6-மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
6-மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு
6-MITC.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-ஐசோதயோசயனேட்டோ-6-(மெத்தில்சல்பினைல்)எக்சேன்
வேறு பெயர்கள்
6-எம்.ஐ.டி.சி அல்லது 6-எம்.எசு.ஐ.டி.சி
இனங்காட்டிகள்
4430-35-7
ChemSpider 7991398
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C8H15NOS2
வாய்ப்பாட்டு எடை 205.33 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

6-மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு (6-(Methylsulfinyl)hexyl isothiocyanate) என்பது C8H15NOS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதைச் சுருக்கமாக 6-எம்.ஐ.டி.சி அல்லது 6-எம்.எசு.ஐ.டி.சி என்ற ஆங்கில எழுத்துகளில் குறிப்பிடுவர். ஐசோதயோசயனேட்டு குழுவைச் சேர்ந்த கரிமகந்தகச் சேர்மம் என்று இதை வகைப்படுத்தலாம். முட்டைக்கோசு, காலிபிளவர் போன்ற வகை காய்களிலிருந்து, குறிப்பாக வசாபி எனப்படும் சப்பானிய பச்சைக் கடுகு வகையிலிருந்து 6-மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு பெறப்படுகிறது. மற்ற ஐசோதயோசயனேட்டுகளைப் போலவே இதுவும் குளுக்கோசினோலேட்டை மைரோசினேசு நொதி செல்லை காயப்படுத்தி நிலைமாற்றம் செய்வதால் உருவாகிறது.

புதிதாக துருவப்பட்ட வசாபி தண்டுப்பகுதியை தலைமுடியில் தேய்த்தால் அது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்ற நம்பிக்கை சப்பானில் தற்போது நிலவுகிறது. ஏனெனில் உலகின் மிகப்பெரிய வசாபி தயாரிப்பாளரான கின்னி நிறுவனம் 6-எம்.ஐ.டி.சி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]