2026 நேபாளப் பொதுத்தேர்தல்கள்
| |||||||||||||||||||||
| பதிவு செய்தோர் | 18,903,689[1] ( | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அறிவிக்கப்பட்டது | 98.6% | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளைக் காட்டும் நிறங்கள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
2026 நேபாளப் பொதுத் தேர்தல்கள் (2026 Nepalese general elections), நேபாள நாடாளுமன்றம் ஈரவை முறைமை கொண்டது. ஒன்று நேபாள பிரதிநிதிகள் சபை (கீழவை) மற்றொன்று நேபாள தேசிய சபை (மேலவை) ஆகும். கீழவையான நேபாள பிரதிநிதிகள் சபை 275 இடங்கள் கொண்டது. அதில் 165 இடங்களுக்கு நேரடித் தேர்தல் முறையிலும்; மீதம் உள்ள110 இடங்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் பெற்ற வாக்கு விகிதாசாரம் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடைபெறுகிறது.[2]
பின்னணி
[தொகு]நேபாளத்தில் 2025 செப்டம்பரில் நடைபெற்ற இசட் தலைமுறையினரின் தொடர் போராட்டங்களால் நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. இதனால் முன்னாள் நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி 2025 செப்டம்பர் 12 அன்று நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றார்.
வாக்களிக்கும் முறை
[தொகு]வாக்காளர்களுக்கு இரண்டு தனித்தனி வாக்குச் சீட்டுகள் தரப்படும். ஒரு வாக்குச் சீட்டு மூலம் நேபாள பிரதிநிதிகள் சபையின் 165 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்றொரு வாக்குச் சீட்டு மூலம் நேபாள நாடாளுமன்றத்தின் மேலவையான நேபாள தேசிய சபைக்கு 110 உறுப்பினர்களை, அரசியல் கட்சிகளின் விகிதாசார பிரதிநிதித்துவம் முறையில் (party-list proportional representation) உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏறத்தாழ 18.9 மில்லியன் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.[3] 68 அரசியல் கட்சிகளைச் சார்ந்த 3,400 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். [4]
1.89 கோடிக்கும் அதிகமான தகுதிபெற்ற வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 10,967 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நேரடித் தேர்தலில் 3,406 வேட்பாளர்களும், விகிதாச்சார முறையில் 3,135 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு கடந்த புதன்கிழமை முதல் 3 நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 60% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவர 2 நாளாகும் என்று தெரியவந்துள்ளது[5]
தேர்தல் அட்டவணை
[தொகு]| நாள் | நிகழ்வு |
|---|---|
| 6 அக்டோபர் 2025 | நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது |
| அமைச்சரவை தேர்தல் தேதியை அறிவித்தது | |
| 21 நவம்பர் 2025 | வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவு செய்ய இறுதி நாள் |
| 26 நவம்பர் 2025 | தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்ய இறுதி நாள் |
| 28–29 டிசம்பர் 2025 | விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான முதற்கட்ட மூடிய பட்டியலைக் கட்சிகள் சமர்ப்பிக்கும் இறுதி நாள் |
| 19 சனவரி 2026 | தேர்தல் நடத்தை நெறிகள் அமலாகும் நாள் |
| 20 சனவரி 2026 | முதற் கட்ட வாக்கு பதிவிற்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் |
| 23 சனவரி 2026 | முதற் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் நாள். |
| 3 பெப்ரவரி 2026 | விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான மூடப்பட்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடும் நாள். |
| 5 மார்ச் 2026 | தேர்தல் நாள் |
ஒரே கட்டமாக நடைபெற்ற இத்தேர்தலில் 60% வாக்களித்தனர். தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டது.
தேர்தல் முடிவுகள்
[தொகு]முழுமையான தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. செய்தித்தாள்களின் அடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகள் பின்வருமாறு:
மாகாணவாரியான முடிவுகள்
[தொகு]| மாகாணம் | மொத்த இடங்கள் |
வென்ற இடங்கள் | |||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி | நேபாளி காங்கிரஸ் | நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) | நேபாளி பொதுவுடமைக் கட்சி | ஷ்ரம் சங்ஸ்கிருதி கட்சி | இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | சுயேச்சைகள் | |||
| கோசி | 28 | 17 | 4 | 3 | 0 | 3 | |||
| மாதேஷ் | 32 | 30 | 1 | ||||||
| பாக்மதி | 33 | 31 | 1 | 0 | 1 | ||||
| கண்டகி | 18 | 14 | 2 | 1 | |||||
| லும்பினி | 26 | 21 | 2 | 1 | 2 | ||||
| கர்ணாலி | 12 | 1 | 5 | 1 | 4 | 1 | |||
| தூரமேற்கு | 16 | 10 | 3 | 3 | |||||
| மொத்தம் | 165 | 124 | 18 | 8 | 7 | 3 | 1 | 1 | |
வெற்றி
[தொகு]நேபாள பிரதிநிதிகள் சபையின் மொத்தமுள்ள 165 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி 124 இடங்களில் (மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல்) வென்று ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றுள்ளது. இக்கட்சியின் புகழ் பெற்ற இராப் இசைப் பாடகரும், 2025 நேபாள இசட் தலைமுறையினர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவரும், இராஷ்டிரிய சுதந்திரக் கட்சியின் வேட்பாளருமான பலேந்திர ஷா நேபாளப் பிரதம அமைச்சராகப் பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.[6]
குறிப்பிடத்தக்க தோல்விகள்
[தொகு]- இத்தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் நேபாள பிரதம அமைச்சர்கள்
- மாதவ் குமார் நேபாள் – நேபாளி பொதுவுடமைக் கட்சி
- கட்க பிரசாத் சர்மா ஒளி – நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)
தோல்வியுற்ற துணைப் பிரதம அமைச்சர்கள்
- ஈஷ்வர் பொக்கிரேல் - நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)
- கமல் தாபா - இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி
தோல்வியுற்ற மத்திய அமைச்சர்கள்
- ககன் குமார் தாபா - நேபாளி காங்கிரஸ்
- பிரதீப் பௌதால் - நேபாளி காங்கிரஸ்
- பிரிதிவி சுப்பா குரூங் - நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)
- தோல்வியுற்ற மாகாண முன்னாள் முதலமைச்சர்கள்
- கே. சி. குல் பிரசாத் - சுயேச்சை
- இராஜேந்திர பிரசாத் பாண்டே - நேபாளி பொதுவுடமைக் கட்சி
- சங்கர் பொக்கிரேல் - நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)
- திரிலோசன் பட்டா – நேபாளி பொதுவுடமைக் கட்சி
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "EC publishes final voters' roll with 18.9 million eligible voters". The Kathmandu Post (in English). Retrieved 2026-01-18.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Nepal elections 2026 highlights: Himalayan country votes to elect new PM, six months after Gen Z movement toppled Oli-led govt
- ↑ "Nepal election 2026: When is the vote and who are the main candidates?". BBC News (in ஆங்கிலம்). 2026-03-02. Retrieved 2026-03-02.
- ↑ "Will Nepal's long-standing nonalignment survive the first election after its Gen Z uprising?". Atlantic Council (in ஆங்கிலம்). 2026-02-06. Retrieved 2026-03-02.
- ↑ நேபாளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
- ↑ Rapper-turned-politician Balen Shah’s RSP heads for poll landslide in Nepal