500 பிரிக்கெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
500 பிரிக்கெல் மேற்கு கோபுரம்
500 பிரிக்கெல் கோபுரம் மே 2008ல்
Map
பொதுவான தகவல்கள்
வகைவசிப்பிடம்
இடம்500 பிரிக்கெல் அவென்யு, மயாமி, புளோரிடா, ஐக்கிய நாடுகள்
கட்டுமான ஆரம்பம்2005
நிறைவுற்றது2008
திறப்பு2008
உயரம்
கூரை426 அடி (130 m)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை42
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Arquitectonica
மேம்பாட்டாளர்புளோரிடா ரிலேட்டடு குழு
500 பிரிக்கெல் கோபுரங்கள்

500 பிரிக்கெல் (500 Brickell) என்பது அமெரிக்காவின் புளோரிடாவின் மயாமியின் சுற்றுப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகமாகும். இந்த வளாகத்தில் இரண்டு காண்டோமினியம் கோபுரங்கள் உள்ளன. இவை 500 பிரிக்கெல் மேற்கு கோபுரம் மற்றும் 500 பிரிக்கெல் கிழக்கு கோபுரம் ஆகும். இந்த இரண்டு கட்டிடங்களும் இரட்டை கோபுரங்களாக வடிவமைக்கப்பட்டன. இது 42 மாடிகளுடன் 426 அடி (130 மீட்டர்) உயரமுடையது.[1] இந்த வானளாவிய கட்டிடத்தினை ஆர்கிடெக்டோனிகா கட்டிடக்கலை நிறுவனத்தினர் உருவாக்கினர். இந்த கட்டமைப்பினை தாமஸ் கிராமரின் போர்ட்பினோ குழு புளோரிடா குழுவுடன் இணைந்து நிறுவியது. கோபுரங்களின் கட்டுமானம் ஏப்ரல் 2005இல் தொடங்கியது. [2] 2007ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கட்டுமானப் பணியினை முடித்து 2008இல் முழுமையடைந்தது.

  • மைபிரிக்கெல்: 2012 முதல் 2014 வரை ஒரு சிறிய கட்டிடம் மைபிரிக்கெல், 500 பிரிக்கெல்லின் மேற்கே கட்டப்பட்டது. இதில் வாகன நிறுத்துமிடம் கட்டப்படாத போதிலும் வான்பாலம் வழியாக 500 ப்ரிகலின் அடிப்பகுதியுடன் இணைக்கப்பட்டது. மியாமில் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் கட்டப்பட்ட முதல் உயரமான கட்டிடம் இது. இது 2014இல் விற்கப்பட்டது. [3]

வடிவமைப்பு[தொகு]

500 பிரிக்கெல் முதலில் ஒரு மாபெரும் வளைவைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டது.[4] இரண்டு கோபுரங்களும் 10-அடுக்கு தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு கோபுரங்களின் மேல் தளங்களும் ஒரு பெரிய வெள்ளை கூரையால் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய குளம் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் மேற்பகுதியில் இருகட்டடங்களுக்கும் இடையிலான இடைவெளி வழியே முற்றத்தில் சூரிய ஒளி விழுகின்றது.

மேலும் காண்க[தொகு]

  • மியாமியில் மிக உயரமான கட்டிடங்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "500 Brickell Station Center Tower". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 2007-09-08.
  2. "500 Brickell". Miami Invest. Archived from the original on 2007-08-14. பார்க்கப்பட்ட நாள் 2007-09-08.
  3. Bandell, Brian (May 13, 2014). "Related Group sells out MyBrickell, $56M in sales". South Florida Business Journal. பார்க்கப்பட்ட நாள் October 23, 2014.
  4. "500 Brickell". Arquitectonica. Archived from the original on 24 August 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=500_பிரிக்கெல்&oldid=3100982" இலிருந்து மீள்விக்கப்பட்டது