3-அமினோபிரிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-அமினோபிரிடின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-3-அமீன்
வேறு பெயர்கள்
3-பிரிடினமீன்; 3-பிரிடைலமீன்
இனங்காட்டிகள்
462-08-8 Y
ChemSpider 9615 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10009
SMILES
  • C1=CC(=CN=C1)N
UNII 69JE8P2L84 Y
பண்புகள்
C5H6N2
வாய்ப்பாட்டு எடை 94.12 g·mol−1
உருகுநிலை 65 °C (149 °F; 338 K)
கொதிநிலை 248 °C (478 °F; 521 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 124 °C (255 °F; 397 K)
Autoignition
temperature
628 °C (1,162 °F; 901 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

3-அமினோபிரிடின் (3-Aminopyridine) என்பது C5H6N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். அமினோபிரிடின் சேர்மத்தின் மூன்று மாற்றியன்களில் 3-அமினோபிரிடினும் ஒன்றாகும். நிறமற்ற திண்மப் பொருளாக இது காணப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

நிகோடினமைடுடன் சோடியம் ஐப்போபுரோமைட்டை சேர்த்து சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவ்வினைக்காக சோடியம் ஐதராக்சைடுடன் புரோமினை சேர்த்து 70 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தளத்திலேயே சோடியம் ஐப்போபுரோமைட்டு தயாரிக்கப்படவேண்டும்.[1]

கரிம ஈந்தணைவியான 3-பிரிடைல் நிக்கோடினமைடு தயாரிப்புக்கு 3-அமினோபிரிடின் பயன்படுத்தப்படுகிறது. தொகுப்பில் பயன்படுத்தப்படலாம். திராக்சிபைடு என்ற மருந்து தயாரிப்பிலும் 3-அமினோபிரிடின் பயன்படுத்தப்படுகிறது.

நச்சுத் தன்மை[தொகு]

காடைகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் போது 3-அமினோபிரிடின் சேர்மத்தின் உயிர் கொல்லும் அளவு ஒரு கிலோகிராமுக்கு 178 மில்லிகிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Allen, C. F. H.; Wolf, Calvin N. (1950). "3-Aminopyridine". Organic Syntheses 30: 3. doi:10.15227/orgsyn.030.0003. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV4P0045. ; Collective Volume, vol. 4, p. 45
  2. Shinkichi Shimizu; Nanao Watanabe; Toshiaki Kataoka; Takayuki Shoji; Nobuyuki Abe; Sinji Morishita; Hisao Ichimura (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a22_399
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-அமினோபிரிடின்&oldid=3426315" இலிருந்து மீள்விக்கப்பட்டது