உள்ளடக்கத்துக்குச் செல்

69 (பாலியல் நிலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்குள் பரஸ்பரமாக வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடும் 69 பாலியல் நிலை

69 என்பது இரு நபர்கள் தங்களின் பிறப்புறுப்புகள் அடுத்தவரின் வாயை நோக்கி இருக்குமாறு வைத்து உடலுறவு கொள்ளும் நிலையாகும்.[1][2][3] இந்த முறையில் இருவரும் தங்களை பரஸ்பரபரமாக எண் 6 மற்றும் 9 போல தங்களை தலைகீழாக்கிக் கொண்டு செயல்படுவதால் இந்த முறையை 69 என்று அழைக்கின்றார்கள்.[3][4] இந்த நிலையில் எந்த பாலினத்தவரும் இணைந்து செயல்பட முடிகிறது.

இந்த நிலையில் பங்குகொள்பவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பாலியல் தூண்டுதல்களை அனுபவிக்க முடியுமென தங்களின் அனுபவத்தை கூறுகின்றனர். இந்த முறை ஒத்த உயரம் கொண்டவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.[5] மாறுபட்ட உயரம் கொண்டவர்களால் இந்த பாலியல் முறையை சரிவர கையாள முடிவதில்லை. இந்து சமய பாலியல் நூலான காமசூத்ராவில் இந்த பாலியல் நிலையானது வேறொரு பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.[6]

ஆதாரங்கள்[தொகு]

  1. Rojiere, Jean (2001). The Little Book of Sex. Ulysses Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56975-305-9.
  2. Julie Coleman, "Love, sex, and marriage: a historical thesaurus", Rodopi, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-420-0433-9, p.214
  3. 3.0 3.1 Aggrawal, Anil (2009). Forensic and Medico-legal Aspects of Sexual Crimes and Unusual Sexual Practices. Boca Raton: CRC Press. p. 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4200-4308-0.
  4. René James Hérail, Edwin A. Lovatt, "Dictionary of Modern Colloquial French", Routledge, 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-05893-7, p.484
  5. Rathus, Spencer A.; Nevid, Jeffrey S.; Fichner-Rathus, Lois; Herold, Edward S.; McKenzie, Sue Wicks (2005). Human sexuality in a world of diversity (2nd ed.). New Jersey, USA: Pearson Education. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-205-46013-5.
  6. "History of India, Kamasutra Sexual Orientation Chapter 9". Indohistory. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=69_(பாலியல்_நிலை)&oldid=3838945" இலிருந்து மீள்விக்கப்பட்டது