2032 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Games of the XXXV Olympiad
ஒலிம்பிக்கு அதிகாரபூவ சின்னம்
நடத்தும் நகரம்பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
துவக்கம்23 சூலை
நிறைவு8 ஆகத்து
அரங்குபிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்
கோடைக்காலம்
குளிர்காலம்
← 2030
2034 →

2032 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள் (2032 Summer Olympics, அதிகாரபூர்வமாக 35-வது ஒலிம்பியாது போட்டிகள் (Games of the XXXV Olympiad), பொதுவாக பிரிசுபேன் 2032 (Brisbane 2032) என்பது 2032 சூலை 23 முதல் ஆகத்து 8 வரை ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத் தலைநகர் பிரிசுபேனில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] 2032 போட்டிகளை நடத்துவதற்கான வெற்றிகரமான ஏலம் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் 2021 சூலை 21 அன்று 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.[2] 2021 பிப்ரவரி 24 அன்று பிரிஸ்பேன் நகரம் முதன்மை விருப்பு நகரமாக அறிவிக்கப்பட்டது, 2021 சூலை 10 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் முறையான அங்கீகாரத்தைப் பெற்றது.[3][4][5] புதிய ஏல நடைமுறைகளின் கீழ் ஒலிம்பிக் போட்டியை நடத்தத் தெரிவான முதல் நகரமாகவும், 1984 லாஸ் ஏஞ்சலசு போட்டிகளுக்குப் பின்னர் போட்டியின்றி வென்ற முதல் நகரமாகவும் பிரிஸ்பேன் ஆனது.[1]

இது ஆத்திரேலியாவில் நடைபெறும் மூன்றாவது கோடை ஒலிபிக்குப் போட்டியாகும். முன்னதாக 1956 இல் மெல்பேர்ண் நகரமும், 200-ஆம் ஆண்டில் சிட்னி நகரமும் கோடைப் போட்டிகளை நடத்தியிருந்தன.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
லாசு ஏஞ்சலசு
கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள்
பிரிஸ்பேன்

XXXV ஒலிம்பியாது (2032)
பின்னர்
2036 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள்