97ஆவது அகாதமி விருதுகள்
97-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
![]() அதிகாரப்பூர்வ சுவரொட்டி | ||||
திகதி | மார்ச்சு 2, 2025 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஆலிவுட்டு, லாசு ஏஞ்சல்சு, ல;இபோர்னியா, அமெரிக்கா | |||
நடத்துனர் | கோனன் ஓ பிரைன் | |||
முன்னோட்டம் | இயூலியானே ஔக்கு இயெசி பால்மர்[1] | |||
தயாரிப்பாளர் |
| |||
இயக்குனர் | ஆமிசு ஆமில்டன் | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | அனோரா | |||
அதிக விருதுகள் | அனோரா (5) | |||
அதிக பரிந்துரைகள் | எமிலா பெரெசு (13) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஒளிபரப்பு அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் இணையவழி குலு (மேலதிக ஊடக சேவை) | |||
கால அளவு | 3 மணி, 50 நிமிடங்கள் | |||
|
97ஆவது அகாதமி விருதுகள் (97th Academy Awards) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லாசு ஏஞ்சலசு மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான ஆலிவுட்டின் டால்பி திரையரங்கத்தில் வழங்கப்பட்டது. இயங்குபடக் கலை மற்றும் அறிவியல் அகாதமி இவ்விருது வழங்கும் விழாவை 2025 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் தேதியன்று நடத்தியது. மாலையில், இயங்குபடக் கலை மற்றும் அறிவியல் அகாதமி நிறுவனம் 23 பிரிவுகளில் அகாதமி விருதுகளை (ஆசுகார் விருதுகள்) வழங்கியது. 2024 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள் கௌரவிக்கப்பட்டன. அமெரிக்காவில் ஏபிசி எனப்படும் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் இந்த விழாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது. முதல் முறையாக இணையவழியில் நேரடிப் பார்வையாளர்களுக்காகவும் மேலதிக ஊடக சேவை வழியாக ஒளிபரப்பப்பட்டது.[2][3][4] நகைச்சுவை நடிகர் கோனன் ஓ'பிரையன் முதல் முறையாக நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். இராச்சு கபூர் மற்றும் கேட்டி முல்லன் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டனர்.[5][6][7][8]
சிறந்த திரைப்படம் என்ற விருது உட்பட சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த அசல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் பாலியல் தொழிலாளியின் காதலைப் பேசிய அனோரா திரைப்படம் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.[9]
த புரூட்டலிசுட்டு என்ற திரைப்படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர் (அட்ரியன் ப்ரோடி), சிறந்த அசல் இசை (டேனியல் புளூம்பெர்க்கு), சிறந்த ஒளிப்பதிவு (லால் கிராலே) ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றது.
தூன்: இரண்டாம் பகுதி (சிறந்த ஒலி அமைப்பு,காட்சி விளைவுகள்) எமிலியா பெரெசு மற்றும் விக்டு (ஆடை வடிவமைப்பு,) ஆகியவை தலா இரண்டு விருதுகளைப் பெற்றன.
கான்க்ளேவ் (தழுவல் திரைக்கதை), புளோ (இயங்கு படம்), ஐ ஆம் நாட் எ ரோபோட்டு, ஐ ஆம் சிடில் இயர் (வெளிநாட்டுத் திரைப்படம்), இன் தி சேடோ ஆப் தி சைப்ரசு, நோ அதர் லேண்டு (ஆவணப்படம்:), தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்க்கெசுட்ரா (ஆவணக் குறும்படம்), எ ரியல் பெயின் (துணை நடிகர்), மற்றும் தி சப்சுடான்சு (ஒப்பனை, சிகையலங்காரம்) ஆகிய திரைப்படங்கள் தலா ஒரு விருதையும் வென்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Seitz, Loree (February 25, 2025). "Jesse Palmer, Julianne Hough to Host Oscars Red Carpet Show". TheWrap. Retrieved February 26, 2025.
- ↑ Academy of Motion Picture Arts and Sciences(April 10, 2024). "The Academy and ABC Announce Show Date for 97th Oscars". செய்திக் குறிப்பு.
- ↑ Davis, Clayton (April 10, 2024). "Oscars 2025: Academy Sets Date and Nominations Timeline for 97th Ceremony". Variety (magazine). Retrieved January 22, 2025.
- ↑ Pedersen, Erik (December 11, 2024). "Oscars Will Stream Live on Hulu for First Time". Deadline Hollywood. Retrieved January 22, 2025.
- ↑ Academy of Motion Picture Arts and Sciences(November 15, 2024). "Conan O'Brien to host 97th Oscars". செய்திக் குறிப்பு.
- ↑ Hammond, Pete (November 15, 2024). "Conan O'Brien Set to Host 97th Oscars". Deadline Hollywood. Archived from the original on February 4, 2025. Retrieved January 22, 2025.
- ↑ Academy of Motion Picture Arts and Sciences(October 28, 2024). "Raj Kapoor and Katy Mullan return as executive producers of the 97th Oscars". செய்திக் குறிப்பு.
- ↑ Ryzik, Melena (February 27, 2025). "Conan O'Brien is Terrified of the Oscars. (He's Hosting Anyway.)". The New York Times. Retrieved March 3, 2025.
- ↑ "97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/hollywood/1353011-97th-oscar-awards-ceremony-anora-wins-5-awards.html. பார்த்த நாள்: 4 March 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- Academy Awards official website
- The Academy of Motion Picture Arts and Sciences official website
- Oscars Channel (இயங்குபடக் கலை மற்றும் அறிவியல் அகாதமியின் அலைவரிசை)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Oscars (2025)