2026 வங்காளதேசப் பொதுத்தேர்தல்
| ||||||||||||||||||||||||||||||||||||||||
| Opinion polls | ||||||||||||||||||||||||||||||||||||||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 127,711,793 | |||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||
தொகுதி வரைபடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
2026 வங்காளதேசப் பொதுத்தேர்தல் (2026 Bangladeshi general election), 12வது வங்காளதேச நாடாளுமன்றத்தின் 300 இடங்களுக்கு 12 பிப்ரவரி 2026 அன்று நடைபெறும் பொதுத்தேர்தல் ஆகும்.[1]இத்தேர்தல் முடிவால் ஆகஸ்டு 2024 முதல் செயல்படும் வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கு பதிலாக ஜனநாயக அரசு ஏற்படும்.[2]நாடு முழுவதும் 42,766 மையங்களில் 2,47,499 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 127 மில்லியன் மக்களுக்கு மேல் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.[3] இத்தேர்தலுடன் 2026 வங்காளதேச அரசியலமைப்பு வாக்கெடுப்பும் நடைபெற்றது.
300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 1,981 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 2024 பொதுத்தேர்லில் வென்ற அவாமி லீக் கட்சி இத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.[4]இதனால் வங்காளதேச தேசியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி & தேசிய குடிமக்கள் கட்சி தலைமையிலான 11 கட்சி கூட்டணி மற்றும் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது.[5]
இத்தேர்தலில் முதன்முறையாக தேர்தல் அலுவலர்கள் தபால் மூலம் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.[6][7]
இத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்காளதேச தேசியக் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல் 209 நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.
பின்னணி
[தொகு]2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சேக் அசீனா தலைமையில் அவாமி லீக் கட்சி வென்று ஆட்சி அமைத்தது.[8] சூன் 2024ல் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக சேக் அசீனாஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது.[9] 5 ஆகஸ்டு 2024 அன்று வங்கதேச அதிபர் முகம்மது சகாபுத்தீன் நாடாளுமன்றத்தை கலைத்தார். சேக் அசீனா பிரதமர் பதவியைத் துறந்தார்.[10]சேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார். சிறையிலிருந்து வங்காளதேச தேசியக் கட்சி தலைவர் காலிதா சியா விடுவிக்கப்பட்டார்.[11]
மாணவப் போராட்டத் தலைவர்களுக்கும், பாதுகாப்புப் படைவீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சமசரசப் பேச்சின் முடிவில், அடுத்த பொதுத்தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, வங்கதேச இடைக்கால அமைச்சரவையின் தலைமை ஆலோசகராக முகம்மது யூனுஸ் பதவியேற்றார்.[12]மாணவர் தலைவர்கள் இணைந்து தேசிய குடிமக்கள் கட்சியை நிறுவி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தனர்.
வாக்காளர்கள்
[தொகு]வங்கதேச தேர்தல் ஆணையத்தின் சனவரி 2026ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 127,711,793 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள் என அறிவித்தது.[7]
தேர்தல் அட்டவனை
