274301 விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
274301 விக்கிப்பீடியா
Orbit of 274301 Wikipedia
கண்டுபிடிப்பு
கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஆண்ட்ருசிவ்கா வானாய்வகம்
கண்டுபிடிப்பு நாள் ஆகஸ்ட் 25, 2008
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 274301 விக்கிப்பீடியா
வேறு பெயர்கள்2008 QH24, 2007 FK34, 1997 RO4
சிறு கோள்
பகுப்பு
முதன்மை பட்டை சிறுகோள்
காலகட்டம்JD 2456400.5 (ஏப்ரல் 18, 2013)
சூரிய சேய்மை நிலை2.7304718 AU (408,472,770 km)
சூரிய அண்மை நிலை 2.0353200 AU (304,479,540 km)
அரைப்பேரச்சு 2.3828959 AU (356,476,150 km)
மையத்தொலைத்தகவு 0.1458628
சுற்றுப்பாதை வேகம் 1343.5568 நாள்s
3.68 years
சராசரி பிறழ்வு 105.33152°
சாய்வு 6.72984°
Longitude of ascending node 183.49232°
Argument of perihelion 139.63634°
சிறப்பியல்பு
விண்மீன் ஒளிர்மை 16.9

274301 விக்கிப்பீடியா (provisional designations: 2008 QH24, 2007 FK34, 1997 RO4) ஒரு முதன்மை பட்டை சிறுகோள் ஆகும். இது ஆகஸ்ட் 2008இல், ஆண்ட்ருசிவ்கா வானாய்வகத்தினால் கண்டறியப்பட்டது. இந்த சிறுகோள் ஜனவரி 2013ல் இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் நினைவாக விக்கிப்பீடியா எனப் பெயரிடப்பட்டது.[2]

கண்டுபிடிப்பு[தொகு]

இச்சிறுகோள் உக்ரைன் நாட்டின் ஒரேயொரு தனியார் வானாய்வகமான, ஆண்ட்ருசிவ்கா வானாய்வகத்தின் (A50) வானாய்வாளர்களால் கண்டறியப்பட்டது.[3] இவ்வானாய்வகம் 2003லிருந்து 90 சிறுகோள்களுக்கு மேல் கண்டறிந்துள்ளது.[4] இச்சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 25, 2008, 22:47 (UTC) அன்று ஆண்ட்ருசிவ்கா குழுவினரால் அவதானிக்கப்பட்டது.[5] பிறகு அதற்கடுத்த நாள் இரவும் அவதானிக்கப்பட்டது, மேலும் இதற்கு தற்காலிக பெயர் 2008 QH24 வழங்கப்பட்டது.[6] பிறகு இச்சிறுகோள் செப்டெம்பர் 6 ஆம் தேதியும் ஆண்ட்ருசிவ்கா குழுவினரால் அவதானிக்கப்பட்டது, மேலும் இதன் சுற்றுவட்டப்பாதையும் துல்லியமாக கணக்கிடப்பட்டது. ஏப்ரல் 18, 2011 அன்று எண் 274301 இச்சிறுகோளுக்கு வழங்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 274301 விக்கிப்பீடியா at the JPL Small-Body Database
  2. IAU Minor Planet Circular, page 82403 (January 27, 2013)
  3. RegioNews (January 31, 2013). "Астероїд, відкритий в Україні, було названо «Вікіпедія»". Archived from the original on டிசம்பர் 24, 2018. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 5, 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Cite has empty unknown parameter: |pub= (help)
  4. Minor Planet Center (January 30, 2013). "Minor Planet Discoverers". {{cite web}}: Cite has empty unknown parameter: |pub= (help)
  5. Minor Planet Center (January 30, 2013). "(274301) Wikipedia = 1997 RO4 = 2007 FK34 = 2008 QH24". {{cite web}}: Cite has empty unknown parameter: |pub= (help)
  6. Minor Planet Center (September 14, 2008). "MPS 255948" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |pub= (help)
  7. Minor Planet Center (April 18, 2011). "MPC 74684" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |pub= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=274301_விக்கிப்பீடியா&oldid=3654999" இலிருந்து மீள்விக்கப்பட்டது