2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
இக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும்.
இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீரெனவும், தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகலாம். |
| 16-ஆவது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு | ||
|---|---|---|
| ||
16-ஆவது கணக்கெடுப்பின் சின்னம் | ||
| பொதுத் தகவல் | ||
| நாடு | இந்தியா | |
| ஆணையம் | தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் | |
| வலைத்தளம் | censusindia.gov.in | |
2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்திய அரசு 16-ஆவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 1 அக்டோபர் 2026 மற்றும் 1 மார்ச் 2027 ஆகிய நாட்களில் துவக்க இருப்பதற்கான அரசாணையை 16 சூன் 2025 அன்று வெளியிட்டுள்ளது.[2]2027-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் சிறப்பம்சம் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதாகும். இதற்கு முன்னர் 1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 1941-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சாதி வாரி தரவுகள் எடுக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.[3]
பனி அதிகம் பொழியும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் ஆகிய மாநிலங்களில் மட்டும் அக்டோபர் 1, 2026 என்ற நாளை அடிப்படையாகக் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற நாளை அடிப்படையாகக் கொண்டும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிக்கு நாடு முழுவதிலிருந்து தரவுகளைத் திரட்டும் பணியில் சுமார் 34 இலட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் கணக்கெடுப்பு அதிகாரிகள் மின்னணு கருவிகளுடன் ஈடுபடுவார்கள்[4]. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிக கடுமையான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.[5] [6]
பின்னணி
[தொகு]இந்தியாவில் இறுதியாக 2011-ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்த கணக்கெடுப்பு 2021-ஆம் ஆண்டில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் 2020 கொரனா பெரும் தொற்று மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தல் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.
கணக்கெடுப்பு நடைமுறை
[தொகு]முதல் கட்ட கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள்
[தொகு]மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். மார்ச் 1 முதல் 30 செப்டம்பர் வரையிலான முதல் கட்ட கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் 33 கேள்விகளின் விவரம் பின்வருமாறு:[7][8]
- கட்டிட எண்/பிளாட் நம்பர் (உள்ளாட்சி அமைப்புகள் குறித்தபடி)
- கதவு எண்
- தரை தளத்தின் கட்டுமானப் பொருட்கள்
- சுவர்களின் கட்டுமானப் பொருட்கள்
- கூரையின் கட்டுமானப் பொருட்கள்
- வீட்டின் பயன்பாடுகள்
- வீட்டின் தற்போதைய நிலை
- Household number
- வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை
- வீட்டுத் தலைவரின் பெயர்
- வீட்டுத்தலைவரின் பாலினம்
- வீட்டுத்தலைவர் தலித் அல்லது பழங்குடியினமா அல்லது பிறரா?
- வீட்டு உரிமைத் தன்மை (சொந்த வீடா அல்லது வாடகை வீடா?)
- வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிகை
- வீட்டில் எத்தனை தம்பதிகள் வாழ்கின்றனர்?
- குடிநீருக்கான முக்கிய ஆதாரம்
- மின்சாரத்திற்கான ஆதாரம்
- கழிப்பிட வசதி உள்ளதா?
- என்ன வகையான கழிப்பிடம்?
- கழிவு நீர் செல்ல வசதி உள்ளதா?
- குளியலறை வசதி
- சமையலறை & பெட்ரோலிய எரிவாயு/ இயற்கை எரிவாயு வசதிகள்
- சமையறைக்கான முக்கிய எரிபொருள்
- வானொலி /டிரான்ஸ்சிஸ்டர்
- தொலைக்காட்சிப் பெட்டி
- இணைய வசதி
- மடிக்கணினி/கணிப்பொறி
- டெலிபோன்/அலைபேசி/திறன்பேசி
- மிதி வண்டி/மொபெட்/ஸ்கூட்டர்/மோட்டார் சைக்கிள்
- கார்/ஜீப்/வேன்
- சமைக்கப் பயன்படுத்தும் முக்கியத் தானியங்கள்
- தொலைபேசி எண் (மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தகவல்தொடர்புகளுக்கு மட்டும்)
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் போது
[தொகு]இரண்டாம் கட்டத்தில் தனிநபர் தரவுகளான பெயர், வயது, பாலினம், பிறந்த நாள், குடும்பத் தலைவருடனான உறவு, திருமண நிலை, கல்வி, தொழில், சமயம், சாதி/பழங்குடி, மாற்றுத் திறனாளி நிலை, புலம்பெயர்ந்த வரலாறு போன்ற தரவுகள் சேகரிக்கப்படும்.[9][10] வீடற்றவர்களின் தரவுகளும் சேகரிக்கப்படும்.
சிறப்பம்சங்கள்
[தொகு]2027 மக்கள்தொகைக் கணக்கு அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்படும். மேலும் இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பட்டியல் சமூகத்தவர்களுக்கான தொகுதிகளும் மறுவரை செய்யப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Population Census-2027 to be conducted in two phases along with enumeration of castes". Press Information Bureau: pp. 1. 4 June 2025. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133845.
- ↑ Census 2027 process begins: Govt issues notification; first population count since 2011
- ↑ நிவேதா நா., அ. பாலாஜி (2025-05-01). "90 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு அறிவித்த 'சாதிவாரி கணக்கெடுப்பு'; அதன் விளக்கமும், தேவையும்!". விகடன். Retrieved 2025-06-18.
- ↑ மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
- ↑ Census: Indian govt notifies conducting population count from March 1, 2027
- ↑ "Centre issues notification for Census in 2027". The Indian Express (in ஆங்கிலம்). 2025-06-16. Retrieved 2025-06-18.
- ↑ What will you be asked during first phase of Census 2027? See full list of questions
- ↑ வீட்டிற்கே வரும் அதிகாரிகள்.. இந்த 33 கேள்விகளுக்கும் பதிலை ரெடியா வைச்சு இருங்க.. ரொம்ப முக்கியம்
- ↑ People should disclose details as per Census Act: Home Ministry
- ↑ How India conducts its Census — and what is new in 2027