[தொகு]| தேர்தல் நிகழ்வு | |
|---|---|
| தலைமை ஆலோசகரின் பிரகடனம் | 5 ஆகஸ்டு 2025 |
| தேர்தல் அட்டவனை வெளியிடு | 11 டிசம்பர் 2025 |
| வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் | 29 டிசம்பர் 2025 |
| வேட்பு மனு பரிசீலனை | 30 டிசம்பர் 2025 – 4 சனவரி 2026 |
| வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் | 20 சனவரி 2026 |
| சின்னம் ஒதுக்கீடு | 21 சனவரி 2026 |
| தபால் ஓட்டு வாக்களிக்க் | 22 சனவரி – 12 பிப்ரவரி 2025 |
| தேர்தல் பிரச்சாரம் துவங்கும் நாள் | 22 சனவரி 2026 |
| பிரச்சாரம் முடிவு நாள் | 10 பிப்ரவரி 2026 |
| வாக்களிக்கும் நாள் | 12 பிப்ரவரி 2026 |
| வாக்கு எண்ணிக்கை | 12 பிப்ரவரி 2026 |
| தனித் தொகுதிகளுக்கான தேர்தல் | 13 பிப்ரவரி 2026 |
கட்சிகள் & கூட்டணிகள்
[தொகு]இத்தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட வங்கதேச இடைக்கால அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.[13]
| கூட்டணி/கட்சி | சின்னம் | கொடி | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் | |||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| பொது | கூட்டணி | பொது | |||||||
| வங்காளதேச தேசியக் கட்சி+[14] | வங்காளதேச தேசியக் கட்சி | தாரிக் ரகுமான் | 289+2[b] | இல்லை | 300[15] | ||||
| மக்கள் அதிகார பரிசத் | நூருல் ஹக் நூர்[16] | 90 | 2 | ||||||
| வங்கதேச தேசிய மக்கள் கட்சி | AZM Fariduzzaman Farhad[b] | 23 | 1[b] | ||||||
| கனோசன்ஹட்டி அந்தோலன் | சோனாயத் சகி[16] | 17 | 1 | ||||||
| வங்கதேச தேசியவாத ஜனநாயக இயக்கம் | ரஷ்னா இமாம் | 8 | 1[b] | ||||||
| வங்கதேச புரட்சிகர தொழிலாளர்கள் கட்சி | கண்டேகர அலி அப்பாஸ் | 7 | 1 | ||||||
| வங்கதேச ஜாதியக் கட்சி | அந்தலிப் ரஹ்மான்[17] | 5 | 1 | ||||||
| ஜமாத் உலேமா-இ-இஸ்லாம் | உபயதுல்லா பரூக் | 4[14] | |||||||
| 11 கட்சி கூட்டணி | வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி | சபிக்கியூர் ரஹ்மான் | 223 | 215 | 298 | ||||
| வங்கதேச் கிலாபாத் மஜ்ஜிலிஸ் | மமுனுல் ஹக் | 34 | 23 | ||||||
| தேசிய குடிமக்கள் கட்சி | நகித் இஸ்லாம் | 32 | 30 | ||||||
| அமர் வங்காளதேச கட்சி | முஜிபுர் ரஹ்மான் மொஞ்சு | 30 | 3 | ||||||
| கிலாபத் மஜ்ஜிலிஸ் | அப்துல் பசித் ஆசாத் | 21 | 12 | ||||||
| வங்கதேச தொழிலாளர்கள் கட்சி | முஸ்டாபிஜர் ரஹ்மான் ஈரான் | 15 | இல்லை | ||||||
| வங்கதேச கிலாபத் அந்தலோன் | ஹபீபுல்லா மியாஞ்சி | 8 | 3 | ||||||
| வங்கதேச லிபரல் ஜனநாயக கட்சி | ஒலி அகமது | 6 | |||||||
| நிஜாம்-இ-இஸ்லாம் கட்சி | சர்வார் கமல் அஜீஸ் | 3 | 1 | ||||||
| வங்கதேச வளர்ச்சி கட்சி | அன்வருல் இஸ்லாம் ஜான் | 2 | |||||||
| ஜாதிய கணதந்திரிக் கட்சி | தஸ்மியா பிரதான் | 1 | |||||||
| வங்கதேச தேசிய ஜனநாயக முன்னணி | ஜாதிய கட்சி (எர்சாத்) | குலாம் முகமது காதர் | 195 | இல்லை | 206 | ||||
| வங்கதேச சாங்ஸ்கிரிதி முக்திஜோதி [Bangladesh | அபு முன்னா | 20 | 5 | ||||||
| வங்கதேச முஸ்லிம் லீக் | முகமது ரசீத் | 17 | 5 | ||||||
| ஜாதியக் கட்சி (மஞ்சு) | அன்வர் உசைன் மஞ்சு | 10 | 1 | ||||||
| ஐக்கிய ஜனநாயக முன்னணி | வங்கதேச பொதுவுடமைக் கட்சி | காஜி சஜ்ஜத் சாகீர் சந்தன் | 65 | 149 | |||||
