2025 நேபாள இசட் தலைமுறையினர் போராட்டம்


செப்டம்பர் 2025 இல், நேபாளம் முழுவதும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்றன, இவை இசட் தலைமுறை மாணவர்கள் மற்றும் இளம் குடிமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டன.[1] பரவலாக, இசட் தலைமுறையினர் போராட்டங்கள் என்று குறிப்பிடப்படும் இவை, பல்வேறு சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ததன் மூலம் தொடங்கின. ஆனால், இதன் அடிப்படைக் காரணம் நாட்டின் ஊழல், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் செல்வங்கள், அரசு நிதியினை தவறாகப் பயன்படுத்தியது ஆகியனவாகும்.[a][2][3] இந்தப் போராட்டமானது அரசின் நிர்வாகமின்மை, வெளிப்படைத்தன்மையின்மை ஆகிய பரந்த பிரச்சினைகளை உள்ளடக்கியதாக இருந்தது.[4][5][6][7] அரசு அதிகாரிகளுக்கு எதிரான வன்முறை, அரசு மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான கட்டிடங்களை சேதப்படுத்தியது என போராட்டங்கள் தீவிரமடைந்தன.
செப்டம்பர் 9,2025 இல், பிரதமர் கே. பி. சர்மா ஒலி, ஒரு சில அரசாங்க அமைச்சர்களுடன் பதவி விலகினார். மேலும் சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 13,2025க்குள் போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. [8][9]
பின்னணி
[தொகு]4 செப்டம்பர் 2025 இல் நேபாள அரசு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய விதிகளின் கீழ் பதிவு செய்யத் தவறியதற்காக டுவிட்டர், யூடியூப், லிங்க்ட்இன், ரெடிட், சிக்னல் மற்றும் சினாப்சாட், முகநூல், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களை மூட உத்தரவிட்டது.[6] வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் வெளிநாட்டு மின் சேவை வழங்குநர்கள் மீது புதிய நவீன சேவை வரி மற்றும் கடுமையான மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிகளை அமல்படுத்துவதற்கான ஒரு வழியாக பதிவு செய்வதற்கான தேவை உருவாக்கப்பட்டது.[10]
தவறான தகவல்
[தொகு]இந்திய ஊடகங்கள், குறிப்பாக வலதுசாரி ஊடகங்கள் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியுடன் (பிஜேபி) இணைந்து, போராட்டங்களை முடியாட்சி என்று சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 2008 இல் கலைக்கப்பட்ட நேபாள இந்து இராஜ்ஜியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்பட்டது. போராட்டங்களின் உண்மையான காரணங்களான ஊழல் மற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு சலுகைகள் காட்டுதல் ஆகியன மறைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.[11]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Why GenZ has taken over the streets in Nepal". BBC News. 9 September 2025. https://www.bbc.com/news/articles/crkj0lzlr3ro.
- ↑ "A year of corruption". The Record (in ஆங்கிலம்). 29 January 2021. Archived from the original on 15 November 2021. Retrieved 7 September 2025.
- ↑ "Nepal Gen Z Protests Live: Kathmandu streets wear deserted look, forces on alert after day-long protests". India Today (in ஆங்கிலம்). 8 September 2025. Retrieved 8 September 2025.
- ↑ "Gen Z protest in Kathmandu against corruption and ban on social media platforms". The Kathmandu Post (in ஆங்கிலம்). Retrieved 9 September 2025.
- ↑ "Gen Z youths stage protest at Maitighar against corruption, social media ban". The Himalayan Times (in ஆங்கிலம்). 8 September 2025. Retrieved 9 September 2025.
- 1 2 Gurubacharya, Binaj (4 September 2025). "Nepal blocks Facebook, X, YouTube and others for failing to register with the government". AP News (in ஆங்கிலம்). Retrieved 4 September 2025.
- ↑ Ellis-Petersen, Hannah (8 September 2025). "At least 10 people killed during protests against Nepal's social media ban" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2025/sep/08/nepal-bans-26-social-media-sites-including-x-whatsapp-and-youtube.
- ↑ "Nepal calm as first female prime minister takes charge after deadly protests". icirnigeria.org. 13 September 2025.
- ↑ (in hi)BBC News. 11 September 2025. https://www.bbc.com/hindi/articles/ckgqyq7q4geo.
- ↑ Chandra, Atul; Pokharel, Pramesh. "Nepal's Gen-Z uprising is about jobs, dignity – and a broken development model". People's Dispatch. Retrieved 10 September 2025.
- ↑ Adhikari, Deepak (13 September 2025). "নেপালের অভ্যুত্থান নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যা বয়ান হাজির করছে" [How Indian media is presenting false narratives on Nepal's uprising]. Prothom Alo (in Bengali).