5-நைட்ரோ-2-புரோப்பாக்சி அனிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
5-நைட்ரோ-2-புரோப்பாக்சி அனிலின்
5-Nitro-2-propoxyaniline[1]
Skeletal formula of 5-nitro-2-propoxyaniline
Space-filling model of the 5-nitro-2-propoxyaniline molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
5-நைட்ரோ-2-புரோப்பாக்சி அனிலின்
இனங்காட்டிகள்
553-79-7 N
ChEMBL ChEMBL322314 Y
ChemSpider 10647 Y
InChI
  • InChI=1S/C9H12N2O3/c1-2-5-14-9-4-3-7(11(12)13)6-8(9)10/h3-4,6H,2,5,10H2,1H3 Y
    Key: RXQCEGOUSFBKPI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C9H12N2O3/c1-2-5-14-9-4-3-7(11(12)13)6-8(9)10/h3-4,6H,2,5,10H2,1H3
    Key: RXQCEGOUSFBKPI-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11118
SMILES
  • [O-][N+](=O)c1ccc(OCCC)c(c1)N
பண்புகள்
C9H12N2O3
வாய்ப்பாட்டு எடை 196.21 கிராம்/மோல்
உருகுநிலை 48 °C (118 °F; 321 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

5-நைட்ரோ-2-புரோப்பாக்சி அனிலின் (5-Nitro-2-propoxyaniline) என்பது C9H12N2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சுக்ரோசு சர்க்கரையின் இனிப்பைக்காட்டிலும் 4,000 மடங்கு அதிகமான இனிப்புச் சுவையைக் கொண்டது என்பதால் இதை பி-4000 என்ற பெயரால் அழைப்பார்கள். இச்சேர்மத்தைக் குறிக்க அல்ட்ராசசு என்ற பெயரும் பயன்படுத்தப்படுவதுண்டு. இதுவரை அறியப்பட்டுள்ள வலிமையான இனிப்புச் சுவை பொருள்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாகும். ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இது தண்ணீரில் சிறிதளவு கரையும். நீர்த்த அமிலங்களிலும் கொதிக்கும் நீரிலும் இது நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. 5-நைட்ரோ -2-புரோப்பாக்சி அனிலின் ஒரு காலத்தில் செயற்கை இனிப்பானாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் நச்சுத்தன்மையின் காரணமாக அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு சனவரி 19 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்கக் கூட்டாட்சி பதிவேடு (15 எப்.ஆர் 321) உத்தரவின் அடிப்படையில் 5-நைட்ரோ -2-புரோப்பாக்சி அனிலின் சேர்க்கப்பட்ட அல்லது கண்டறியக்கூடிய அளவைக் கொண்ட எந்த உணவும் இந்தச் சட்டத்தை மீறியதாகவும் கலப்படம் செய்யப்பட்ட உணவாகவும் அந்நாட்டில் கருதப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 12th Edition, 6727.
  2. "FDA Code of Regulations". Archived from the original on 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-04.

புற இணைப்புகள்[தொகு]