| வங்கதேச சோசலிசக் கட்சி | பஸ்லூர் ரசீத் பிரோஸ் | 39 | |||||||
| வங்கதேச சோசலிசக் கட்சி (மார்க்சிஸ்ட்) | மசூத் ராணா | 29 | |||||||
| வங்கதேச ஜாதிய சமாஜ்தந்திரிக் தளம் | செரீப் நூருல் அம்பியா | 11 | |||||||
| கண முன்னணி | அமீரூல் நுஷத் | 5 | |||||||
| கிரேட்டர் சுன்னி கூட்டணி | வங்கதேச இஸ்லாமிய முன்னணி | எம். ஏ. மாட்டீன் | 26 | 64 | |||||
| வங்கதேச சுப்ரீம் கட்சி | சைபுதீன் அகமது அல் ஹசைனி | 19 | |||||||
| வங்கதேச இஸ்லாமிய முன்னணி | சையத் முகமது பகதூர் ஷா | 19 | |||||||
| வங்கதேச இஸ்லாமி அந்தலோன் | சையத் ரசூல் கரீம் | 253 | |||||||
| ராஷ்டிரிய சங்ஸ்கர் அந்தோலன் | இல்லை | இல்லை | ஹஸ்னத் குவாயிம் | 43 | |||||
| வங்கதேச இன்சானியத் பிப்லோப் | இமாம் ஹயத | 42 | |||||||
| ஜாதிய சமாஜ்தந்திரிக் தளம் (ரப்) | அப்துர் ரப் | 26 | |||||||
| கனோ கூட்டமைப்பு | சுப்ரதா சௌத்திரி | 19 | |||||||
| வங்கதேச காங்கிரஸ் | காஜி ரசூல் உசைன் | 18 | |||||||
| ஜனோதர் தளம் | முகமது சமீம் கமால் | 16 | |||||||
| அம்ஜனதர் தளம் | மியா மொசி உஸ்மான் | 15 | |||||||
| வங்கதேச குடியரசுக் கட்சி | முகமது அபு ஹனீப் இருதயம் | 12 | |||||||
| நாகரீக் ஒலிக்கோ | மக்முதர் ரஹ்மான் மன்னா | 11 | |||||||
| வங்கதேச தேசியவாத முன்னணி | எஸ். எம். அப்துல் கலாம் ஆசாத் | 8 | |||||||
| வங்கதேச சிறுபான்மை மக்கள் கட்சி | சுகீர்த்தி குமார் மண்டல் | 8 | |||||||
| சக்கர் கட்சி | முஸ்தபா அமீர் பைசல் | 7 | |||||||
| ஜாதிய சமாஜ்தாந்திரீக் தளம் | ஹசனுல் ஹக் இனு | 6 | |||||||
| வங்கதேச முஸ்லிக் லீக் (புல்புல்) | சேக் சுல்பிகர் புல்புல் சௌத்திரி | 6 | |||||||
| வங்கதேச ஜாதிய கட்சி (சிராஜ்) | சிராஜ் இஸ்லாம் | 3 | |||||||
| வங்கதேச கல்யாண் கட்சி | சையத் முகமது இப்ராகிம் | 2 | |||||||
| இஸ்லாமி ஒலிக்கியா ஜோதி | அப்துல் காதிர் | 2 | |||||||
| கனதந்திரிக் கட்சி | அரோஷ் அலி | 1 | |||||||
| வங்கதேச தேசிய அவாமி கட்சி (பாஷானி) | ஜெபல் ரஹ்மான் கானி | 1 | |||||||
| வங்கதேச சமத்துவ உரிமைக் கட்சி | சுஷாந்த் சந்திர பர்மன் | 1 | |||||||
தேர்தல் முடிவுகள்
[தொகு]தேர்தல் நாளுக்கு முன்னர் ஒரு வேட்பாளர் இறந்து விட்டார். தேர்தல் நடக்கையில் ஒரு வேட்பாளர் இறந்துவிட்டார். ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் பிணக்கு ஏற்பட்டுள்ளது. எனவே 297 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது[18]. இத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்காளதேச தேசியக் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல் 209 நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.[19]
கூட்டணி அல்லது கட்சிகள் வாரியாக முடிவுகள்
[தொகு]| கட்சி அல்லது கூட்டணி | இருக்கைகள் | |||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| General | ||||||||
| வங்காளதேச தேசியக் கட்சி+ | வங்காளதேச தேசியக் கட்சி | 209 | ||||||
| கண அதிகார பரிசத் | 1 | |||||||
| கனசன்ஹட்டி அந்தலோன் | 1 | |||||||
| வங்கதேச ஜாதிய கட்சி | 1 | |||||||
| வங்கதேச தேசியவாத ஜனநாயக இயக்கம் | 0 | |||||||
| வங்கதேச மக்கள் கட்சி | 0 | |||||||
| வங்கதேச புரட்சிகர தொழிலாளர் கட்சி | 0 | |||||||
| ஜாமியத் உலேமா இஸ்லாம் | 0 | |||||||
