2025 மியான்மர் நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு | Mw 7.7 |
---|---|
ஆழம் | 10 km (6 mi) |
நிலநடுக்க மையம் | 22°00′47″N 95°55′19″E / 22.013°N 95.922°E |
உரசுமுனை | சாகைங் பெயர்ச்சி |
வகை | படுகைக் கிடை நகர்வு |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | மியான்மர், தாய்லாந்து, தென்மேற்கு சீனா |
அதிகபட்ச செறிவு | IX (வன்முறை) |
பின்னதிர்வுகள் | 169+ பதிவுகள் கடுமையானது: Mww 6.7[1] |
உயிரிழப்புகள் | 4,430+ உயிரிழப்புகள், 5491+ காயம், 786+ காணாமல்போனோர் |

2025 மார்ச் 28 அன்று 12:50:54 மணிக்கு, மியான்மரின் சாகைங்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலைக்கு அருகில் இதன் மையம் இருந்தது. இந்தத் திருப்புப் பிளவுப்பெயர்ச்சி அதிர்வு அதிகபட்ச மாற்றியமைக்கப்பட்ட மெர்கல்லி அளவுமுறையில் IX என்ற மிகத்தீவிர அளவை எட்டியது.[2] இது 1912-இற்குப் பிறகு மியான்மரைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமும்,[3] மியான்மரின் நவீன வரலாற்றில் 1930 பாகோ நிலநடுக்கத்திற்குப் பிறகு இரண்டாவது மிக மோசமான நிலநடுக்கமும் ஆகும்.[4] இந்த நிலநடுக்கம் மியான்மரில் பரவலான சேதத்தையும் அண்டை நாடான தாய்லாந்தில் குறிப்பிடத்தக்க சேதத்தையும் ஏற்படுத்தியது. சீனாவின் யுன்னானிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் 4,430-இற்கும் மேற்பட்டோரும், தாய்லாந்தில் 14 பேரும் உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்,[5] 5491-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பேங்காக்கில் இடிந்து விழுந்த கட்டுமானத் தளம் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாங்காக் நகரம், அதன் ஆழமற்ற புவியியல் காரணமாக, தொலைதூரத்திலிருந்து வரும் நில அதிர்வு அலைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியது. மேலும் விழிப்புணர்வு இல்லாததால், நிலநடுக்கம் தொடர்பான தாக்கங்களுக்கு நகரம் அதிகம் பாதிக்கப்பட்டது.[6][7] 2025 மார்ச் 28 நிலவரப்படி, அதிகாரிகள் அவசரகாலநிலையை அறிவித்தனர், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[8][9] மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் பேரிடர் நிவாரணத்தில் சிரமத்தை அதிகரித்துள்ளது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ANSS . U.S. Geological Survey.
- ↑ ANSS . U.S. Geological Survey.
- ↑ "More than 140 dead in Myanmar earthquake, with tremors felt in Thailand: Live updates". CNN. 28 March 2025.
- ↑ Ledur, Júlia (28 March 2025). "Friday's quake is the deadliest to hit Myanmar in 95 years". The Washington Post. https://www.washingtonpost.com/world/2025/03/28/myanmar-quake-77-bangkok-thailand/#link-KQARML5TUJHK3NLDEBZYQBIS24.
- ↑ "Hundreds trapped under rubble of collapsed buildings as Myanmar earthquake death toll passes 1,600". BBC News. March 29, 2025. https://www.bbc.com/news/live/c4gex01m7n5t.
- ↑ "Earthquakes in Thailand—Is Bangkok at Risk?". www.verisk.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-09. Retrieved 2025-03-28.
- ↑ Warnitchai, Pennung; Sangarayakul, Chanet; Ashford, Scott A. (4 February 2000). "Seismic hazard in Bangkok due to long-distance earthquakes" (PDF). 12th World Conference on Earthquake Engineering.
- ↑ "Myanmar Earthquake LIVE Updates: 107 Dead, 350 Injured As Rescue Efforts Continue; Thailand PM Urges Calm". சிஎன்என்-ஐபிஎன். 28 March 2025. https://www.news18.com/world/myanmar-earthquake-live-updates-magnitude-death-toll-injuries-rescue-operation-aftermath-latest-news-liveblog-9278290.html.
- ↑ "Myanmar's military junta makes rare plea for help after powerful earthquake kills scores". CNN. 2025-03-28. Retrieved 2025-03-28.
- ↑ "Myanmar at a glance: Embroiled in civil war, now facing more devastation after powerful earthquake". AP News (in ஆங்கிலம்). 2025-03-28. Retrieved 2025-03-28.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் 2025 மியான்மர் நிலநடுக்கம் பற்றிய ஊடகங்கள்
This article incorporates public domain material from websites or documents of the United States Geological Survey.