்படாத கட்டுரையிலிருந்து {{தொகுக்கப்படுகிறது}} என்ற வார்ப்புருவை நீக்குதல்.
  3. 10 நாள் கடந்தும் தொகுக்கப்படாத கட்டுரையிலிருந்து {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} வார்ப்புருவை நீக்குதல்.
  4. 24 மணிநேரம் கடந்த பகுப்புகள் இல்லாத புதுக் கட்டுரையில் {{Uncategorized}} என்ற வார்ப்புருவைச் சேர்த்தல்.
  5. தினமும் ஒருமுறை அறுபட்ட கோப்புகளை முதன்மை வெளி, வார்ப்புருவெளி, வலைவாசல்வெளி ஆகியவற்றிலிருந்து நீக்குதல்

பயனர்தூண்டல்[தொகு]

  1. த.வி.யில் இருக்கும் விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்களைப் பொதுவகத்திற்கு அதே காப்புரிமையில் மாற்றுதல்., பின்னர் மூலப் படிமத்தைப் பதிவேற்றிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை இடல். எடுத்துக்கொள்ளும் நேரம் 14 sec. (பொதுவகத்தில் தானியங்கி அணுக்கம் நிலுவையில் உள்ளது)
  2. அவ்வப்போது கட்டுரைகளில் பகுப்புகள் இடல், வார்ப்புரு நீக்கல்/சேர்த்தல் போன்று விக்கி பணிகளும் செய்கிறது.

செய்யக் கூடிய பணிகள்[தொகு]

  1. நிர்ணயிக்கப்பட்ட செய்தியொன்றைப் பல பக்கங்களில் (பேச்சுவெளி, பயனர்வெளி, முதன்மைவெளி உட்பட அனைத்தும்) பதிவு செய்யமுடியும். (செய்தி என்பது, பகுப்பு, வார்ப்புரு, தகவல் என எதுவாகவும் இருக்கலாம்)
  2. தாய்ப் பகுப்பின் வழியாக அதிலுள்ள பக்கங்களில் எல்லாம் மேல் குறிப்பிட்டுள்ள பணியைச் செய்யமுடியும்.
  3. சீரிய இடைவெளியில் புதுப்பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் வரவேற்பு போன்ற நிர்ணயிக்கப்பட்ட செய்தியைப் பதிவு செய்யமுடியும்.

செய்த பணிகள்[தொகு]

முன்பு செய்யப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இல்லாத பணிகள்

  1. தமிழ்க்குரிசில் விருப்பதிற்கிணங்க, தினமும் மலையாளப் புதுக்கட்டுரைகளை எடுத்து எழுத்துப்பெயர்த்து, தமிழ் உள்ளிணைப்புகள் இருந்தால் சேர்த்து, பயனர்:தமிழ்க்குரிசில்/ml இங்கு இற்றைசெய்தல்.
  2. 2013 தொடர் கட்டுரைப்போட்டியில் மேம்படுத்திய கட்டுரைகளின் வளர்ச்சி புள்ளிவிவரத்தைச் சேகரித்தல்
  3. தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திலிருந்து தரவுகளை எடுத்து விக்கியில் கலைக்களஞ்சியம் மற்றும் குழந்தைகள் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் பக்கங்களைப் பட்டியலிடுதல்.
  4. துப்புரவு செய்ய வசதியாக, தமிழாக்கக் கட்டுரைகளை அதன் பைட் அளவுகளுடன் பட்டியல் அமைத்தல்
  5. விக்கி மாரத்தானில் பயனர்வாரியாகவும், நேரவாரியாகவும் புள்ளிவிவரங்களைத் திரட்டுதல் உதா: (2015: 1, 2), (2016: 1, 2)
  6. தமிழக அரசின் ஊரகவளர்ச்சித் துறை தளத்தில் உள்ள ஊராட்சிகள் பற்றிய தரவுகளைக் கட்டுரையாக்கி விக்கிப்பீடியாவில் பதிவேற்றுதல்.
  7. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கிடைத்த தரவுகளைக் கொண்டு கோயில் கட்டுரையாக்கி விக்கிப்பீடியாவில் பதிவேற்றுதல்

என்னால் விக்கிப்பீடியா, விக்சனரி என அனைத்து விக்கித்திட்டங்களுக்குப் பணி செய்யமுடியும். எனக்குக் கட்டளையிட நீச்சல்காரன் என்ற பயனரைத் தொடர்பு கொள்ளுங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:NeechalBOT&oldid=3534703" இலிருந்து மீள்விக்கப்பட்டது