996 வேலை நேர முறை, சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

996 வேலை நேர முறை (996 working hour system (சீனம்: 996工作制) என்பது சீன மக்கள் குடியரசில் சில நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பணி நேர அட்டவணை ஆகும். பணியாளர்கள் வாரத்திற்கு 6 நாட்கள், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்ற தேவையிலிருந்து இதன் பெயரைப் பெற்றது; அதாவது வாரத்திற்கு 72 மணிநேரம் கட்டாயமாக பணி செய்ய வேண்டும்.[1][2][3][4][5]

பல சீன இணைய நிறுவனங்கள் இந்த 996 பணி நேர முறையை தங்கள் அதிகாரப்பூர்வ பணி அட்டவணையாக ஏற்றுக்கொண்டன. விமர்சகர்கள் 996 வேலை நேர அமைப்பு சீன சட்டத்தை மீறுவதாகவும், அதை "நவீன அடிமைத்தனம்" என்றும் அழைத்தனர். மார்ச் 2019 இல் "996-க்கு எதிரான" போராட்டம் கிட்ஹப் இணையம் வழியாக தொடங்கப்பட்டது. [6][7][8]

வரலாறு[தொகு]

2021 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி சீன நிறுவனங்களில் "996" போன்ற அதிகப்படியான வேலை கலாச்சாரங்கள் இருப்பதை அங்கீகரித்தது. 996 வேலை நேர அமைப்பு சட்டவிரோதம் என சீனாவின் உச்ச நீதிமன்றத்தால் 27 ஆகஸ்ட் 2021 அன்று கருதப்பட்டது.[9]

சீனாவின் சில பெரிய நிறுவனங்களில் பல இளம் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார்கள். 996 பணி கலாசாரம் என்று அறியப்படுகிற இந்த முறை கொடூரமான உழைப்புச் சுரண்டல் முறை சட்டவிரோதமானது என அத்தகைய பணி முறையை அமல்படுத்தியிருக்கும் நிறுவனங்களுக்கு சீன ஆட்சியாளர்கள் கடுமையான நினைவூட்டலை விடுத்திருக்கிறார்கள்.

சீனாவின் தொழிலாளர் சட்டங்களின்படி, ஒரு நிலையான வேலை நாள் என்பது எட்டு மணி நேரம், வாரத்துக்கு அதிகபட்சமாக 44 மணி நேரம் வேலை செய்யலாம். அதைக் கடந்தும் பணியாற்றும் எந்த தொழிலாளருக்கும் கூடுதல் உழைப்புக்கான ஊதியம் தரப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் இது சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. நாட்டின் பல பெரிய நிறுவனங்களில் - குறிப்பாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில், ஊழியர்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், கூடுதல் பணி நேரத்துக்கு எப்போதும் ஈடுசெய்வதில்லை.

பல ஆண்டுகளாக ஊழியர்கள் தங்களுடைய மிருகத்தனமான பணி நேர அட்டவணையைப் பற்றி அதிருப்தி அடைந்தனர். சிலர் போராட முயன்றனர். 2019ஆம் ஆண்டில், 'புரோகிராமர்' பதவி வகித்த குழுவினர் சிலர், குறியீடு பகிர்வு தளமான கிட்ஹப்பில் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதில் கூடுதல் பணி நேரத்துக்கு ஊழியர்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் வகையிலான திறந்தவெளி கோடுகளை அவர்கள் பதிவேற்றினர். அவர்களின் செயல்பாடு அப்போது ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாயின.

ஆனாலும், அரசு கண்டுகொள்ளாமல் செயல்பட்டதால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து '996' கலாசாரத்தை தொடர்ந்தன. எல்லாவற்றையும் விட, தங்களுடைய வெற்றியின் உந்துசக்தியாக இந்த கூடுதல் பணி நேரம் இருப்பதாக இந்த நிறுவனங்கள் கருதின. அந்த நிறுவனங்கள் உலக தொழிற்துறை அரங்கில் நம்பமுடியாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அலிபாபாவை நிறுவிய ஜேக் மாவைப் போலவே, மின்னணு வணிக தளமான ஜேடி.காம் தலைவர் ரிச்சர்ட் லியு, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் சோம்பேறிகள் என்று கூறி '996' பணி கலாசாரத்தை நியாயப்படுத்தினார்.

பின்னணி[தொகு]