| மொத்தம் | – | |||||||
| 11 கட்சி கூட்டணி | வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி | 68 | ||||||
| தேசிய குடிமக்கள் கட்சி | 6 | |||||||
| வங்கதேச கிலாபத் மஜ்ஜிலிஸ் | 2 | |||||||
| கிலாபத் மஜ்ஜிலிஸ் | 1 | |||||||
| அமர் வங்கதேசக் கட்சி | 0 | |||||||
| வங்கதேச தொழிலாளர் கட்சி | 0 | |||||||
| வங்கதேச கிலாபத் அந்தோலன் | 0 | |||||||
| வங்கதேச லிபரல் ஜனநாயகக் கட்சி | 0 | |||||||
| நிஜாம்-இ-இஸ்லாம் கட்சி | 0 | |||||||
| வங்கதேச வளர்ச்சி கட்சி | 0 | |||||||
| ஜாதிய கணதந்திரிக் கட்சி | 0 | |||||||
| மொத்தம் | – | |||||||
| ஐக்கிய ஜனநாயக முன்னணி | வங்கதேச பொதுவுடமைக் கட்சி | 0 | ||||||
| வங்கதேச சோசலிசக் கட்சி | 0 | |||||||
| மார்க்சிஸ்ட் சோசலிசக் கட்சி | 0 | |||||||
| வங்கதேச ஜாதிய சமாஜ்தந்திரிக் தளம் | 0 | |||||||
| கண முன்னணி | 0 | |||||||
| மொத்தம் | – | |||||||
| வங்கதேச ஜனநாயக முன்ன்ணி | ஜாதிய கட்சி (எர்சாத்) | 0 | ||||||
| வங்கதேச சங்ஸ்கிருதிக் முக்திஜோதி | 0 | |||||||
| வங்கதேச முஸ்லிம் லீக் | 0 | |||||||
| ஜாதிய கட்சி (மஞ்சு) | 0 | |||||||
| மொத்தம் | – | |||||||
| கிரேட்டர் சுன்னி கூட்டணி | வங்கதேச இஸ்லாமி முன்னணி | 0 | ||||||
| வங்கதேச சுப்ரீம் கட்சி | 0 | |||||||
| வங்கதேச இஸ்லாமிய முன்னணி | 0 | |||||||
| மொத்தம் | – | |||||||
| வங்கதேச இஸ்லாமி அந்தலோன் | 1 | |||||||
| சகேர் கட்சி | 0 | |||||||
| வங்கதேச இன்சானியத் பிப்லோப் | 0 | |||||||
| ஜாதிய சமாஜ்தந்திரிக் தளம் (ரப்) | 0 | |||||||
| கண கூட்டமைப்பு | 0 | |||||||
| அம்ஜனதாதர் தளம் | 0 | |||||||
| வங்கதேச காங்கிரஸ் | 0 | |||||||
| நாகரீக் ஐக்கிய கட்சி | 0 | |||||||
| வங்கதேச தேசியவாத முன்னணி | 0 | |||||||
| வங்கதேச சிறுபான்மை மக்கள் கட்சி | 0 | |||||||
| வங்கதேச கல்யாண் கட்சி | 0 | |||||||
| இஸ்லாமி ஐக்கிய கட்சி | 0 | |||||||
| கணதந்திரீக் கட்சி | 0 | |||||||
| தேசிய அவாமி லிக் கட்சி (பாசனி) | 0 | |||||||
| மக்கள் தளம் | 0 | |||||||
| வங்கதேச் குடியரசுக் கட்சி | 0 | |||||||
| வங்கதேச முஸ்லிம் லீக் (புல்புல்) | 0 | |||||||
| வங்கதேச ஜாதிய கட்சி (சிராஜ்) | 0 | |||||||
| வங்கதேச சமத்துவ உரிமைக் கட்சி | 0 | |||||||
| சுயேச்சைகள் | 7 | |||||||
| காலி இடம் | 1 | |||||||
| மொத்தம் | 298 | |||||||
கோட்டவாரியாக முடிவுகள்
[தொகு]| கோட்டம் | இடங்கள் | வங்காளதேச தேசியக் கட்சி+ | ஜமாத்+ | இஸ்லாமி அந்தோலன் | பிறர் |
|---|---|---|---|---|---|
| டாக்கா கோட்டம் | 70 | 54 | 13 | 0 | 3 |
| சிட்டகாங் கோட்டம் | 58 | 49 | 5 | 0 | 2 |
| ராஜசாகி கோட்டம் | 39 | 28 | 11 | 0 | 0 |
| குல்னா கோட்டம் | 36 | 14 | 22 | 0 | 0 |
| ரங்க்பூர் கோட்டம் | 33 | 13 | 19 | 0 | 1 |
| மைமன்சிங் கோட்டம் | 24 | 18 | 4 | 0 | 1 |
| பரிசால் கோட்டம் | 21 | 18 | 2 | 1 | 0 |
| சில்ஹெட் கோட்டம் | 19 | 18 | 1 | 0 | 0 |
| மொத்தம் | 297 | 212 | 77 | 1 | 7 |
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Foizee, Bahauddin. "Bangladesh's Pivotal Election and Referendum Has a Date. Will Unrest Follow?". The Diplomat (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-12-17.
