2025 மகாராஷ்டிர நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள்
2025 மகாராஷ்டிர நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 233 நகராட்சிகளுக்கும் மற்றும் 127 பேரூராட்சிகளுக்கும் 2 மற்றும் 21 டிசம்பர் 2025 அன்று இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.[1] இத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டனர். சில உள்ளாட்சிகளில் ஒரு சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இத்தேர்தலில் 288 நகராட்சி & பேரூராட்சி தலைவர்களையும் மற்றும் வார்டு உறுப்பினர்களையும் தனித்தனி வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
22 டிசம்பர் 2025 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சியினர் 70% நகராட்சி & பேரூராட்சி தலைவர் பதவிகளையும் மற்றும் நகராட்சி & பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றினர். நகர்புற உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை பின்வருமாறு[2] [3][4]:
- பாரதிய ஜனதா கட்சி = 118
- சிவ சேனா (ஏக்நாத் சிண்டே) = 59
- தேசியவாத காங்கிரசு கட்சி (அஜித் பவார்) = 37
பிறர்
[தொகு]- பிற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் = 17
- சுயேச்சைகள் = 5
குறிப்பு
[தொகு]மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி கனிசமான நகர்புற உள்ளாட்சி தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது. உத்தவ் தாக்கரே தலைமையிலான உ.பா.தா கட்சி மற்றும் சரத் பவார் தலைமையிலான சரத் பவார் தேசியவாத காங்கிரசு கட்சிகள் மகாராட்டிராவின் அரை நகர்ப்புறங்களில் துடைத்து எறியப்பட்டது.