4-அனிசால்டிகைடு
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-மெத்தாக்சிபென்சால்டிகைடு | |||
| முறையான ஐயூபிஏசி பெயர்
4-மெத்தாக்சிபென்சீன்கார்பால்டிகைடு | |||
வேறு பெயர்கள்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 123-11-5 | |||
| ChEMBL | ChEMBL161598 | ||
| ChemSpider | 28984 21105937 | ||
InChI
| |||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 31244 | ||
| |||
| UNII | 9PA5V6656V | ||
| பண்புகள் | |||
| C8H8O2 | |||
| வாய்ப்பாட்டு எடை | 136.15 g·mol−1 | ||
| அடர்த்தி | 1.119 கி/செ.மீ3[2] | ||
| உருகுநிலை | −1 °C (30 °F; 272 K)[2] | ||
| கொதிநிலை | 248 °C (478 °F; 521 K)[2] | ||
| தீங்குகள் | |||
| தீப்பற்றும் வெப்பநிலை | 108 °C (226 °F; 381 K) | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
4-அனிசால்டிகைடு (4-Anisaldehyde) என்பது C8H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-அனிசால்டிகைடு, அனிசிக் ஆல்டிகைடு, அனிசு ஆல்டிகைடு போன்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. பொதுவாக இயற்கை மற்றும் செயற்கை நறுமணப்பொருள்கள் இரண்டிலும் காணப்படுகிறது. 4-அனிசால்டிகைடின் கட்டமைப்பில் ஒரு பென்சீன் வளையமும் ஓர் ஆல்டிகைடு மற்றும் மெத்தாக்சி குழுவும் இடம்பெற்றுள்ளன. தெளிவான நீர்மமான இச்சேர்ம்ம் வலுவான அரோமாட்டிக் பண்பைப் பெற்றுள்ளது. ஆர்த்தோ-அனிசால்டிகைடு, மெட்டா-அனிசால்டிகைடு என்ற தொடர்புடைய இரண்டு மாற்றியன்கள் அறியப்பட்டாலும் அவை அரிதாகவே தோன்றுகின்றன. மலர் போன்ற இனிய நுகரும் வாசனையைக் கொண்டுள்ள சேர்மமாகும்.
உற்பத்தி
[தொகு]மெத்தாக்சிதொலுயீனை (பாரா-கிரெசைல் மெத்தில் ஈதர்) மாங்கனீசு டை ஆக்சைடைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து வர்த்தகமுறையில் அனிசால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. சில ஆல்க்கால் தன்மை கொண்ட பானங்களில் காணப்படும் அனிதோல் எனப்படும் நறுமணப்பொருளை ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம் [3].
பயன்கள்
[தொகு]அமைப்புரீதியாக வனில்லின் சேர்மத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் அனிசால்டிகைடு நறுமணம் மற்றும் நறுமணச்சுவை தொழிலில் பெரிதும் பயன்படுகிறது [3]. மருந்துகள் மற்றும் நறுமணங்கள் போன்ற பிற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்கும் போது இடைநிலை விளைபொருளாகவும் பயன்படுகிறது. ஆர்த்தோ-அனிசால்டிகைடு அதிமதுரத்தின் நறுமணம் போன்ற மணத்தை கொண்டதாகும். அமிலம் மற்றும் எத்தனாலிலுள்ள பாரா-அனிசால்டிகைடு மென்படல நிறப்படிவு பிரிகையியலில் மிகுந்த பயனை அளிக்கிறது [4]. தட்டுகளிலுள்ள வெவ்வேறு வேதிச்சேர்மங்கள் வெவ்வேறு வண்ணங்களைத் தருவதால் வேறுபடுத்தி அறிவது எளிமையாக முடிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merck Index, 11th Edition, 693
- 1 2 3 "p-Anisaldehyde". Sigma-Aldrich.
- 1 2 Karl-Georg Fahlbusch, Franz-Josef Hammerschmidt, Johannes Panten, Wilhelm Pickenhagen, Dietmar Schatkowski, , Kurt Bauer, Dorothea Garbe and Horst Surburg "Flavors and Fragrances" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2003. எஆசு:10.1002/14356007.a11_141
- ↑ Stains for Developing TLC Plates

