3-நைட்ரோ அனிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3-நைட்ரோ அனிலின்
3-Nitroaniline
Skeletal formula of 3-nitroaniline
Ball-and-stick model of the 3-nitroaniline molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-நைட்ரோ அனிலின்
முறையான ஐயூபிஏசி பெயர்
3-Nitrobenzenamine
வேறு பெயர்கள்
meta-Nitroaniline
m-Nitroaniline
இனங்காட்டிகள்
99-09-2 Yes check.svgY
ChEMBL ChEMBL14068 Yes check.svgY
ChemSpider 7145 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C6H6N2O2
வாய்ப்பாட்டு எடை 138.14 கி/மோல்
தோற்றம் மஞ்சள்,திண்மம்
உருகுநிலை
கொதிநிலை 306 °C (583 °F; 579 K)
0.1 கி/100 மி.லி (20°செ)
காடித்தன்மை எண் (pKa) 2.47
-70.09·10−6 cm3/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

3-நைட்ரோ அனிலின் (3-Nitroaniline) என்பது C6H6N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா-நைட்ரோ அனிலின், மெ-நைட்ரோ அனிலின் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. எளிதில் ஆவியாகாத நிலைப்புத் தன்மை கொண்ட திண்மமாக சாயங்கள் தயாரிப்பில் மூலப்பொருளாக உதவுகிறது. 3-நைட்ரோ அனிலின் என்பது ஒரு அனிலின் வகைச் சேர்மமாகும். அனிலினின் மூன்றாவது நிலையில் ஒரு நைட்ரோ வேதி வினைக்குழுவை கொண்டிருக்கிறது. அமில, கார, நடுநிலைக் கரைசல்களில் இச்சேர்மம் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. உடனடியாக உயிரினச்சிதைவு அடையாத சேர்மம் என்றும் குறைவான உயிரினத் திரட்டுத்திறன் கொண்ட பொருள் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. [1].

அசோ பிணைப்பு பகுதிப் பொருள் 17 இன் வேதியியல் இடைநிலையாக 3-நைட்ரோ அனிலின் பயன்படுகிறது. சாயங்கள் மஞ்சள் 5 மற்றும் அமிலநீலம் 29 ஆகியனவற்றை சிதறச் செய்கின்றன. சாயச் செயல்முறையின் போது இது சாயக்கச்சாப் பொருள் மற்றும் மெட்டா நைட்ரோபீனால் சேர்மமாக மாற்றமடைகிறது.

தொகுப்பு முறை தயாரிப்பு[தொகு]

பென்சமைடை நைட்ரசனேற்றம் செய்து தொடர்ந்து இதை ஆப்மான் மறுசீராக்கல் வினைக்கு உட்படுத்தி 3-நைட்ரோபென்சமைடு தயாரிக்கப்படுகிறது. 3-நைட்ரோபென்சமைடுன் சோடியம் ஐப்போபுரோமைட்டு அல்லது சோடியம் ஐப்போகுளோரைட்டு சேர்த்து சூடாக்கினால் அமைடு தொகுதி அமீன் தொகுதியாக மாற்ரப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=3-நைட்ரோ_அனிலின்&oldid=2295046" இருந்து மீள்விக்கப்பட்டது