4-வினைல்பென்சைல் குளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வி.பி.யூ, α-குளோரோமெத்தில்சிடைரின்
| |
இனங்காட்டிகள் | |
1592-20-7 | |
ChemSpider | 66739 |
EC number | 250-005-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 74126 |
| |
பண்புகள் | |
C9H9Cl | |
வாய்ப்பாட்டு எடை | 152.62 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.083 |
கொதிநிலை | 229 °C (444 °F; 502 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆல்க்கைலேற்றும் முகவர் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-வினைல்பென்சைல் குளோரைடு (4-Vinylbenzyl chloride) C9H9Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு அல்லது ClCH2C6H4CH=CH2 என்ற அமைப்பு வாய்ப்பாடு கொண்ட இருசெயல் மூலக்கூறாகும். வினைல், பென்சைலிக் குளோரைடு ஆகிய இரண்டு வேதி வினைக்குழுக்களாகவும் செயல்படுகிறது. நிறமற்ற நீர்மமான இது குறிப்பாக பலபடியாதலை தடுப்பதற்காக சேமிக்கப்படுகிறது.
சிடைரினுடன் இணை ஒற்றைப்படியாக 4-வினைல்பென்சைல் குளோரைடைச் சேர்த்து குளோரோமெத்திலேற்ற பல்சிடைரின் உற்பத்தி செய்யப்படுகிறது[1]. இது வினைல்தொலுயீனை குளோரினேற்றம் செய்து தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் வினைல் தொலுயீன் 3- மற்ரும் 4-வினைல் மாற்றியன்களின் கலவையைக் கொண்டுள்ளது. வினைல்பென்சைல் குளோரைடும் மாற்றியன்களின் கலவையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Montheard, Jean Pierre; Jegat, Corinne; Camps, Marcel "Vinylbenzylchloride (chloromethylstyrene), polymers, and copolymers. Recent reactions and applications" Journal of Macromolecular Science, Reviews in Macromolecular Chemistry and Physics 1999, volume C39, pp. 135-174.
- ↑ Denis H. James; William M. Castor (2007), "Styrene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 1, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a25_329.pub2