பேச்சு:பூக்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்பர் தியாகு அவர்களுக்கு,

பூக்டி என்பது மகாராஷ்டிரா மற்றும் கொங்கனி அல்லது கோவா பூர்வகுடி மக்களால் நாட்டுப்புற நடனம் ஆகும்.

இந்த வரியின் பொருள் என்ன?

தேவையான இடங்களில் உரிய சொற்கள் சிலவற்றை சேர்த்து பொருள் முழுமையடுமாறு சில திருத்தங்களை செய்திருந்தேன். ஆனால் அத்திருத்தங்கள் மீளமைக்கப்பட்டுள்ளன. காரணம் ஏதாவது உண்டா? --கி.மூர்த்தி (பேச்சு) 16:35, 26 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம் நண்பர் மூர்த்தி ..திருத்தங்களை தவறுதலாக மீளமைத்ததற்கு வருந்துகிறேன்.. நிண்ட இடைவெளிக்குப்பிறகு விக்கியில் எழுதுவதால் சில தற்காலிக சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. தொலைபேசியில் மொழிபெயர்ப்புக் கருவி உதவியுடன் பகுப்பினை சேர்க்க முயன்ற போது கட்டுரையின் துணை வடிவம் என்ற தலைப்பின் கீழுள்ள வாக்கியங்கள் பொருள்படா மொழிபெயர்ப்பாக மாறி விட்டது. ஆகவே பழையபடி மிளமைக்க முயன்ற போது முரண்பாடான இடைப்பட்டத் தொகுப்புகள் காரணமாக இத்தொகுப்பை மீளமைக்க முடியாது என்ற செய்தி வந்த படியால் நான் கடைசியாக முடித்திருத்த நிலையில் மீளமைத்தேன்.பள்ளியில் இருந்த காரணத்தால் உடனடியாக அவற்றை சரிசெய்ய முடியவில்லை. தேவையான இடங்களில் உரிய சொற்கள் சிலவற்றை சேர்த்து பொருள் முழுமையடுமாறு சில திருத்தங்களை சரிபார்த்து திருத்தம் செய்ததற்கு மிக்க நன்றி .-- ThIyAGU 19:03, 26 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூக்டி&oldid=2922078" இலிருந்து மீள்விக்கப்பட்டது