6 மெழுகுவத்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
6 மெழுகுவத்திகள்
இயக்கம்வி. இசட். துரை
கதைஜெயமோகன்
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புஷாம்
பூனம் கவுர்
ஒளிப்பதிவுகிருஷ்ணசாமி
படத்தொகுப்புஎன். அருண்குமார்
விநியோகம்ஸ்டுடியோ 9
வெளியீடுசெப்டம்பர் 20, 2013 (2013-09-20)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

6 மெழுகுவத்திகள் செப்டம்பர் 20, 2013 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். குழந்தைக் கடத்தலை மையமாகக் கொண்டது. ஷாம் கதாநாயகனாக நடித்தார். வி. இஜட். துரை இயக்கினார்.

தயாரிப்பு[தொகு]

அபி&அபி நிறுவனத்துக்காக நிஜாமுதீன் மதீன் தயாரித்த படம். ஸ்டுடியோ9 இதை வெளியிட்டது. 2010ல் இதன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தயாரிப்பாளர் விலகிக்கொண்டமையால் படம் நடுவில் நிறுத்தப்பட்டது. மீண்டும் நீண்ட தாமதத்துக்குப்பின் படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பமாகி 2011 டிசம்பரில் முடிவடைந்தது.

பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத காரணத்தால் வணிகம் ஆகாது இருந்த படம் நெடுநாள் காத்திருப்புக்குப் பின்பு 2013 செப்டெம்பர் 20ல் வெளியாகியது. சிறந்த திரைப்படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. குறிப்பிடத்தக்க வணிகவெற்றியையும் பெற்றது.[2][3]

கதைக்கரு[தொகு]

6 மெழுகுவத்திகள் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் குழந்தைக் கடத்தல் கும்பல் பற்றி வரும் ஓர் அத்தியாயத்தின் விரிவாக்கப்பட்ட வடிவம். தன் மகனை அவனுடைய ஆறாவது பிறந்தநாள் அன்று கடற்கரையில் தவறவிடும் ஒரு தந்தை அக் குழந்தையைத் தேடிச் செல்கிறார். குழந்தைக் கடத்தல்காரர்களைத் தேடித்தேடிச் சென்று கடைசியில் குழந்தையைக் கண்டுபிடிக்கிறார்

பங்களிப்பு[தொகு]

 • இயக்கம்: வி. இசட். துரை
 • எழுத்து: ஜெயமோகன்
 • ஒளிப்பதிவு: கிருஷ்ணசாமி
 • படத்தொகுப்பு: அருண்குமார்

நடிகர்கள்[தொகு]

 • ஷாம்
 • பூனம் கவுர்
 • அர்ச்சனா
 • விவேதன்
 • அனில் முரளி
 • நாகினேடு
 • நாராயண்
 • சந்திரா
 • பி .எஸ். செல்வம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Onayum Aatukuttiyum, Ya Ya, 6 on September 20". 2013-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. http://behindwoods.com/tamil-movies/6/6-review.html
 3. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/6-melugu-vathigal-a-change-of-programme/article5153546.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=6_மெழுகுவத்திகள்&oldid=3372918" இருந்து மீள்விக்கப்பட்டது