30 சென் மேரி அக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

30 சென் மேரி அக்ஸ் என்பது ஐக்கிய இராச்சியத்தின், இலண்டன் நகரிலுள்ள ஒரு கட்டிடமாகும். 1992 ஆம் ஆண்டு வரை, தற்போது இக்கட்டிடம் அமைந்துள்ள இடத்தில், பாட்ல்டிக் எக்ஸ்சேஞ்ச் கட்டிடம் இருந்தது. 1992, ஏப்ரல் 10 ஆம் திகதி, இக்கட்டிடத்துக்கு அருகில், ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் (IRA) வெடிக்க வைக்கப்பட்ட பாரிய குண்டொன்று, இக் கட்டிடத்தை முற்றாக அழித்ததுடன், அயலுலுள்ள கட்டிடங்களுக்கும் பெரிய சேதங்களை உண்டுபண்ணியது.

30-St-Mary-Axe.jpg
Work in progress on the Swiss Re "Gherkin"

இந்த அழிவைத் தொடர்ந்து ஆங்கிலப் பாரம்பரியம் மற்றும் இலண்டன் கார்ப்பரேஷன், இந்த இடத்தில் வரக்கூடிய அபிவிருத்திகள் எதுவும், இக் கட்டிடத்தின் முகப்பையும், அலங்காரமான எக்ஸ்சேஞ்ச் மண்டபமும், முன்போலவே மீளமைக்கப் படவேண்டுமென்று வலியுறுத்தின. பால்ட்டிக் எக்ஸ்சேஞ்ச், இத்தகையதொரு அபிவிருத்திக்குத் தேவையான நிதியைக் கொண்டிராததால், இந் நிலம், 1995 ல் ட்ரபல்கர் ஹவுஸ் (Trafalgar House) என்னும் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அவ்விடத்திலிருந்த பெரும்பாலான எஞ்சியிருந்த அமைப்புக்கள் கவனமாக அகற்றப்பட்ட அதேவேளை, எக்ஸ்சேஞ்ச் மண்டபத்தின் உட்புறமும், முகப்பும் இயற்கை மூலங்களால் பழுதடையாதிருப்பதற்காக மூலப்பட்டன. "ஆங்கிலப் பாரம்பரியம்" அமைப்பின் பிந்திய மதிப்பீடுகள்மூலம் சேதங்கள் முன்னர் எதிர்பார்த்ததிலும் கடுமையாக இருந்ததாகத் தெரியவந்ததனால், அவர்கள் கட்டிடத்தை மீளமைப்புச் செய்யவேண்டுமென்ற அவர்களது வலியுறுத்தலைக் கைவிட்டனர். இம்முடிவு பின்னர் பெரிம் சர்ச்சைக்கு உள்ளானது.

2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ல், பெரிதான ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் பிரதிப் பிரதம மந்திரியாயிருந்த ஜோன் பிறெஸ்கொட் அவர்கள் திட்டமிடல் அனுமதியை வழங்கினார்கள்.

புதிய கட்டிடம், 2004 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படவுள்ள இக் கட்டிடம் நோர்மன் பொஸ்டர் கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. வழமைக்கு மாறான கூம்பு வடிவத் தோற்றம் வடிவமைக்கப்பட்டது, காற்றுச் சுலபமாகக் கட்டிடத்தைச் சுற்றிச் செல்வதற்காகவாகும். இது கட்டி முடிக்கப்படும்போது, இதன் முக்கிய குடியிருப்பாளராக, சுவிஸ் ரே மீள்காப்புறுதி நிறுவனம் இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=30_சென்_மேரி_அக்ஸ்&oldid=2266244" இருந்து மீள்விக்கப்பட்டது