432 பார்க் அவென்யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
432 பார்க் அவென்யூ
Park Avenue
இராக்பெல்லர் மையத்தில் இருந்து பார்வையிட்டது. (யூலை 2015)
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமிக உயர்ந்த கட்டிடமாக அறிவிக்கப்பட்டது
வகைகுடியிருப்புப் பகுதி
இடம்432 பார்க் அவென்யூ
மன்னாவ்டன், நியூயார்க் நகரம்
கட்டுமான ஆரம்பம்
 • கடைகால்: செப்டம்பர் 2011
 • தரைமட்டத்திற்கு மேல் அமைப்பு: மே 2012
மதிப்பிடப்பட்ட நிறைவு2015
திறப்பு
 • Topped out: October 2014
 • Completion: Fall 2015
 • Occupancy: Fall 2015
செலவுUS$ 1.25 பில்லியன்[2]
உயரம்
கூரை425.5 m (1,396 அடி)
மேல் தளம்392.1 m (1,286 அடி) (occupied)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை88 + 3 தரைத்தளத்திற்கு கீழே [1]
தளப்பரப்பு412637 சதுர அடி
உயர்த்திகள்6
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ரஃபேல் வினோலி[3] மற்றும் எஸ்.எல்.சி.இ.கட்டிடக் கலைஞர், எல்.எல்.பி
மேம்பாட்டாளர்சி.ஐ.எம் குழுமம் / மேக்லோவ் உடைமைகள்
அமைப்புப் பொறியாளர்டபிள்யூ.எஸ்.பி கேண்டர் சீனக்கு
முதன்மை ஒப்பந்தகாரர்இலெண்ட் லீசு

432 பார்க் அவென்யூ (432 Park Avenue) என்பது நியூயார்க் நகரின் மன்னாவ்டன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியாகும். 104 கூட்டுரிமை வீடுகளை உள்ளடக்கியதாக சி.ஐ.எம். குழுமம் இந்த உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் முதலில் 1300 அடிகள் (396 மீட்டர்) உயரம் கொண்ட கட்டிடமாகக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது[3][4] . கட்டிட வேலைகள் 2012 இல் துவங்கப்பட்டன. 2015[5] ஆம் ஆண்டில் இவ்வுயர்ந்த கட்டிடம் கட்டிமுடிக்கப்படல் வேண்டுமென்று திட்டமும் தீட்டப்பட்டு செயல்பாடு தொடங்கியது. இதற்காக 1926 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 495 அறைகள் கொண்ட டிராக் உணவுவிடுதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில்தான் இவ்வுணவு விடுதி ஆரி மேக்லோவ் என்பவருக்கு 440 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. வாங்கப்பட்ட ஒரு வருடத்திலேயே அக்கட்டிடம் இடிக்கப்பட்டது [6] என்பது ஒருபுறமிருந்தாலும் நியூயார்க் நகரின் மையப்பகுதியில் கிழக்கு 56 மற்றும் 57 ஆவது தெருக்களின் மத்தியில் அமைந்திருந்த காரணத்தால் அவ்விடத்தின் மதிப்பு மிகவும் உயர்ந்தது.

உயரத்தின் அடிப்படையில், 1396 அடிகள் (425.5 மீட்டர்)[7] என்பது அமெரிக்காவில் உள்ள மிகவுயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் பார்க் அவென்யூ மூன்றாவது உயர்ந்த கட்டிடமாகவும் குடியிருப்புப் பகுதி என்ற அடிப்படையில் உலகத்திலேயே மிகவுயர்ந்த கட்டிடம் என்றும் மதிக்கப்படுகிறது[8]. நியூயார்க் நகரைப் பொறுத்தவரை உலக வர்த்தக மையக் கட்டிடத்திற்கு அடுத்ததாகவும் எம்பயர் ஸ்டேட்டு கட்டிடத்தை விட உயர்ந்ததாகவும் விளங்குகிறது. உயரம் கணக்கிடும்பொழுது உச்சிக் கூரையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், 432 பார்க் அவென்யூ கட்டிடந்தான் நியூயார்க் நகரின் மிகவுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெருகிறது. ஏனெனில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தை விட இதன் கூரை 28 அடிகள் அல்லது 8.5 மீட்டர் அளவு உயர்ந்து காணப்படுகிறது[9].

உயரம்[தொகு]

கொடிமரங்கள், அலைவாங்கிகள், கம்பங்கள் முதலியன உட்பட உயர்ந்துள்ள நகரின் மிக உயரமான கட்டிடங்கள் 432 பார்க் அவென்யூ கட்டிடம் இடது புறத்திலிருந்து மூன்றாவதாக இருக்கிறது.

நியூயார்க் நகரின் இரண்டாவது மிகவுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையுடன் மேற்கு அரைக்கோளத்தில்[10] உள்ள மிகவுயர்ந்த குடியிருப்புப் பகுதி என்ற பெருமையும் 432 பார்க் அவென்யூ கட்டிடத்திற்கு உண்டு. 2018 ஆம் ஆண்டின் மத்தியில் 217 மேற்கு 57வது தெரு மற்றும் 111 மேற்கு 57வது தெரு ஆகிய கட்டிடங்கள் இதன் உயரத்திற்குச் சமமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது[11] . 33000 சதுர அடிகள் (3,100 மீ2) பரப்பளவு என்பது இக்கட்டிடம் பதிந்துள்ள முக்கியமான கால்தடமாகும். உச்சிக்கூரையின் அடிப்படையில் நியூயார்க் நகரின் உயர்ந்த கட்டிடங்களில் முதலிடம் பிடிப்பது 432 பார்க் அவென்யூதான் என்று 2014 அக்டோபர் 10 இல் முறையாக அறிவிக்கப்பட்டது[7][12].

