2319 அலுமினியக் கலப்புலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2319 அலுமினியக் கலப்புலோகம்[1]:{{{3}}}) (2319 Aliminium alloy) என்பது அலுமினியத்தின் உலோகக் கலவையாகும். இக்கலப்புலோகத்தில் தாமிரம் (5.8–6.8%) உலோகக் கலவையாக்கும் உலோகமாகக் கலந்துள்ளது[2]:{{{3}}}. மேலும் இக்கலப்புலோகத்தில் சிலிக்கன் ≤0.20%, இரும்பு ≤0.30%, மாங்கனீசு 0.20–0.40%, மக்னீசியம் ≤0.02%, துத்தநாகம் ≤0.10% , தைட்டானியம் 0.10–0.20%, வனேடியம் 0.05–0.15% , சிர்க்கோனியம் 0.10–0.25%, பெரிலியம் ≤0.0003% மற்றும் 0.15% வரை நுண்ணளவுத் தனிமங்கள் சேர்ந்துள்ளன[2]:{{{3}}}[3]:{{{3}}}. 2319 அலுமினியக் கலப்புலோகத்தின் அடர்த்தி 2840 கி.கி/மீ3 ஆகும். இக்கலப்புலோகம் முதன் முதலில் அமெரிக்காவில் 1958 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது[3]:{{{3}}}.

2319 அலுமினியக் கலப்புலோகம் குறிப்பாக வில் பற்றவைப்பு மின்முனைகளில் அல்லது 2219 அலுமினியக் கலப்புலோகத்துடன் சேர்த்து செய்பொருட்களில் நிரப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது[2]:{{{3}}}.

மேற்கோள்கள்[தொகு]

  1. Society of Automotive Engineers; American Society for Testing and Materials (1999), Metals & Alloys in the Unified Numbering System, Handbook Supplements Series (8th ed.), Warrendale, PA, U.S.: Society of Automotive Engineers, ISBN 978-0-7680-0407-6, OCLC 40823370, பார்க்கப்பட்ட நாள் July 14, 2010
  2. 2.0 2.1 2.2 ASM International Handbook Committee (2002) [1990], "Properties and Selection: Nonferrous Alloys and Special-Purpose Materials", 2319 (5.3Cu-0.3Mn-0.18Zr-0.15Ti-0.10V), ASM Handbook, Materials Park, OH, U.S.: ASM International, vol. 2, ISBN 978-0-87170-378-1, OCLC 468232862, பார்க்கப்பட்ட நாள் July 14, 2010, Electrodes and filler wire for welding 2219
  3. 3.0 3.1 "International Alloy Designations and Chemical Composition Limits for Wrought Aluminum and Wrought Aluminum Alloys" (PDF), Teal Sheets, Registration Record Series, Arlington, VA, U.S.: The Aluminum Association, February 2009, archived from the original (PDF) on ஜூலை 13, 2010, பார்க்கப்பட்ட நாள் July 14, 2010 {{citation}}: Check date values in: |archivedate= (help)