51826 கல்பனாசாவ்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

51826 கல்பனாசாவ்லா (2001 OB34) என்பது ஒரு விண்கல் (asteroid). இது இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா என்னும் விண்வெளி வீராங்கனையின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட விண்கல். STS-107 என்னும் விண்வெளி ஊர்திக்கலம் கொலம்பியா தன் விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு, பெப்ரவரி 1, 2003ல் நில உலகின் காற்று மண்டலத்தினுள் மீண்டும் நுழையும் பொழுது வெடித்துச் சிதறிய கொடும் நிகழ்வில் கல்பனா சாவ்லா உயிரிழந்தார். இதே போல 51823 முதல் 51829 வரை எண்ணுள்ள விண்கற்களும் கொலம்பியா விண்வெளி ஊர்தியில் உயிரிழந்தவர்களில் நினைவாக பெயர்சூட்டப்பட்டுள்ளன.

51826 கல்பனாசாவ்லா என்னும் விண்கல் ஜூலை 19, 2001ல் பாலோமர் தொலைநோக்கியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=51826_கல்பனாசாவ்லா&oldid=2114947" இருந்து மீள்விக்கப்பட்டது