4-கார்பாக்சிபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-கார்பாக்சிபென்சால்டிகைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
4-பார்மைல்பென்சோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
619-66-9
பண்புகள்
C8H6O3
வாய்ப்பாட்டு எடை 150.13
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை 245 °செ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-கார்பாக்சிபென்சால்டிகைடு (4-Carboxybenzaldehyde ) என்பது C8H6O3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆங்கில எழுத்துகளின் சுருக்கப் பெயராக CBA என்றழைக்கப்படும் இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாடு OCHC6H4CO2H என்றும் எழுதப்படுகிறது. ஒரு பென்சீன் வளையத்தில் ஆல்டிகைடு மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் ஆகிய வேதி வினைக்குழுக்கள் இரண்டும் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. p-சைலின் என்ற அரோமாட்டிக் ஐதரோ கார்பனில் இருந்து தெரிப்தாலிக் அமிலம் தயாரிக்கும் போது இச்சேர்மம் 0.5% அளவில் உருவாகிறது. ஒவ்வொர் ஆண்டும் தோராயமாக 40,000,000 டன் தெரிப்தாலிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக 4-கார்பாக்சிபென்சால்டிகைடு பெருமளவில் தயாரிக்கப்படக்கூடிய தொழிற்முறை வேதிப்பொருளாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Scott D. Barnicki "Synthetic Organic Chemicals" in Handbook of Industrial Chemistry and Biotechnology edited by James A. Kent, New York : Springer, 2012. 12th ed. ISBN: 978-1-4614-4258-5 (Print) 978-1-4614-4259-2 (Online)