வடிவமைப்பு[தொகு]

432 பார்க் அவென்யூ கட்டிடத்தின் வடிவமைப்பு ரஃபேல் வினோலி என்பவரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். இக்கட்டிடம் முழுக்க முழுக்கத் துல்லியமான ஒரு சதுரம் என்றும், ஒரு குப்பைத் தொட்டியின் வடிவந்தான் இக்கட்டிடத்தை வடிவமைக்க முன்மாதிரியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்[13]. இக்கோபுரம் 3969 சதுர அடிகள் பரப்பளவில் உள்ள 84 மாடிகள் கொண்டதாகவும் ஒவ்வொரு மாடியின் ஒவ்வொரு முகத்திற்கும் 100 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட ஆறு சன்னல்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு டெபோரா பர்க்கு மற்றும் பெண்டல் & பெண்டல் அமைப்பு நிறுவனமும் சேர்ந்து வடிவமைத்துள்ளன. இலெவன் மாடிசான் பார்க் மற்றும் கிராமெர்சி தாவெர்ன் ஆகிய கட்டிடங்களையும் இவ்வமைப்பு நிறுவனம் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது[14]

”இக்கட்டிடம் ஒரு மெல்லியத் தூண் மட்டுமே இதற்கு ஒரேயொரு சிறிய தொப்பிதான் தேவை” என்று அலங்கார வடிவமைப்பு நிபுணர் திம் கன், 432 பார்க் அவென்யூ கட்டிடத்தைக் குறித்து விவரிக்கிறார்[15]

குடியிருப்புகளின் வசதிகள்[தொகு]

மார்ச்சு 2015 இல் கட்டிடம் கட்டப்படும் போது எடுத்த படம்

இக்கட்டிடத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் ஒவ்வொன்றும் உயர் மேல்மட்டத்து வடிவமைப்பில் உள்ளன. இவை ஏற்கனவே $ 95 மில்லியன் ஒப்பந்தத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நூலகம் ஆறு படுக்கையறை, ஏழு குளியல் மேல்கூரை அறைகள் அடங்கிய கலைக்கூடமாக 351 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளாக அவை இருக்கின்றன[10]. இவைதவிர கட்டிடத்தை ஒட்டி கோல்ப் பயிற்சி வசதிகள் மற்றும் தனியார் உணவு மற்றும் திரையிடல் அறைகள் ஆகிய கூடுதல் வசதிகளும் இவற்றுள் அடங்கும்[16]

.

மேற்கோள்கள்[தொகு]

 1. "432 Park Avenue - The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. பார்க்கப்பட்ட நாள் June 22, 2015.
 2. "Ultra-luxury high rise boom amid New York’s housing crisis". World Socialist Web Site. 24 June 2013. http://www.wsws.org/en/articles/2013/06/24/park-j24.html. பார்த்த நாள்: 5 October 2014. 
 3. 3.0 3.1 "432 Park Avenue". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on ஜனவரி 28, 2012. பார்க்கப்பட்ட நாள் January 13, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. "CIM GROUP AND NEW YORK REAL ESTATE MAGNATE HARRY MACKLOWE PLAN 1,300 FOOT MANHATTAN CONDO AND RETAIL COMPLEX". PBT Consulting. October 23, 2011. பார்க்கப்பட்ட நாள் January 13, 2012.
 5. "432 Park Avenue". SkyscraperPage. பார்க்கப்பட்ட நாள் September 19, 2013.
 6. "Drake Hotel tops most valuable NYC development sites list". The Real Deal. June 21, 2011. Archived from the original on ஜூன் 23, 2011. பார்க்கப்பட்ட நாள் January 13, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. 7.0 7.1 Chaban, Matt A.V. (October 13, 2014). "New Manhattan Tower Is Now the Tallest, if Not the Fairest, of Them All". The New York Times. http://www.nytimes.com/2014/10/14/nyregion/432-park-avenue-tower-the-tallest-if-not-the-fairest-of-them-all.html. பார்த்த நாள்: 2015-01-03. 
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-08.
 9. "Forbes Life". பார்க்கப்பட்ட நாள் October 17, 2014.
 10. 10.0 10.1 Bagli, Charles V. (May 18, 2013). "Boom in Luxury Towers Is Warping New York Real Estate Market". The New York Times. http://www.nytimes.com/2013/05/19/nyregion/boom-in-luxury-towers-is-warping-new-york-real-estate-market.html?hp&_r=0. 
 11. "Construction Update: 432 Park Avenue Now Supertall -- New York YIMBY". பார்க்கப்பட்ட நாள் October 17, 2014.
 12. "Inside the Tallest Residential Building in the Western Hemisphere". ABC News. பார்க்கப்பட்ட நாள் October 17, 2014.
 13. "NYC's $1.3B Supertall Skyscraper Was Inspired by a Trash Can".
 14. "432 Park Avenue". CityRealty.
 15. "Sunday Routine". New York Times. March 20, 2015.
 16. Karmin, Craig (October 19, 2011). "New York Placing Tallest Order". The Wall Street Journal. http://online.wsj.com/article/SB10001424052970203658804576639543415136636.html. பார்த்த நாள்: January 14, 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
432 Park Avenue
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


படக்காட்சியகம்[தொகு]

சனவரி 2006 இல் டிராக் உணவு விடுதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=432_பார்க்_அவென்யூ&oldid=3926913" இலிருந்து மீள்விக்கப்பட்டது