64 இருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

64 இருமம் (64bit) / 64 பிட் என்பது கணினி கட்டுமானத்தின் வரையறைப்படி, கணனியின் மின்னணுப் பாகமான செயலியின் திறனையும், இயல்பையும் குறிக்கிறது. அச்செயலியின் தரவுப்பாதையின் அகலத்தை, இது தெரிவிக்கிறது. 64 இலக்க இருமங்களை அடிப்படையாகக் கொண்டு, நினைவகங்களையும், தரவுகளையும் கொண்டுள்ள நுண்செயலிகளையும், நுண்கணினியும் இவ்வகையான கட்டுமானத்தில் இயங்கி வருகின்றவை, 64-இருமம் கணினி எனவும், அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களை, 64 - இரும மென்பொருட்கள் எனவும் அழைப்பார்கள். ஒரு கணினியை, நமது இலக்கிற்கு, பயன்பாட்டிற்கு தேர்ந்தெடுக்கும் போதே, அது எத்தகையது என்பதை நாம் அறிந்து கொள்ளல் அவசியம் ஆகும். இந்நோக்கில், கணினி விளையாட்டுகள், நிகழ்படத்தொகுப்பு போன்றவற்றிற்கு, பெரும்பாலும், 64 இரும வன்பொருட்களும், மென்பொருட்களும் சிறந்தவையாகத் திகழ்கின்றன. உரைக்கோப்பு போன்ற எளிய மேலாண்மைக்கு, 32 இரும கணினிகளே போதுமானது.

கண்டறிதல்[தொகு]

ஒரு கணினி நன்கு செயற்பட அதன் வன்பொருள், அந்த வன்பொருளுக்கு ஏற்ற சரியான இருமம் கொண்ட மென்பொருள் என்ற இரண்டுமே மிகவும் முக்கியமானது ஆகும். இவை (32 இருமம்/64 இருமம்) பற்றிய குறிப்புகளை, நமது கணினியிலேயும், அதன் மென்பொருளிலேயும், நாம் அறிந்து கொள்ளும் வகையில், அதனுள்ளேயேத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்த விவரங்களை, உரிய இணையப்பக்கத்திலும் காண இயலும். [1] 64 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட கணினியில், 32 இரும வகை இயக்குதளத்தை நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால், 32 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட, ஒரு கணினியில் 64 இரும வகை இயக்குதளத்தை நிறுவி பயன்படுத்த முடியாது. ஒரு லினக்சு வகை இயக்குதளத்தை உருவாக்கும் போதே, இருவகையான இரும வகைக்கும் ஏற்றவகையில், தனித்தனியே உருவாக்கித் தரப்படுகிறது. நமது வன்பொருள் திறனுக்கு ஏற்ப, 32 இருமம் / 64 இருமம் என, இதில் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

கீழ்கண்ட இணைப்புகளின் வழியே பல்வேறு வகை லினக்சு வகை இயக்குதளங்களின், 64 இரும இயக்குதளத்தை, கட்டணமின்றியும், கட்டற்ற உரிமத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் போது, அந்தந்த பக்கங்களில் உள்ள பிட்டொரென்ட் வழியைத் தேரந்தெடுத்தல் மிகச்சிறப்பானது. ஏனெனில், பதிவிறக்கத்தை நிறுத்தி (pause), நமது தரவுப் பயன்பாட்டிற்கு ஏற்ப, சிறிது சிறிதாகச் செய்து கொள்ளலாம்.

  1. டெபியன் இயக்குதளம்
  2. உபுண்டு இயக்குதளம் வகைகள்
  3. உபுண்டு வகை இயக்குதளங்கள்
  4. உபுண்டுவை அடிப்படையாக் கொண்டு, உபுண்டு வழித் தோன்றி இயக்குதளங்கள்
    1. லினக்சு லைட்டு (Linux Lite)
  5. ஃபெடோரா இயக்குதளத்தின் 64 இருமவகை பதிவிறக்கப் பக்கம்

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=64_இருமம்&oldid=2470506" இருந்து மீள்விக்கப்பட்டது