2048 (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2048
2048 logo.png
2048 விளையாட்டின் சின்னம்
ஆக்குனர் கேப்ரியலே சர்குல்லி
கணிமை தளங்கள் இணையதளம், கைபேசி
வெளியான தேதி மார்ச்சு 9, 2014[1]
பாணி புதிர்
வகை தனியாள் விளையாட்டு


2048 என்பது புதிர் விளையாட்டு ஆகும். இது கணித அறிவை அடிப்படையாகக் கொண்டு விளையாடக் கூடியது. இதை ஒருவர் மட்டுமே விளையாட முடியும். இந்த விளையாட்டு இணையதளங்களிலும், கைபேசிகளிலும் கிடைக்கிறது.

விளையாடும் முறை[தொகு]

விளையாட்டின் இடையில் எடுக்கப்பட்ட படம்
முடிக்கப்பட்ட விளையாட்டு. 2048 என்ற எண் வவது மூலையில் இருப்பதைக் காண்க.

இந்த விளையாட்டில் 4×4 கட்டங்கள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு கட்டத்தில் எண்ணால் எழுதப்பட்ட பெட்டி தோன்றும். பொதுவாக, இரண்டு, நான்கு ஆகிய எண்களை எழுதிய பெட்டிகள் தோன்றும். அந்த பெட்டியை அதே எண் கொண்ட பெட்டியுடன் இணைத்தால் அதன் இரு மடங்கான எண் கொண்ட பெட்டி கிடைக்கும். இவ்வாறு சேர்த்துக் கொண்டே 2048 என்ற எண்ணை அடைய வேண்டும். எடுத்துக்காட்டாக, நான்கு என்று எழுதப்பட்ட இரு பெட்டிகள் ஒன்றின்கீழ் ஒன்றாக இருந்தால், ஏதாவது ஒன்றை மற்றொன்றின் திசையில் நகர்த்த வேண்டும். அவை இணைந்தவுடன் இரு மடங்கு கொண்ட எண் தோன்றும். எந்த திசைகளுக்கு நகர வேண்டுமோ அதற்கு உரிய மேல், கீழ், இடது, வலது அம்புகுறியை அழுத்த வேண்டும். குறுக்குவாட்டில் பெட்டிகளை இணைக்க முடியாது. வெறுமையான கட்டத்திற்கு பெட்டிகளை நகரத்தலாம். ஒவ்வொரு பெட்டியாக நகர்த்த முடியாது. ஒரு திசைக்கான அம்புகுறியை அழுத்தினால், எல்லா பெட்டிகளும் அந்த திசையை நோக்கி நகரும். எல்லா கட்டங்களிலும் பெட்டிகள் இருந்து, அவற்றின் அருகில் அதே எண் கொண்ட பெட்டிகள் இல்லாவிடில் அவற்றை இணைக்க முடியாது. புதிய பெட்டி தோன்றுவதற்கான கட்டம் இல்லாததால் ஆட்டம் தோல்வியில் முடிவடையும். 2048 என்ற எண்ணை அடைந்தால் ஆட்டத்தில் வெற்றி பெற்றதாக கருதப்படும். அதைத் தாண்டியும் விளையாடலாம்.

பெரிய எண்களை கடைசி வரிசைக் கட்டங்களில் வைத்துக் கொண்டால் விளையாட்டில் எளிமையாக வெற்றியடையலாம். இந்த விளையாட்டில் அதிகபட்சமாக 131,072 என்ற எண் சேரும் வரையில் விளையாட முடியும். அதிகபட்சமாக 3,932,100 புள்ளிகளைப் பெற முடியும்.[2]

சான்றுகள்[தொகு]

  1. Dickey, Megan Rose (March 23, 2014). "Puzzle Game 2048 Will Make You Forget Flappy Bird Ever Existed". Business Insider. பார்த்த நாள் March 27, 2014.
  2. "Математика и игра 2048" (Russian). Habrahabr.ru (April 17, 2014). பார்த்த நாள் July 23, 2014.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2048_(விளையாட்டு)&oldid=2746537" இருந்து மீள்விக்கப்பட்டது