சீனாவின் நீண்ட வரலாற்றில், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிகப்படியான வேலை நேரக் கலாச்சாரம் என்பது தொடர்ந்து உள்ளது.[10] ஒரு பொருளின் அடக்க விலையை குறைக்கவும்; உற்பத்தியைப் பெருக்கவும் சீனாவில் கூடுதல் நேரப் பணிச்சுமையை சீன நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன.[11] கூடுதல் நேர வேலையை ஊக்குவிக்க, அலுவலகத்தில் இரவு வரை வேலை செய்யும் ஊழியர்களுக்கு வாடகை வண்டிக் கட்டணத்தை திருப்பிச் செலுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.[12]கூடுதல் பணி நேரத்த்தால் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை நிர்வகிப்பதற்கும், படுக்கை நேரத்தை செலவழிப்பதற்கும் போதிய நேரம் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். 2020 இல் நடைபெற்ற ஆய்வு 996 கலாச்சாரத்தை "நவீன அடிமைத்தனத்துடன்" ஒப்பிடப்படது, இது "கட்டுப்பாடற்ற உலக முதலாளித்துவம் மற்றும் படிநிலை மற்றும் கீழ்ப்படிதலின் கன்பூசிய கலாச்சாரம் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், முதன்முறையாக, ஒரு சீன ஆய்வு "996 போன்ற அதிகப்படியான வேலை கலாச்சாரங்கள்" இருப்பதை அங்கீகரித்தது, இதனை சரி செய்யாவிட்டால், அது இரட்டை சுழற்சி கொள்கையிலிருந்து ஆதாயங்களை நீர்த்துப்போகச் செய்யும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Denise Hruby (2018-05-08). "Young Chinese are sick of working long hours". BBC (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20190402155418/http://www.bbc.com/capital/story/20180508-young-chinese-are-sick-of-working-overtime from the original on 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02. {{cite web}}: |archive-url= missing title (help)
 2. 赵昂 (2018-06-03). "不接受"996"是不能吃苦?媒体:合法权益应获保障". 新华网 (in எளிதாக்கப்பட்ட சீனம்). 工人日报. https://web.archive.org/web/20190331172051/http://www.xinhuanet.com/fortune/2018-06/03/c_1122929624.htm from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30. {{cite web}}: |archive-url= missing title (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
 3. Sarah Dai; Li Tao (2019-01-29). "China's work ethic stretches beyond '996' as tech companies feel the impact of slowdown". South China Morning Post (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20190331205709/https://www.scmp.com/tech/start-ups/article/2183950/chinas-work-ethic-stretches-beyond-996-tech-companies-feel-impact from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31. {{cite web}}: |archive-url= missing title (help)
 4. Li Yuan (2017-02-22). "China's Grueling Formula for Success: 9-9-6". The Wall Street Journal (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20190331205726/https://www.wsj.com/articles/long-days-a-staple-at-chinese-tech-firms-1487787775 from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31. {{cite web}}: |archive-url= missing title (help)
 5. Zheping Huang (2019-03-20). "No sleep, no sex, no life: tech workers in China's Silicon Valley face burnout before they reach 30". South China Morning Post (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20190405044201/https://www.scmp.com/tech/apps-social/article/3002533/no-sleep-no-sex-no-life-tech-workers-chinas-silicon-valley-face from the original on 2019-04-05. பார்க்கப்பட்ட நாள் 2019-04-05. {{cite web}}: |archive-url= missing title (help)
 6. Yuan Yang (2019-04-03). "China tech worker protest against long working hours goes viral". Financial Times (in ஆங்கிலம்). https://archive.today/20190403100011/https://www.ft.com/content/72754638-55d1-11e9-91f9-b6515a54c5b1 from the original on 2019-04-03. பார்க்கப்பட்ட நாள் 2019-04-05. {{cite web}}: |archive-url= missing title (help)
 7. Bill Ide (2019-04-04). "China Tech Workers Protest Long Work Hours in Online Campaign". VOA News (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20190405033656/https://www.voanews.com/a/china-tech-workers-protest-long-work-hours-in-online-campaign/4861553.html from the original on 2019-04-05. பார்க்கப்பட்ட நாள் 2019-04-05. {{cite web}}: |archive-url= missing title (help)
 8. Lin Qiqing; Raymond Zhong (2019-04-29). "'996' Is China's Version of Hustle Culture. Tech Workers Are Sick of It". The New York Times (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20190503050703/https://www.nytimes.com/2019/04/29/technology/china-996-jack-ma.html from the original on 2019-05-03. பார்க்கப்பட்ட நாள் 2019-05-03. {{cite web}}: |archive-url= missing title (help)
 9. Javed, Saad Ahmed; Bo, Yu; Tao, Liangyan; Dong, Wenjie (2021-06-07). "The 'Dual Circulation' development model of China: Background and insights" (in en). Rajagiri Management Journal ahead-of-print (ahead-of-print). doi:10.1108/RAMJ-03-2021-0016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0972-9968. 
 10. 王品芝 (2018-03-30). "50.7%受访者称所在企业有"加班文化"". 新华网 (in எளிதாக்கப்பட்ட சீனம்). 中国青年报. https://web.archive.org/web/20190331172151/http://www.xinhuanet.com/yuqing/2018-03/30/c_129840094.htm from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31. {{cite web}}: |archive-url= missing title (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
 11. Justin Bergman (2016-08-26). "Inside the high-pressure world of China's start-up workers". BBC (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20190331174218/http://www.bbc.com/capital/story/20160825-inside-the-high-pressure-world-of-chinas-overtime-dogs from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31. {{cite web}}: |archive-url= missing title (help)
 12. 刘佳, ed. (2019-01-31). "默认996工作制背后:被撕掉的焦虑遮羞布". 第一财经 (in எளிதாக்கப்பட்ட சீனம்). https://web.archive.org/web/20190331173237/https://www.yicai.com/news/100111346.html from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31. {{cite web}}: |archive-url= missing title (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=996_வேலை_நேர_முறை,_சீனா&oldid=3579313" இலிருந்து மீள்விக்கப்பட்டது