- ↑ Bangladesh 2026 elections explained in maps and charts
- ↑ "Timeline of past Bangladesh elections and the country's leaders". Al Jazeera. 8 February 2026.
- ↑ Soubra, Cherine (1986). The daily star. (c1986) (Thesis). Lebanese American University. doi:10.26756/th.1986.13.
- ↑ Billah, Masum (21 January 2025). "What is Bangladesh's Jamaat-e-Islami party? Could it lead the country next?". Al Jazeera.
- ↑ Singla, Anmol (3 February 2026). "127 million voters, 300 seats: A guide to Bangladesh's biggest elections since independence". Firstpost. https://www.firstpost.com/explainers/a-guide-to-bangladesh-election-2026-biggest-since-independence-explained-13975235.html.
- ↑ 7.0 7.1 "Elections in Bangladesh: 2026 Parliamentary Elections and National Referendum". International Foundation for Electoral Systems.
- ↑ "Sheikh Hasina wins fifth term in Bangladesh amid turnout controversy" (in en). Al Jazeera. 4 January 2024. https://www.aljazeera.com/news/2024/1/8/sheikh-hasina-wins-fifth-term-in-bangladesh-amid-turnout-controversy.
- ↑ "Sheikh Hasina escapes to India as turmoil rages in Bangladesh". RFI (in ஆங்கிலம்). 2024-08-06. Retrieved 2026-02-11.
- ↑ "Bangladesh Parliament dissolved, president's office says". Reuters. 6 August 2024. https://www.reuters.com/world/asia-pacific/bangladesh-parliament-dissolved-presidents-office-says-2024-08-06/.
- ↑ "Who is Khaleda Zia, Sheikh Hasina's rival and former Bangladesh PM who was on 'deathbed' a few months ago". The Economic Times. 6 August 2024. https://economictimes.indiatimes.com/news/international/world-news/who-is-khaleda-zia-sheikh-hasinas-rival-and-former-bangladesh-pm-who-was-on-deathbed-a-few-months-ago/articleshow/112308092.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst.
- ↑ "Who is Muhammad Yunus, the Nobel laureate leader of Bangladesh's interim government?". CNN. 9 August 2024. https://www.cnn.com/2024/08/07/asia/muhammad-yunus-bangladesh-government-intl-hnk/index.html.
- ↑ Bangladesh Interim Government Confirms Awami League Banned from Contesting in upcoming Elections
- ↑ 14.0 14.1 Kabir, Mohsin (14 January 2026). "বিএনপির ছাড় দেওয়া ১৩ আসন: ৭টিতে চ্যালেঞ্জের মুখে শরিকরা, ৬টি নির্ভার" (in bn). Bangla Tribune இம் மூலத்தில் இருந்து 14 January 2026 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20260114091130/https://www.banglatribune.com/politics/bnp/929910/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8-%E0%A7%AD%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87.
- ↑ "৯টি আসনে ধানের শীষের প্রতীক থাকছে না". Prothom Alo (in Bengali). 1 February 2026.
- ↑ (in bn)Prothom Alo. 12 January 2026 இம் மூலத்தில் இருந்து 13 January 2026 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20260113145903/https://www.prothomalo.com/bangladesh/district/apfgtxxiuw.
- ↑ 13th National Election results: Full division-wise list of winners
- ↑ After two decades, BNP set to form govt