உள்ளடக்கத்துக்குச் செல்

3 பி. ஹெச். கே.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3 பி. ஹெச். கே.
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஸ்ரீ கணேஷ்
தயாரிப்புஅருண் சிவா
திரைக்கதைஸ்ரீ கணேஷ்
இசைஅம்ரித் இராம்நாத்
நடிப்பு
ஒளிப்பதிவு
  • தினேஷ் பி. கிருஷ்ணன்
  • ஜித்தின்
படத்தொகுப்புகணேஷ் சிவா
கலையகம்சாந்தி டாக்கீஸ்
வெளியீடு4 சூலை 2025 (2025-07-04)
ஓட்டம்141 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

3 பி. ஹெச். கே. (3BHK) 2025-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நாடகம் தொடர்பான இப்படத்தை ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கினார். அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய 3பி. ஹெச். கே. வீடு என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட, இத்திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஸ்வா தயாரித்தார்.[2] சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா ஜே ஆச்சார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்

[தொகு]

வாசுதேவன், அவருடைய மனைவி சாந்தி, மகன் பிரபு, மகள் ஆர்த்தி என நால்வரும் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஒரே இலட்சியம் பணத்தை மிச்சப்படுத்துவது, சொந்த வீட்டை வாங்குவது. இவர்களின் கனவைக் காகிதத்தில் எழுதி வருகின்றனர். இவர்கள் சேமிக்கும் பணம், ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு வழியில் செலவாகிறது. ஆனால் இறுதியாக இவர்கள் சொந்தமாக வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பது கதைக்கருவாகும்.

நடிகர், நடிகையர்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
பாடல்கள்
# பாடல்வரிகள்பாடியோர் நீளம்
1. "கனவெல்லாம்"  ஸ்ரீ கணேஷ்அனந்து, கல்யாணி நாயர், உத்தாரா உன்னிகிருஷ்ணன், அம்ரித் இராம்நாத்  
2. "துள்ளும் நெஞ்சம்"  கார்த்திக் நேத்தாசிரேயா கோசல், அம்ரித் இராம்நாத்  
3. "இடி மழை"  பால் டப்பாபால் டப்பா, அம்ரித் இராம்நாத்  
4. "ஒரு கனா"  ஸ்ரீ கணேஷ்ஹரிசரண்  
5. "ஒரு கனா (மறுவடிவம்)"  ஸ்ரீ கணேஷ்சித்தார்த்,  
6. "கானலின் மேலே"  விவேக்சின்மயி, சூரஜ் சந்தோஷ்  
7. "வீழ்வேனா"  ஸ்ரீ கணேஷ்பிரதீப் குமார்  
8. "வீழ்வேனா (மறுவடிவம்)"  ஸ்ரீ கணேஷ்அம்ரித் இராம்நாத்  
9. "வீழ்வேனா (இசை மட்டும்)"      

மேற்கோள்கள்

[தொகு]
  1. "3 Bhk (12A)". British Board of Film Classification (in ஆங்கிலம்). 26 June 2025. Retrieved 1 July 2025.
  2. Rajaraman, Kaushik (2024-05-19). "Sri Ganesh, Siddharth unite for a human drama". www.dtnext.in (in ஆங்கிலம்). Retrieved 2025-02-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3_பி._ஹெச்._கே.&oldid=4306925" இலிருந்து மீள்விக்கப்பட்டது