49-ஓ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விதி 49-ஓ இந்தியாவின் தேர்தல்களை நடத்தும் நெறிமுறைகளைக் கொண்ட தேர்தல் நடத்தை விதிகள், 1961[1] கீழ் அமைந்துள்ள ஓர் விதியாகும். இது ஓர் ஏற்புடை வாக்காளர் தனது வாக்குச்சீட்டைப் பதிய விரும்பாது தமது செயலை பதிய விரும்பும்போது செய்யவேண்டுவனவற்றை விளக்குகிறது. இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றல்களையும் தடுப்பதாகும்.

விதி 49-O உரை[தொகு]

49-O. வாக்காளர் வாக்களிக்க விரும்பாதபோது.-ஓர் வாக்காளர், தனது தேர்தல் பட்டியல் எண் படிவம்-17A வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்டபின்னர், விதி 49L துணைவிதி (1)இல் கண்டுள்ளபடி கையொப்பமோ கைநாட்டோ இட்டபிறகு, தனது வாக்கை இட விரும்பாது போனால், இது குறித்தான குறிப்பை, படிவம் 17A பதிவேட்டில் உரிய இடத்தில் வாக்குச்சாவடி அதிகாரியால் பதிவதுடன் அந்த வாக்காளரின் கையொப்பமோ கைநாட்டோ அந்தக் குறிப்பிற்கு எதிராகப் பெறப்படவேண்டும்.[1]

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விதி 49-O[தொகு]

வாக்குச்சீட்டோ / வாக்குப்பதிவு இயந்திரமோ வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மட்டுமே கொண்டிருப்பதால் ஓர் வாக்காளர் இந்த விதியின் கீழ் நேரடியாக வாக்களிக்க இயலாமல் உள்ளது. வாக்குச்சாவடியிலுள்ள முதன்மை அதிகாரியிடம் தனது எண்ணத்தை அறிவிக்க வேண்டும். இது மறைவான வாக்களிப்பின் தன்மைக்கு முரணாக உள்ளது. ஆயினும், வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும்போது வாக்காளர் தனது வாக்குச்சீட்டை "செல்லாதது" ஆக்கி இதற்கு வழிகாண முடியும். மின்னணு இயந்திரங்கள் செயலாக்கத்திற்கு வருமுன் இதுவே மறைவான வாக்களிப்புத் தன்மையைக் கெடுக்காது வெற்று வாக்குகளை அளிக்கும் முறையாக பொதுவாக பின்பற்றப்பட்டு வந்தது.

தற்போது, ஒரு தேர்தலில், வெற்று வாக்குகள் எவ்வளவு இருந்தாலும், ஏற்புடை வாக்குகளில் முதன்மையான எண்ணிக்கையைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராவார். இருப்பினும் தேர்தல் அதிகாரிகள் வெற்று வாக்குகளின் எண்ணிக்கையையும் எண்ணி பதிய வேண்டும்.

49ஒ ஓட்டுகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட தேர்தலின் முடிவில் மாற்றம் ஏற்படுத்துவதில்லை. அது அறிந்துக் கொள்ளக்கூடிய எண்ணிக்கை மட்டுமே.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 The Conduct of Elections Rules, 1961
  2. http://eci.nic.in/eci_main/press/current/pn051208.pdf

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=49-ஓ&oldid=2070526" இருந்து மீள்விக்கப்பட்டது